கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர்
சென்னை: கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாரபட்சமாக செயல்படுவதாகவும், அவரை மாற்றம் செய்வேண்டும் என்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பேசி இருந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் கரூர் எஸ்.பி-யை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்ட காவல்துறை எஸ்.பிக்களை இடமாற்றம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இந்த நான்கு மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் எஸ்பியாக டி.என்.ஹரிகிரண் பிரசாத், ஈரோடு எஸ்பியாக டி.வி.கிரண் ஸ்ருதி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் எஸ்.பியாக சுஜித் குமார், விருதுநகர் எஸ்.பியாக என்.ஸ்ரீநாதா ஆகியோரை நியமித்து தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. இதையடுத்து, இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்த ஜோஸ் தங்கையா மாற்றம் செய்யப்பட்டு, ஐபிஎஸ் அதிகாரி ஹரிகிரண் பிரசாத் கரூர் மாவட்ட எஸ்.பி-யாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. ஹரி கிரண் பிரசாத் தற்போது சென்னை பெருநகர காவல் ஆணையகரத்தில் துணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.
இதே போல சென்னை காவல் தலைமையகத்தில், தீவிரவாத தடுப்பு பிரிவில் எஸ்.பியாக பணியாற்றி வரும் கிரண் சுருதி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மேற்கு போக்குவரத்து பிரிவில் துணை ஆணையராக பணியாற்றி வரும் சுஜித் குமார், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சைபர் கிரைம் பிரிவில் துணை ஆணையராக பணியாற்றி வரும் ஸ்ரீநாதா, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
கரூரில் இன்று பிற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்றும் அவரை இதுவரை மாற்றம் செய்யவில்லை என்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசி இருந்த நிலையில், கரூர் எஸ்.பி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், "கடந்த 5 ஆண்டுகளாக ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வரும் கரூர் மாவட்ட ஆட்சியரையும், காவல் கண்காணிப்பாளரையும் மாற்ற வேண்டும். அதிமுக உறுப்பினர்கள் பலர் மீது கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு பொய் வழக்குகளை போட்டு சிறைக்கு அனுப்பி இருக்கிறார்கள். பாஜக தொண்டர்களுக்கு தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
அண்ணாமலையைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என்று அதிமுக எம்.பி இன்பதுரை வலியுறுத்தி இருந்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்தது போல கரூரிலும் வாக்காளர்களை அடைத்து வைக்க ஏற்பாடு நடந்து வருவதாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் அரசு செலவில் விளம்பரம் வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
-
செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில்.. தவெக வேட்பாளருக்கு புது சிக்கல்.. இதை கவனிச்சீங்களா.. போச்சே -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
10 நாள்தான் டைம்! வீடு வீடாக போய் ஓட்டு கேளுங்க! நீலாங்கரை வீட்டுக்குள் இருந்தபடியே விஜய் அறிவுரை -
இனிகோவுக்கு WFH தெரியாது.. உங்க வீட்டுக்கே வருவாரு.. விஜய் தொகுதியில் இறங்கி அடித்த உதயநிதி -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
"மொத்தம் 1.4 கோடி பேர்".. தமிழகத்தில் தெலுங்கு பேசும் வாக்காளர்கள் எத்தனை பேர்? முழு டேட்டா -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
நிலம் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஹென்றி சொன்ன இந்த மேஜர் விஷயத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க -
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு!












Click it and Unblock the Notifications