லாட்ஜ்ஜில் ரூம் போட்ட ஹனிமூன் ஜோடி.. வாடகை பைக்கில் ஒரே ஜாலி.. திடீர்னு புது மனைவியை காணோம்.. ஓ காட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹனிமூனுக்கு கிளம்பும்போதே மகிழ்ச்சியுடன் சென்றார்கள் புதுமணத்தம்பதி.. சிரபுஞ்சி பகுதியில், நீர்வீழ்ச்சியை தம்பதி இருவரும் ஆசைதீர கண்டு களித்தனர்.. அதற்கு பிறகு, மணப்பெண்ணை காணவில்லை.. திடீரென மாயமாகிவிட்டார்.. மணமகன் நிலைமையோ அதற்கு மேல் பரிதாபத்தை தந்துள்ளது.. இது தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று தம்பதிகளின் குடும்பத்தினர் மத்திய பிரதேச அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.. என்ன நடந்தது?

மேகாலயாவிற்கு ஹனிமூன் சென்ற புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவியை காணவில்லை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Honeymoon meghalaya madhya pradesh

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி.. இவர் சோனம் என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தார்.. அவருடன்தான் கடைசிவரை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று முடிவெடுத்து கடந்த மே மாதம் 11ம் தேதி திருமணமும் செய்து கொண்டார்..


ஹனிமூன் தம்பதி

இதையடுத்து புதுமண ஜோடி, மேகாலயா மாநிலத்துக்கு ஹனிமூன் சென்றார்கள்.. ஊரெல்லாம் ஜாலியாக சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதற்காக, தலைநகர் ஷில்லாங்கில் ஸ்கூட்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, வலம் வந்தனர்.. அங்கிருந்து சிரபுஞ்சிக்கு சென்றிருக்கிறார்கள்... மழை பொழியும் ஊரை உற்சாகமாக சுற்றிப்பார்த்தனர்.. மே 24ம் தேதி, நோங்கிரியாட் கிராமத்தில் தங்கியிருந்த லாட்ஜ்ஜை காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டார்கள்..

ஆனால், இதற்கு பிறகு புதுமண தம்பதிகள் சொந்த ஊருக்கு வந்து சேரவில்லை.. அவர்களது செல்போனுக்கு குடும்பத்தினர் அழைக்க முயன்றபோது, தொடர்புகொள்ள முடியவில்லை.. இதனால் 2 பேருமே எங்கேயோ சிக்கிவிட்டார்கள் என்று குடும்பத்தினர் பதறிப்போனார்கள்.. 8 நாளைக்கு பிறகு போலீசில் புகார் தந்தனர்..

லாட்ஜ் வெள்ளை நிற ஆடை

இந்த புகாரின்பேரில், போலீசாரும் புதுமணத் தம்பதியை நோங்கிரியாட் பள்ளத்தாக்கு முழுவதும் தேடினார்கள்.. பிறகு அவர்கள் தங்கியிருந்த லாட்ஜ்ஜூக்கும் சென்றார்கள்.. அந்த லாட்ஜிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில், ஒரு இளைஞரின் உடல் பாதி அழுகிய நிலையில் கிடந்ததை கடந்த ஜூன் 2ம் தேதி கண்டுபிடித்தனர்.. அந்த நபரின் கையில் ராஜா என்று டாட்டூ குத்தப்பட்டிருந்தது... அப்போதுதான் அவர் புதுமாப்பிள்ளை ராஜா ரகுவன்ஷி என்று குடும்பத்தினர் உறுதி செய்தனர்...

சடலத்துக்கு பக்கத்திலேயே இளம்பெண்ணின் வெள்ளை நிற ஆடை, உடைந்துபோன செல்போன் கவர், மாத்திரைகளும் விழுந்து கிடந்தன.. . இதையடுத்து, ராஜாவின் மரணம் குறித்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், புதுமனைவி சோனமை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்..

அதுமட்டுமல்ல, லாட்ஜ் ஊழியர்கள், வாடகைக்கு பைக் தந்தவர்கள், தம்பதியை சுற்றுலாவுக்கு அழைத்து போன ஏஜென்ட்கள் என அனைவர் மீதும் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் சொல்கிறார்கள்.. லாட்ஜை காலி செய்த கொஞ்ச நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்திருப்பதால், மேற்கண்ட நபர்களை சந்தேகிப்பதாக குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

உள்ளூர்வாசிகள்

இதையடுத்து, அத்தனை பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. ராஜாவின் உடல் அழுகிவிட்டதால், மேகாலயாவிலேயே தகனம் செய்ய போலீசார் சொல்லி உள்ளனர்.. ஆனால், இதற்கு ராஜாவின் பெற்றோர் மறுத்து விட்டனர். போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக இந்தூருக்கு கொண்டு செல்வதாக கூறியிருக்கிறார்கள்.

ராஜாவின் உடலை புதிய அரிவாளால் வெட்டியிருக்கிறார்களாம்.. இவர் விழுந்து கிடந்த 25 கி.மீ தூரத்தில் அவர்களது வாடகை ஸ்கூட்டரும், தம்பதி பயன்படுத்திய ரெயின் கோட்டும் கிடைத்திருக்கிறது.... ஆள் அரவமற்ற பகுதியில் சடலம் கிடைத்திருப்பதால், சில உள்ளூர்வாசிகளுக்கும் இந்த கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறுகிறார்கள்.

சோனம் - நோன்பு

மே 23 ம் தேதி நோன்பு நாள்... புதுமணப்பெண் என்பதால் சோனத்தை சாப்பிட சொன்னதற்கு, நோன்பை கைவிட மாட்டேன் என்றாராம்.. மாமியாருக்கு கடைசியாக போன் செய்தபோது, நீர்வீழ்ச்சியை பார்க்க காட்டில் மலையேறிக் கொண்டிருப்பதாக சொன்னாராம்.. அதுதான் சோனம் பேசிய கடைசி வார்த்தை...

ராஜாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கிடைத்ததுமே, அடுத்தக்கட்ட விசாரணையில் போலீசார் இறங்க உள்ளதாகவும், அதற்குள் சோனத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் போலீசார் கூறியிருக்கிறார்கள்.. இந்த சம்பவம் வடமாநிலங்களில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+