'அடேய் பேதில போவான்'.. 'நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்லே'.. கல்யாண பத்திரிக்கையில் மணமகள் தந்த சர்ப்ரைஸ்
சென்னை: கல்யாணத்திற்கு பத்திரிக்கை அடிப்பதில் பலரும் புதிய முறைகளை கடைபிடிக்கிறார்கள். வித்தியாசமான கல்யாணப் பத்திரிகைகள் தான் இப்போது டிரெண்டாகிறது. இதற்காக புதிய முயற்சிகள், கவனம் ஈர்க்கும் நடவடிக்கைகளை மணமக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். விநோதமான சிந்தனைகளில் கல்யாண பத்திரிக்கை அடித்து ஒரு தம்பதி கலக்கி உள்ளது. அதனை பற்றி பார்ப்போம்.
வாழ்வில் ஒருமுறை மட்டுமே நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்று என்றால் அது திருமணமும் கூட. வெகு சிலருக்கு இரண்டாவது முறை நடைபெறும். ஆண் பெண் இணையும் இந்த இணையர் விழாவை, மணப்பெண், மணமகன் இருவருமே வித்தியாசமான முறையிலும், அதே நேரத்தில் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள்.

கல்யாணத்தில் பத்திரிக்கை தொடங்கி, திருமணத்திற்கு உறவினர்களை அழைக்கும் முறை, திருமண போஸ்டர், பிளக்ஸ் பேனர்கள், ஃபிரி வெட்டிங் போட்டோ ஷூட், போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட், நிச்சயதார்த்தம், சாப்பாடு, மண்டபம், ஹனிமூன் வரை வித்தியாசமாகவும், மறக்க முடியாத வகையிலும், மகிழ்ச்சியான நினைவுகளாகவும் இருக்க வேண்டும் என்றும் புதுமணத் தம்பதிகள் விரும்புகிறார்கள்.
தற்போது அண்மைக் காலத்தில் கல்யாண பத்திரிக்கையை பொறுத்தவரை மிகவும் வித்தியாசமான ரசனையில் உருவாக்குகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதார் கார்டு வடிவில் கல்யாண பத்திரிக்கைகள் வெளியானது. அடுத்ததாக போலீஸ் ஸ்டேசனில் கைதாவது போல் வித்தியாசமான முறையில் கல்யாண பத்திரிக்கை வந்தது. '
இதேபோல் பிளக்ஸ் பேனரிலும் வித்தியாசனமான முறையில் வைக்கிறார்கள். நாளிதழ் போன்று வித்தியாசமான முறையில் பிளக்ஸ் பேனரை வடிவமைக்கிறார்கள். அதில் நாளிதழில் வரும் தலைப்புச் செய்தி, விளையாட்டு செய்தி போன்ற வாசகங்களுடன், மணமகன், மணமகள் மற்றும் நண்பர்கள் படங்களை குற்றவாளிகள் போன்றும் வடிவமைத்து பேனர் ஒட்டுகிறார்கள். இப்படி பல்வேறு வகையான பேனர்கள் , கல்யாண பத்திரிக்கைகள் வலம் வருகிறது..
எப்படி எல்லோம் யோசிக்கிறாங்க.😂 pic.twitter.com/J5P2boCWDe
— கல்கி குமார் (@kalgikumaru) September 3, 2024
அந்த வகையில் ஒரு கல்யாண பத்திரிக்கை எப்படி இருக்கிறது என்றால் உள்ளே உள்ள கவரை வெளியே இழுக்க இழுக்க, மணமகள் புகைப்படம் நகருகிறது.மணமகள் புகைப்படம் இறுதியாக மணமகனின் அருகில் போய் நிற்கிறது. வித்தியாசமான இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த கல்யாண பத்திரிக்கை தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications