ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் கப்பல்கள் தவிப்பு! சென்னைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு வருமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் தவித்து வருவதால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரான் கட்டுப்பாட்டில்தான் ஹார்முஸ் ஜலசந்தி இருக்கிறது. இந்த ஜலசந்தியை ஈரான் அரசு திடீரென மூடிவிட்டது. இதன் வழியாகத்தான் ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது.

Hormuz Strait Crisis

தற்போது இந்த நீர் வழித்தடம் மூடப்பட்டுள்ளதால் வளைகுடா நாடுகளில் இருந்து ஆசிய நாடுகளுக்கு கப்பல் மூலம் கச்சா எண்ணெய்யை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை கடப்பதற்காக 700-க்கும் மேற்பட்ட கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன. கடலிலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்திற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வரும் 2 பிரம்மாண்ட கப்பல்களும் அங்கு அணிவகுத்து நிற்கின்றன.

மேலும் இந்தியாவுக்கு சொந்தமான 59 கப்பல்களும் அதில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாலுமிகளும் சிப்பந்திகள் 700 கப்பல்களில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் வரத்து குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு ரஷ்யா, கச்சா எண்ணெய் பீப்பாயை அனுப்ப தயார் நிலையில் இருக்கிறது. எனவே தமிழகம் உள்பட இந்தியாவுக்கு பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படாது என சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள 12 துறைமுகங்களில் இருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி வசதியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டய்னர் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இங்கிருந்து ஆடைகள், உணவு தானியங்கள், பதப்படுத்தப்பட்ட பொருள்கள், மருந்துகள், உதிரி பொருட்கள், இதர கருவிகள் உள்ளிட்டவை கொண்டு செல்வது தற்காலிகமாக தடைபட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆஅம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பள்ளி மாணவர்கள் 150-க்கும் மேற்பட்டோருடன் 700-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. விமான போக்குவரத்து ஒரு புறம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு, எண்ணெய் கப்பல்களின் இயக்கம் பாதித்துள்ளதால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உயர்வு ஏற்படும் என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் தொழில்துறை சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது இந்தியாிவன் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன. எனினும் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனடியாக உயர்த்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்தியாவில் 8 வாரங்களுக்கு தேவையான கச்சா, பெட்ரோலிய பொருட்கள் உள்ளனவாம். அதாவது 2 மாதங்களுக்குத் தேவையானவை இருக்கிறது. எனவே மற்ற நாட்களுக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து இந்திய அரசு ஆராய்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+