Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா... வேலைக்காரியுடன் ஜாலியாக இருந்த மனோஜ் - முடிவில் ஆப்பு

வீட்டுக்காரம்மா லீவுக்கு ஊருக்கு போயிட்டான்னு வேலைக்காரி கிட்ட வச்சிக்கிட்டது வம்பா போயிருச்சு மனோஜுக்கு. வீடியோ எடுத்து வச்சு பணம் கேட்டு மிரட்டி அழ வச்சிட்டாளே. சென்னை திருவான்மியூரில்தான் இந்த கூத்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைவிக்கு துரோகம் செய்ய நினைக்கும் கணவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாகவே உள்ளது. சின்னவீடு படத்தில் ஜாக்கிரதை ஜாக்கிரதை என்று ஒரு பாட்டு வரும் மனைவி இருக்கும் போதே பக்கத்து வீட்டு பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கும் ஆண்களைப் பற்றி எச்சரித்து இருப்பார் பாக்யராஜ். அதே போல ஒரு சம்பவம்தான் சென்னையில் நடந்துள்ளது.

கோடை விடுமுறைக்கு மனைவி குழந்தைகள் ஊருக்கு போன உடனே என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்று ஜனகராஜ் பாணியில் என்ஜாய் செய்யும் ஆட்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படி வீட்டு வேலை செய்ய வந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த நபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டப்பட்ட சம்பவம் திருவான்மியூரில் நடந்துள்ளது. சபலபுத்தியால் சொந்த பந்தங்களிடம் மானத்தை இழந்து வேலைக்காரியிடம் பணத்தையும் இழந்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இது மனோஜ் குமார் கதை

இது மனோஜ் குமார் கதை

மிரட்டலுக்கு ஆளான நபரின் பெயர் மனோஜ் குமார். இவர் திருவான்மியூரில் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களின் வீட்டில் தங்கி சித்திரவள்ளி என்ற பெண் வேலை செய்து வருகிறார்.

 ஊருக்குப் போன மனைவி

ஊருக்குப் போன மனைவி

கோடை விடுமுறை காலம் என்பதால் மனோஜ்குமாரின் மனைவி தனது குழந்தைகளுடன் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மனோஜ்குமாரின் பார்வை சித்திரவள்ளி மீது விழுந்துள்ளது. நெருக்கம் அதிகரிக்கவே உல்லாசமும் அனுபவித்துள்ளனர்.

 சித்திரவள்ளியும், ஜீவாவும்

சித்திரவள்ளியும், ஜீவாவும்

அந்த நேரத்தில் அங்கு வந்த ஜீவா என்ற நபர், தான் சித்திரவள்ளியின் உறவினர் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டான். உங்களின் தொடர்பை அம்பலப்படுத்தி விடுவேன் என்று கூறி மிரட்டி பணம் கேட்டுள்ளான். 20ஆயிரம் பணமும், 2 லட்சம் செக் ஆகவும் மனோஜிடம் வாங்கிக்கொண்டு கூடவே சித்திரவள்ளியையும் அழைத்துக்கொண்டு சென்றான்.

இடியும் மின்னலும்

இடியும் மின்னலும்

அதோடு தொலைந்தது சனியன், தப்பித்தோம் என்று பெருமூச்சு விட்ட மனோஜூக்கு அடுத்த இடி இறங்கியது. செல்போனில் வந்த அழைப்பை எடுத்து பேசிய மனோஜிடம் பணம் கேட்டு மிரட்டியது வேறு யாருமல்ல கள்ளத்தனமாக உறவில் ஈடுபட்ட சாட்சாத் சித்திரவள்ளியேதான்.

 குரூப்ல போட்ருவேன்

குரூப்ல போட்ருவேன்

நாம் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோ இருப்பதாகவும், பணம் ஒரு லட்சம் தராவிட்டால் வீடியோவை வாட்ஸ்அப் குரூப்பில் அனுப்பிவிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறாள். அதிர்ச்சியடைந்த மனோஜூக்கு அப்போதுதான் உறைத்தது.

 போலீஸுக்கு ஓடினார்

போலீஸுக்கு ஓடினார்

சித்திரவள்ளியும் வீடியோ எடுக்க உடந்தையாக இருந்து பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவள் என்று புரிந்து கொண்டார். உடனே திருவான்மியூர் போலீஸ் ஸ்டேசனில் சென்று புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும், போலீசார் சித்திரவள்ளியையும், ஜீவா என்பவரையும் தேடி வருகின்றனர்.

கப்சிப்னு இருந்தா நல்லது!

கப்சிப்னு இருந்தா நல்லது!

ஒரு நிமிட சபலம் பணத்தையும், மானத்தையும் வாங்கி விட்டது. மனைவிக்கு துரோகம் செய்து விட்டு கள்ளத்தொடர்பு வைக்க நினைக்கும் ஆண்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+