இதுதான் குசும்பு! மரியாதையா கேட்குறீங்க, இந்தா பிடிங்க! ஆளுநர், அமித்ஷா பற்றி உதயநிதி சொன்ன வார்த்தை
சென்னை: மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த முறை அவர் அளித்த பேட்டி பரபரப்பை கிளப்பிய நிலையில் இந்த முறை வித்தியாசமான முறையில் மீண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் வைத்துள்ளார்.
மிக்ஜாம் புயலை தொடர்ந்து சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு.. தற்போது பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது. முக்கியமாக நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. இந்த புயல், வெள்ளம் காரணமாக சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளது.

மத்திய குழு ஆய்வு - நிவாரணம்: இதையடுத்து தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்க ரூ. 450 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இது போக சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் கால்வாய்களை 550 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு அரசு 4 ஆயிரம் கோடி ரூபாயை குறைந்தபட்சம் கேட்ட நிலையில், அதிகபட்சம் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறிய நிலையில் மத்திய அரசு வெறும் 450 கோடி ரூபாய் கொடுத்தது சர்ச்சையானது.
இந்த நிலையில்தான் மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விமர்சனம்: இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டியில்., மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்.. அவர்களிடம் நாங்கள் என்ன பிச்சையா கேட்கிறோம்?" நான் என்ன அவங்க வீட்டு அப்பன் காசையா கேட்கிறோம். மக்கள் கொடுத்த வரி பணத்தை தானே கேட்கிறோம் என்று பதில் அளித்திருந்தார்.
தமிழிசை பதிலடி: இதற்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக ஆதரவலர்கள் பலர் இணையத்தில் இதை விமர்சனம் செய்து இருந்தனர். தெலங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், அவங்க தாத்தா பதவியை, அவங்க அப்பன் பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவர் அப்படிதான் பேசுவார்
மீண்டும் உதயநிதி கிண்டல்: கடந்த முறை அவர் அளித்த பேட்டி பரபரப்பை கிளப்பிய நிலையில் இந்த முறை வித்தியாசமான முறையில் மீண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் வைத்துள்ளார். அதில், நான் மரியாதையை கம்மியா யாரையும் பேசலை. அது என் நோக்கமும் இல்லை. நான் வேண்டுமானால் வேறு மாதிரி.. வேறு வார்த்தையில் சொல்லட்டுமா? மாண்புமிகு ஆளுநரையுடன் அப்பாவுடைய காசை நாங்கள் கேட்கவில்லை.
மாண்புமிகு ஒன்றிய அமைச்சரின் அப்பாவுடைய காசை யாரும் கேட்கவில்லை. தமிழ்நாடு மக்கள் வரிப்பணத்தைதான் கேட்கிறோம். தமிழ்நாடு மக்கள் பாதித்து உள்ளார். அதனால் தமிழ்நாடு மக்கள் கட்டிய வரிப்பணத்தைதான் கேட்கிறோம், என்று உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய குழு பாராட்டு: நேற்று முதல்நாள் முதல் கட்ட ஆய்விற்கு பின் பேசிய மத்திய குழு. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செய்துள்ளது; மாநில அரசு எடுக்கும் முயற்சியில் நான் |மிகவும் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள மாநில அரசின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதால் மிகப்பெரிய வெள்ள சேதம் தடுக்கப்பட்டதாக மத்திய குழு தெரிவித்துள்ளது. அதில், செம்பரம்பாக்கத்தை உரிய நேரத்தில் நீர் திறந்துவிட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. சென்னை, புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் வடிகாலுக்கான சிறப்புத் திட்டம் தேவைப்படுகிறது; கனமழையின்போது பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க விரிவான நீண்டகால திட்டமிடல் தேவை என்று சென்னையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபின் மத்திய குழு பேட்டி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications