Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூண்டில் போடும் ‘மாஜி’ எம்.எல்.ஏ.. அடிமட்ட லெவலில் இறங்கி அடிக்கும் பாஜக.. கொத்தாக தூக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை : உள்ளாட்சிப் பிரதிநிதிகளை பாஜகவிற்குள் இழுக்கும் அசைன்மெண்ட்டை கச்சிதமாகச் செய்து, அண்ணாமலையின் பாராட்டைப் பெற்றுள்ளார் பாஜகவின் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் சோழன் சித.பழனிச்சாமி.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 ஊராட்சி மன்றத் தலைவர்கள் நேற்று ஒரே நாளில் பாஜவில் இணைந்தனர். பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நேற்று கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 ஊராட்சி மன்ற தலைவர்கள் பாஜவில் இணைந்தனர்.

தமிழகத்தில் பா.ஜ.க வலுவாகத் தடம் பதிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக மக்கள் மத்தியில் ஆதரவைப் பெறுவதற்காக அக்கட்சியில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலரையும் இணைத்து வருகின்றனர்.

அந்தவகையில், ஒரே மாவட்டத்தில் இருந்து 35 பஞ்சாயத்து தலைவர்களை இழுத்துள்ளனர். இது ஆளுங்கட்சியான திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடிமட்டத்தில்

அடிமட்டத்தில்

தமிழக பாஜகவின் இப்போதைய குறி, 2024ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்தான். அதில் பாதிக்கு மேல் சீட்களை பெறவேண்டும் என அக்கட்சியினர் உழைத்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பூத் கமிட்டி லெவலில் உறுப்பினர்களை நியமித்து, இப்போதே பணிகளைத் முடுக்கி விட்டு வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அடிமட்ட அளவில் பாஜகவை பலப்படுத்தும் வகையில் சில திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது பாஜக.

மாற்றுக் கட்சியினர்

மாற்றுக் கட்சியினர்

தி.மு.க, அ.தி.மு.கவில் பெரிய பொறுப்புகளில் இருந்த முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பலரையும் கட்சிக்குள் கொண்டு வந்துள்ளது பாஜக. அதேபோல, அக்கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் வாரிசுகளை தங்கள் பக்கம் இழுப்பதையும் மெயின் வேலையாக செய்து வருகிறார் அண்ணாமலை. இது ஒரு பக்கம் என்றால், பெரிய பொறுப்புகள் மட்டுமல்லாமல், உள்ளாட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்களையும் பாஜகவிற்கு இழுக்கும் திட்டத்தையும் மேற்கொண்டு வருகிறது தமிழக பாஜக.

ஒவ்வொரு வார்டிலும்

ஒவ்வொரு வார்டிலும்

உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், மக்களோடு நேரடித் தொடர்பில் இருப்பவர்கள். லோக்கலில் கட்சியின் முகமாக இருப்பவர்கள் அவர்கள்தான். திமுகவைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளை பாஜக பக்கம் இழுத்து விட்டால், அவர்களை வைத்தே, அக்கட்சிகளின் பலம், பலவீனங்களை அறிந்து, அடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்ளலாம் என அண்ணாமலை பிளான் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், ஒவ்வொரு வார்டிலும் திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கலாம் என பாஜக திட்டமிட்டுள்ளது.

அசைன்மெண்ட்

அசைன்மெண்ட்

உள்ளாட்சிப் பிரதிநிதிகளை கட்சிக்குள் கொண்டு வரும் அசைன்மெண்ட் சமீபத்தில் பாஜகவின் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவராக நியமிக்கப்பட்ட சோழன் சி.த.பழனிச்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மேற்கொண்ட ஆபரேஷன் படியே, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 ஊராட்சி மன்றத் தலைவர்கள் கொத்தாக பாஜகவில் இணைந்துள்ளனர். மேலும், பல மாவட்டங்களிலும் உள்ளாட்சி பிரதிநிதிகளை இழுக்கும் திட்டம் தொடர்ந்து வருகிறதாம்.

கொத்தாக தூக்கியது எப்படி?

கொத்தாக தூக்கியது எப்படி?

ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்தக் கூட்டங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராகப் பேசுபவர்களைக் கண்டறிந்து, அவர்களிடம் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் சோழன் சித.பழனிச்சாமி. அதன்படி, சமீபத்தில் கடலூரில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, திமுக மீது அதிருப்தியில் இருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் 35 பேரை கூண்டோடு தூக்கியுள்ளார் சோழன் சித.பழனிச்சாமி.

நம்பிக்கை கொடுத்து

நம்பிக்கை கொடுத்து

தங்கள் பகுதிக்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் இருப்பது, காண்டிராக்ட்களில் புறக்கணிப்பது உள்ளிட்ட காரணங்களால் திமுக கவுன்சிலர்கள், திமுக சேர்மன்கள் மீது அதிருப்தியில் இருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் பேசி, திமுகவினர் கொடுக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள பாஜக பக்கபலமாக இருக்கும், மத்தியில் இருப்பது நம் ஆட்சிதான், அண்ணாமலையே உங்களை அழைத்துள்ளார், வேண்டியதைச் செய்து தருவார் எனப் பேசி நம்பிக்கை கொடுத்து பாஜகவுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

    Aavin முறைகேடு; அமைச்சர் Nasar பதில் சொல்லட்டும் | Annamalai Speech
    சோழன் பழனிச்சாமி

    சோழன் பழனிச்சாமி

    சிவகங்கை மாவட்ட அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளரும், காரைக்குடி முன்னாள் எம்எல்ஏவுமான சோழன் சித.பழனிச்சாமி, அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது தினகரனின் அமமுகவுக்குச் சென்றார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் அதிமுகவுக்கு வந்த இவருக்கு அதிமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதால் அவர் பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் சேர்ந்தது முதல் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். திமுகவுக்கு குடைச்சல் கொடுக்க அண்ணாமலை கொடுத்த அசைன்மெண்ட்டை கச்சிதமாக முடித்து, அடுத்தடுத்த மாவட்டங்களிலும் வேலையைக் காட்டி வருகிறாராம் சோழன் பழனிச்சாமி.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+