Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோட்டையில உக்காரல.. ஊர் ஊராக சுற்றினோம்! வேளாண் பட்ஜெட் தயாரானது எப்படி? அமைச்சர் எம்ஆர்கே விளக்கம்

"கோட்டையில் அமர்ந்து கொண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையை வடிவமைப்பது ஏற்புடையது அல்ல என்பதை அறிந்தோம்."

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோட்டையில் அமர்ந்துகொண்டு வேளான்மைக்கான நிதிநிலை அறிக்கையை தயாரிக்கக்கூடாது என்பதால் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று விவசாயிகள், வியாபாரிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரித்ததாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், "வேளாண்மையைத் தமிழர்கள் தொன்று தொட்டுப் பேணி வந்தார்கள் என்பதை நம் இலக்கியங்கள் சான்றுகளாக முன்வைக்கின்றன. சங்க இலக்கியங்களில் வேளாண்மை குறித்த எண்ணற்ற குறிப்புகள் இருக்கின்றன.

உழவு பற்றி ஓர் அதிகாரத்தையே ஒதுக்கினார் திருவள்ளுவர். 'பருவத்தே பயிர் செய்' என்றும், 'பூமி திருத்தி உண்' என்றும், ஆத்திச்சூடி அறிவுறுத்துகிறது. 'நீரகம் பொருந்திய ஊரகத்து இரு' என்று கொன்றைவேந்தன் குறிப்பிடுகிறது.

வேளாண்மை வாழ்வியல்

வேளாண்மை வாழ்வியல்

நிலப்பரப்பையொட்டி தமிழர்கள் வாழ்வியல் முறையை வகுத்துக்கொண்டார்கள் என்பதை இலக்கியங்கள் இயம்புகின்றன. வெளிநாட்டு அறிஞர்களும் வேளாண்மையைப் பாராட்டி மகிழ்கின்றனர். வேளாண்மையே மனிதன் மேற்கொண்ட முதல் தொழில் என்பதை வரலாறு மட்டுமல்ல. மானுடவியலும் குறிப்பிடுகிறது. 'வேளாண்மை என்பது பணி அல்ல, அது வாழ்க்கை முறை' என்று லூயி தாம்சன் குறிப்பிடுகிறார்.

மனிதர்களைப் பண்படுத்துவது

மனிதர்களைப் பண்படுத்துவது

உன்னதமான அறிவியல்' என்று முதல் அகராதியைத் தொகுத்த டாக்டர் சாமுவேல் ஜான்சன் கூறுகிறார். இயற்கை வேளாண்மையை முன்வைத்த மசனோபு ஃபுகாகா (Masanobu Fukuoka) 'வேளாண்மையின் நோக்கம் பயிர்களை வளர்ப்பதல்ல. மனிதர்களைப் பண்படுத்துவது' என்று குறிப்பிடுகிறார்.

தனி வேளான் பட்ஜெட்

தனி வேளான் பட்ஜெட்

இத்தகைய மகத்தான வேளாண்மை செழித்து வளரவேண்டும் என்பதற்காக தனி வேளாண் நிதிநிலை அறிக்கை அவையின்முன் வைக்கப்படும் என்கிற அறிவிப்பை நிலைநாட்டும் வகையில், இந்த மூன்றாவது வேளாண் நிதிநிலை அறிக்கை உங்கள் முன்பு வைக்கப்படுகிறது. உழவர் பெருமக்கள் உழைப்பிற்கேற்ற பலன்களைப் பெறவேண்டும். வர்த்தக ரீதியாக வருமானம் ஈட்ட வேண்டும்.

 திட்டங்கள்

திட்டங்கள்

அறிவியலையும் உயர்ந்த தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, மகசூலில் சாதனைகள் புரியவேண்டும் என்கிற அடிப்படையில்தான் சென்ற இரண்டு வேளாண் நிதிநிலை அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவையின்முன் வைக்கப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கைகளைப் பொருத்தவரை, ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறவேண்டிய இனங்களைத் தவிர, அவற்றில் இடம் பெற்றிருந்த மற்ற அனைத்து அறிவிப்புகளுக்கும் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கோட்டையில் அமர்ந்து பட்ஜெட்

கோட்டையில் அமர்ந்து பட்ஜெட்


இந்த அரசு பதவியேற்றபோதே வேளாண்மைத் துறை என்றிருந்த துறையின் பெயர், வேளாண்மை-உழவர் நலத் துறை என்று பெயர் மாற்றப்பட்டு. உழவர் தம் உயர்வையே மையமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. கோட்டையில் அமர்ந்து கொண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையை வடிவமைப்பது ஏற்புடையது அல்ல என்பதை அறிந்தோம்.

 விவசாயிகளுடன் சந்திப்பு

விவசாயிகளுடன் சந்திப்பு

அதன் காரணமாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கேற்ப, திண்டுக்கல், திருநெல்வேலி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, சென்னை, சிவகங்கை மாவட்டங்களுக்கு நானும் துறை சார்ந்த அலுவலர்களும் சென்று சுற்றுவட்டாரத்தில் இருக்கிற மாவட்டங்களின் உழவர்கள், வேளாண் வணிகர்கள், ஏற்றுமதியாளர்களை அழைத்துப் பேசினோம்.

 விவசாயிகள், வணிகர்கள் கருத்துக்கள்

விவசாயிகள், வணிகர்கள் கருத்துக்கள்

அவர்கள் கருத்துக்களுக்கும் இடமளிக்கும் வகையில் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை இம்மாமன்றத்தில் குறிப்பிட விரும்புகிறேன். வேளாண்மை, பல துறைகளின் தாய்; பல தொழில்களின் முன்னோடி. பல்வேறு விதமான துறைகளின் ஒருங்கிணைப்பு இருந்தால்தான் வேளாண்மை செழிக்க முடியும்.

பல துறைகளின் உதவி

பல துறைகளின் உதவி

மண்ணை வளமாக்குவது நீர் என்பதால், நீர்வளத் துறையின் ஒருங்கிணைப்பு முக்கியம். உழவர்களுக்கு உதவுவதாலும், அவர்தம் வாழ்வுக்குக் காப்பீடாக இருப்பதாலும், கால்நடைத் துறையின் பங்களிப்பும் அவசியம். விளைபொருட்களை விற்பதாலும், இடுபொருட்களை வழங்குவதாலும் கூட்டுறவுத் துறையோடும் கூட்டணி தேவை, உழவர்கள் குளங்களில் மீன் வளர்ப்பதற்குப் பங்களிப்பதால், மீன் வளத்துறையும் கைகொடுப்பது அவசியம்.

அனைத்து துறைகள்

அனைத்து துறைகள்

கட்டமைப்பு வசதிகளை சிற்றூரில் ஏற்படுத்தி, உழவுக்கு ஒத்திசைவாக இருப்பது, ஊரக வளர்ச்சித் துறை. உழவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வைத்து, வெளிச்சத்தைக் காண்பது மின்சாரத் துறை. உற்பத்தி செய்த பொருட்களைப் பதப்படுத்தி, நெடிய நாள் பாதுகாத்து வைப்பதற்கு தொழில் துறையும் தோள் தர வேண்டும். இப்படி பல்வேறு துறைகளின் செயல்பாட்டால்தான் வேளாண்மை விரிவடைய முடியும்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+