Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

25 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்.. சென்னையை பதம் பார்த்த வெயில்! இது டிரைலர்தான்.. இனிதான் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று மட்டும் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. மதுரையில் மட்டும் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இதில் சென்னையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அதிகப்பட்ச வெயில் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை முடிந்து மார்ச் மாதம் தொடங்கியதுமே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கியது போல வெயில் வாட்டி வதைத்தது. எனினும் தென் தமிழகம் மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இடையிடையே மழை பெய்தது.

Sun Temperature Chennai

அனல் காற்று

இதனால் ஆரம்பத்தில் வெளுத்து வாங்கிய வெயிலால், பரிதவித்த மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். காலையில் இருந்து மதியம் வரை வெயில் கொளுத்தியபடியும், மதியத்திற்கு பிற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மழை பெய்தபடி இருந்தது. குறிப்பாக தென் தமிழகமான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் தொடர்ச்சியாக விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் வெயில் ஓரளவு தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. நேற்றும் தமிழகத்தின் பல இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெளியில் சென்றாலே வெப்பம் தகிக்கிறது. மதியத்திற்கு பிறகு வீசும் அனல் காற்றால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமமடைந்தனர். தர்பூசணி, கரும்பு ஜூஸ், இளநீர், குளிர்பானங்களை குடித்து தாகம் தனித்து வருகிறார்கள்.

25 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கொளுத்திய வெயில்

நேற்று மட்டும் தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெப்பம் பதிவானது. சேலத்தில் 103.64, வேலூரில் 103.46, ஈரோடு 103.28, சென்னை மீனம்பாக்கம் 102.56, தர்மபுரி 102.2, கரூர் 102.2, திருத்தணி 100.4, கோவை 100.4 என 10 இடங்களில் வெப்பநிலை பதிவானது. நெல்லையில் அதிகபட்சமாக வண்ணாரப்பேட்டையில் 99 டிகிரி வெயில் பதிவானது.

இதில் சென்னையை பொறுத்தவரை 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் 102.56 டிகிரி வெயில் பதிவாகியது. கடந்த 2000 ஆண்டில் சென்னையில் அதிகபட்சமாக 102.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதனையடுத்து நேற்று தான் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ஏப்ரல் - மே மாதங்களில் தான் அக்னி வெயில் அதன் கோரமுகத்தை காட்டும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்ட நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் வெயில் இன்னும் உக்கிரம் காட்டும் எனத்தெரிகிறது. டிரைலரே இப்படி இருக்கிறது என்றால் மெயின் பிக்சர் எப்படி இருக்குமோ என கதி கலங்கும் அளவுக்கு சென்னையில் வெயில் கோர தாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளது. சென்னை மட்டும் இன்றி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.

அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

முன்னதாக வானிலை மையம் கூறுகையில், இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 1 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

2 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று வெயில் எப்படி?

அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். 31-03-2025 முதல் 02-04-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2 - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 29-03-2025 மற்றும் 30-03-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையில் இன்று (30-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+