விவேக்கிற்கு ரூட் போட்டு கொடுத்த பிரபலம்! "சின்ன கலைவாணர்" உருவானது இப்படித்தான்! வெளிவராத சீக்ரெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விவேக் சின்ன கலைவாணராக உருவாக காரணமாக இருந்த நபர் யார் தெரியுமா?

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வி.சேகர் பேட்டி பார்த்திட்டிருந்தேன். உண்மையில் 90களின் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்னு சொன்னா வி.சேகர் தான். பாக்யராஜிடம் தொழில் கற்று படிப்படியாக முன்னேறி தமிழ்க் குடும்பங்களில் நடக்கும் பாசப் போராட்டங்களையும், குடும்பச் சிக்கல்களையும், துரோகங்களையும் படத்துக்குப் படம் சுவாரசியமாக கொடுத்திருந்தார்.

How Actor Vivek become Chinna Kalaivanar

அவர் பேட்டியில் ரொம்ப ஆச்சர்யப்படுத்திய விஷயங்கள் பல இருந்தன. இந்தியன் படத்தோடு இவரது 'வீட்டோடு மாப்பிள்ளை' படமும் ஒரு மாத இடைவெளியில் ரிலீசாகுது. இந்தியன் படத் தயாரிப்பாளர் ரத்னம் இவரைத் தேடி வந்து படம் பண்ணச் சொல்லி கேட்கிறார். இந்தியன் படத்தை விட வி.சேகருக்கு இண்டஸ்ட்ரியில் மார்க்கெட் வேல்யூவும் லாபமும் அதிகம்னு சொன்னது சேகரையே ஆச்சர்யப்படுத்தி இருக்கு.

கலெக்ஷனில் இந்தியனின் வசூல் கூட இருந்தாலும் பட்ஜெட்டில் வி.சேகரின் படம் குறைவானது என்பதால் லாபம் சேகர் படம் தான். எஜமான் படம் ரிலீசான போது ரஜினி ஒரு டிஸ்டிரிபியூட்டரிடம் வசூல் பற்றி கேட்கிறார். "படம் வெற்றி. நல்லா ஓடிட்டிருக்கு" எனச் சொல்ல "வேறு என்ன படம் நன்றாக ஓடுது?"ன்னு ரஜினி கேட்க, "வரவு எட்டணா செலவு பத்தணா" படம் நூறு நாளைக்கு மேலே ஓடுதுன்னு வினியோகஸ்தர் சொல்கிறார்.

ரஜினியும் அந்தப் படம் ஏன் அதிகமாக ஓடுகிறது என விசாரிக்க எல்லா தியேட்டர்களிலும் ஆட்டோக்காரர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்ப்பதாக செய்தி கிடைக்கிறது. அதற்கு காரணம் வடிவேலு செய்த அந்த 'ஆட்டோக்கார பீட்டர்' கேரக்டர்.

உடனே ரஜினி அடுத்தப் படத்தில் ஆட்டோக்காரராக நடிக்க தீர்மானிக்க 'பாட்சா' கதையின் நாயகன் மாணிக்கம் ஆட்டோ டிரைவர் என உருவானது.

வடிவேலு சேகரை சந்தித்து 'தேவர் மகனில் நடித்திருக்கிறேன். பாருங்கள்' என வாய்ப்பு கேட்க, தன் படத்தில் சேகரும் நடிக்க வைக்க வடிவேலு காலை, மாலை, இரவு என காலை தொட்டு விட்டு, தொட்டு விட்டு போவாராம். அப்போது கவுண்டமணி "இவன் பண்றது நடிப்பாத் தெரியுது. உன் காலை வாரி விடப்போறான் பாரு"ன்னு சொல்ல அது போலவே பின்னாட்களில் "சேகர் கம்பெனில கவுண்டமணியெல்லாம் தூக்கியாச்சு. இனி நான் தான் அங்கே.." எனச் சொன்னதும் நடந்த உண்மை.

முதன் முதலில் கார் வாங்கிய வடிவேலு சேகரை ஏற்றிக்கொண்டு டிரைவரிடம் "அந்த கவுண்டமணி காரை மோதுகிற மாதிரி வேகமாகப் போய் குத்தி நிறுத்துய்யா"ன்னு சொல்ல அதேப்போல் வேகமாக வந்த வடிவேலு காரைப் பார்த்து கவுண்டமணி கார் டிரைவரெல்லாம் பயந்து போய் தெறித்து ஓடினார்களாம்.

சேகர் தான் எவ்வளவு பேரின் தலையெழுத்தை மாற்றி இருக்கிறார். விவேக், நடிகர் வடிவேலுவை விட நான் வளரவேண்டும் என வாய்ப்பு கேட்க அதேப்போல் வாய்ப்புக் கொடுத்து எம்.ஆர்.ராதா பாணியை கடைப்பிடி என அறிவுரை கொடுக்க விவேக் 'சின்னக்கலைவாணராக' வந்திருக்கிறார். வடிவேலுவுடன் நடிக்கவே மாட்டேன் என அடம்பிடித்த சரளா, பின் வடிவேலுவோடு சினிமாவில் ஜோடியாகி ரோமியோ-ஜூலியட்டாக நிஜ வாழ்விலும் ஆனதாக சேகர் சொல்லும் போது வடிவேலு-சரளா காமெடிகளின் ஒரு உயிரோட்டம் அப்போது புரியவில்லை.... இப்போது புரிகிறது.

ஜனகராஜ்- நிழல்கள் ரவி நடித்த 'நான் புடிச்ச மாப்பிள்ளை' படம் சிவாஜி - விஜயகாந்த் நடிக்க எழுதி சிவாஜி உடல் நலமில்லாமல் எல்லாம் மாறிப்போய் கடைசியில் ரவி- ஜனகராஜ் நடிக்க வெளிவந்திருக்கிறது. நல்ல சிவாஜி-கேப்டன் படம் மிஸ்ஸிங்கானது நமது துரதிர்ஷ்டம். படங்களில் மனித மனங்களை அலசிய சேகர் இந்தப் பேட்டியில் நடிகர்களின் இருட்டு மனங்களை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் வளர்ந்திருக்க வேண்டிய இயக்குனர். இவர் காமெடியைப் பார்த்து சிரிக்காத தமிழர்களை எண்ணிவிடலாம்... இவ்வாறு செல்வன் அன்பு என்பவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+