வீட்டு வட்டி தள்ளுபடி.. 6,496 பேருக்கு பம்பர் சர்ப்ரைஸ்.. விஜய் போட்ட உத்தரவு! யாருக்கெல்லாம் லாபம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு அல்லது மனை வாங்கியிருக்கிறீர்களா? தவணைக் காலம் முடிந்தும் முழுத் தொகையை கட்ட முடியாமல் விற்பனைப் பத்திரம் கிடைக்காமல் தவிக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வந்திருக்கிறது. நிலுவை தொகையை செலுத்த முடியாமல் தவிக்கும் ஒதுக்கீடுதாரர்களுக்கு சிறப்பு வட்டி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதலமைச்சர் விஜய் பிறப்பித்துள்ளார். இதன்மூலம் சுமார் 6,496 பேர் பயன்பெற உள்ளனர். யாரெல்லாம் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்?

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு அல்லது வீட்டுமனை வாங்குவதற்கு இருக்கும் ஒரு கட்டண முறைதான் தவணைக் கொள்முதல் திட்டம். இதில் வாங்குபவர்கள் மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்த வேண்டியதில்லை.

Housing Board

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்

முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்திவிட்டு, மீதமுள்ள தொகையை மாதந்தோறும் தவணையாக செலுத்தலாம். இந்த தவணை காலம் திட்டத்தைப் பொறுத்து மாறுபடும். இதனால் ஒரே நேரத்தில் பெரிய தொகையைத் திரட்ட முடியாத நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களும் சொந்த வீடு வாங்கும் வாய்ப்பை பெறுகிறார்கள்.. முழுத் தொகையையும் வட்டியுடன் சேர்த்து செலுத்தி முடித்த பிறகு, வீட்டுக்கான விற்பனைப் பத்திரம் வழங்கப்படும்.

இப்போது விஜய் அறிவித்துள்ள சலுகை

ஆனால் இந்த திட்டத்தில் வீடு, மனை வாங்கிய பலரும் தவணைக் காலம் முடிந்த பிறகும் முழுத் தொகையையும் செலுத்த முடியாமல் இருக்கிறார்கள். முக்கியமாக நிலுவை தொகையுடன் சேர்ந்து அபராத வட்டியும் அதிகரிப்பதால் அவர்களால் பணத்தை செலுத்தி முடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சிலர் தவணைக் காலம் முடிந்த பிறகும் முழுத் தொகையையும் செலுத்த முடியாமல் உள்ளனர்.

அந்தவகையில், பணம் கட்டி முடித்ததற்கான விற்பனை பத்திரத்தையும் பெற முடியாமல் சுமார் 6,496 பேர் தவித்து வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்குத்தான் தற்போது சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் வட்டி தள்ளுபடி வழங்கும் அறிவிப்பு 2026-2027ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின்போதே சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.

வட்டிகள் தள்ளுபடி

இந்த சலுகையின்படி, 31.03.2026-க்குள் தவணைக் காலம் முடிவடைந்த திட்டங்களில் நிலுவை தொகையை செலுத்தாமல் இருக்கும் ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறலாம். ஆனால் இங்கே நிலுவையில் உள்ள தொகையை ஒரே தவணையாகச் செலுத்துபவர்களுக்குத்தான் இந்த சலுகை கிடைக்கும்.

அப்படி ஒரே தவணையாக பணத்தை செலுத்தும்போது 3 வகையான வட்டி சலுகைகள் வழங்கப்படும்.

முதலாவதாக, நிலுவைத் தொகைக்கு விதிக்கப்பட்ட அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். இரண்டாவதாக, வட்டி முதலாக்கத்தின் மீது கணக்கிடப்பட்ட வட்டியும் தள்ளுபடி செய்யப்படும். மூன்றாவதாக, நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்துக்காக வசூலிக்கப்படும் தொகைக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாதங்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும். இந்த சலுகையை பயன்படுத்தி நிலுவைத் தொகையை செலுத்துபவர்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கப்படும்.

ஓராண்டு மட்டுமே அவகாசம்!

இந்தச் சிறப்புத் திட்டம் ஓராண்டு காலத்துக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 6,496 ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் வீட்டுவசதி வாரியத்துக்கு சுமார் 92.39 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஒதுக்கீடுதாரர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு வட்டிச் சலுகையின் மதிப்பு மட்டும் 18.45 கோடி ரூபாய்.

நீண்ட காலமாக வட்டி சுமையால் விற்பனைப் பத்திரம் கிடைக்காமல் தவித்தவர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு பெரிய நிம்மதியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+