Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனாவின் 50 ஆண்டுகால கனவை.. அடித்து நொறுக்கிய இந்தியா! பின்னணியில் அஜித் தோவல்.. ப்பா மாஸ் அடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு எதிராக இந்தியா புதிய கட்டமைப்பு திட்டம் ஒன்றை ஜி 20 மாநாட்டில் உருவாக்கி உள்ளது.இந்தியாவின் இந்த திட்டத்தின் பின்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருப்பதாக கூறப்படுகிறது.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள் ஜி20 உச்சி மாநாட்டில் ரயில் மற்றும் துறைமுகங்கள் சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதாவது சாலை போக்குவரத்து, துறைமுகங்கள் அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

How Ajit Doval was the mastermind behind the India plan against belt and road project of China?

அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகளை இணைக்கும் விதமாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கிய விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு போட்டியாக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. சீனாவின் பெல்ட் மற்றும் ரோடு பார்வையில் மத்திய கிழக்கு ஒரு முக்கிய பகுதியாகும். அமெரிக்க அதிபர் "ஜனாதிபதி பிடன் இந்தியா பிரதமர் மோடி, மற்றும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்கள் இன்று ஒரு பெரிய கூட்டு உள்கட்டமைப்பு ஒப்பந்தத்தை போடுவார்கள் என்று கூறப்படுகிறது.

வளைகுடா மற்றும் அரபு நாடுகளை ரயில்வே நெட்வொர்க் மூலம் இணைக்கும் விதமாகவும், ஜி 20யில் அருகருகே இருக்கும் நாடுகளை ரயில் மூலம் இணைக்கும் விதமாகவும், மற்ற நாடுகளை கடல் போக்குவரத்து மூலம் இணைக்கும் விதமாகவும் இந்த ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இந்த நாடுகளை கடல் போக்குவரத்து மூலமும், சாலை போக்குவரத்து மூலமும் போக்குவரத்து பணிகளை மேற்கொள்ளும் விதமாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மாஸ்டர்மைண்ட் யார்?: இந்தியாவின் இந்த திட்டத்தின் பின்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக இவர் நடத்திய கூட்டங்கள்தான் இந்த முடிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தோவல், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜே.கே. சல்லிவனைச் சந்தித்து மே மாத தொடக்கத்தில் இந்தத் திட்டம் குறித்து விவாதித்து இருக்கிறார். அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவை சேர்ந்த அதிகாரிகளையும் இதே நாளில் சந்தித்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு இருக்கிறார். அப்போதுதான் இந்த திட்டம் குறித்து இவர்கள் பேசி உள்ளனர்.,

சீனாவின் ரோடு அண்ட் பெல்ட் திட்டத்திற்கு எதிராக இதை கொண்டு வர வேண்டும் என்று பேசி உள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் சவூதி பிரதமரும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷேக் தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை மே 7 அன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் அஜித் தோவல் பேசிய விஷயங்கள்தான் சீனாவிற்கு எதிரான இந்த திட்டத்திற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

தோவலும் சல்லிவனும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சந்தித்து இந்த திட்டத்திற்காக தயாராகி வந்தனர் என்று கூறப்படுகிறது. சீனாவிற்கு எதிரான இந்த திட்டத்திற்கு பின் தோவல்தான் மாஸ்டர்மைண்டாக இருந்ததாக சர்வதேச அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா சீனா இடையே தற்போது எல்லையில் நிலவும் பிரச்னைக்கு தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை இந்தியா தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வருகிறது. இந்தியாவின் எதிர்ப்பை சமாளிக்கலாம் என்று சீனா முதலில் கருதியது.

ஆனால் இந்தியாவின் ராஜாங்க ரீதியான பலம் காரணமாக தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டத்திற்கு நிறைய எதிர்ப்புகள் வந்தது. இதுதான் இந்தியா மீதான சீனாவின் கோபத்திற்கு காரணம் ஆகும். அது என்ன தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம்?... இந்த விரிவான கட்டுரையை படியுங்கள் புரியும்!

என்ன மாதிரியான திட்டம்?: உலகம் முழுக்க இருக்கும் நாடுகளை சீனாவுடன் இணைப்பதுதான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டத்தின் நோக்கம். 2013ல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 160 நாடுகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. சீனா அல்லது வேறு ஒரு தனி நாடு உலகில் அறிவித்ததிலேயே இந்த திட்டம்தான் பெரிய திட்டம் ஆகும். சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் கனவு திட்டம் இதுவாகும்.

இந்த திட்டத்தை 2013ல் ஜி ஜிங்பிங் இந்தோனேசியா மற்றும் கஜகஸ்தான் பயணத்தின் போது அறிவித்தார். இதில் இருக்கும் தி பெல்ட் என்பது உலகம் முழுக்க சீனா அமைக்க உள்ள சாலைகளை குறிக்கும். ரோட் என்பது உலகம் முழுக்க சீனா கடல் வழியாக ஏற்படுத்த உள்ள கடல் போக்குவரத்தை குறிக்கும். இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம் அந்நாட்டு அரசியலமைப்பில் ஒரு அங்கமாக 2017ல் சேர்க்கப்பட்டது.

சீனா என்ன செய்யும்?: இதன் மூலம் உலகில் இருக்கும் நாடுகளின் பகுதிகளை சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கும். சாலைகள் அமைத்து சீனாவிற்கும் பிற நாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும். அதேபோல் கடல் வழியே போக்குவரத்தை ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் பிற துறைமுகங்கள் உடன் இணைக்கும். இதுதான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டத்தின் நோக்கம்.

பெயர் மாற்றியது: முதலில் இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் திட்டத்திற்கு ஒன் பெல்ட் ஒன் ரோட் ஸ்டிரேட்டஜி (One Belt One Road Strategy) என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் இதில் இருக்கும் ஸ்டிரேட்டஜி என்ற வார்த்தை பல நாடுகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். அதேபோல் ஒன் என்ற வார்த்தையும் பல நாடுகளுக்கு கோபத்தை உண்டாக்கும். இது பெரிய எதிர்ப்புகளை ஏற்படுத்தும் என்று சீனா அஞ்சியது. இதனால் திட்டத்தின் பெயர் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் என்று மாற்றப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+