Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் வெறும் காலியிடம் இருந்தாலே மாதம் ஒரு லட்சம் வருமானம் உறுதி.. வளரும் புதிய பிசினஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் காலியிடம் இருந்தாலே ஒரு லட்சம் சர்வ சாதாரணமாக சம்பாதிக்கிறார்கள்.. அதுவும் மிகவும் நெரிசலான பகுதிகளில் மற்றும் முக்கியமான பகுதிகளில் காலியிடம் இருந்தால், அதில் எந்த கட்டுமானமும் இல்லாமலேயே பெரிய அளவில் சம்பாதிக்கிறார்கள்.. சென்னையில் அப்படி காலியிடத்தில் சம்பாதிக்க கடைக்கு வாடகைக்கு கூட விடுவது இல்லை.. ஆனால்புதிதாக இரண்டு தொழில்கள் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த இரண்டும் சென்னைக்கு மிகவும் முக்கியமான தேவையாக இருக்கிறது. அதுபற்றி பார்ப்போம்.

சென்னை மாநகரம் எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறதோ அதே அளவிற்கு சிக்கல்களையும் சேர்த்தே வளர்த்து வருகிறது.. உதாரணமாக சென்னையில் தற்போதைய நிலையில் பல பகுதிகளில் காலியிடங்களே இல்லை.. வாகனங்களை நிறுத்த எந்த ஒரு வசதியும் இல்லாமல் பல தெருக்கள் உள்ளன.காரை நிறுத்த வசதி உள்ள வீடுகள் சென்னை மாநகருக்கு அந்த காலத்தில் கட்டப்படவில்லை. எவ்வளவு தான் வசதி இருந்தாலும் அந்த தெருவிற்குள் காரை கொண்டு செல்லவே முடியாத அளவிற்கு நெரிசல் அதிகமாக இருக்கிறது.

Chennai business car

மந்தைவெளி, மயிலாப்பூர். திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, வடபழனி, கோடம்பாக்கம், தி நகர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயப்பேட்டை, ராயபுரம், வில்லிவாக்கம், கொளத்தூர்,அயனாவரம், திருவான்மியூர், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம் என சென்னையின் பல்வேறு இடங்களில் கார் பார்க்கிங் என்பது இல்லை... கார் பார்க்கிங் இல்லாமல் ஏராளமான பகுதிகளில் வீடுகள் உள்ளன.இந்த பகுதிகளில் காரை நிறுத்த வழிகள் இல்லாததால், காரை வாங்க முடியாமல் தவிக்கிறார்கள்.. வரும் காலத்தில் பார்க்கிங் இருந்தால் தான் காரை வாங்க முடியும் என்கிற நிலை ஏற்பட போகிறது.

இப்படியான இடியாப்ப சிக்கலை சிலர் பிசினஸ் ஆக பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.. வெறும் காலியிடங்களை கார் பார்க்கிங்கிற்கு வாடகைக்கு விடுவது அதிகரித்துள்ளது. கார்களை பார்க்கிங் விட மாதம் 6000 வரை வசூலிக்கிறார்கள்.. கார் வாங்கியவர்கள் காரை பாதுகாப்பாக நிறுத்த பார்க்கிங்கில் போய்விடுகிறார்கள்.. ஒன்றரை கிரவுண்ட் இடம் வாங்கி வைத்துள்ளவர்கள் சும்மா இடத்தை வைத்திருப்பதற்கு பதில் அதில் பார்க்கிங் விட்டால் 15 கார்கள் வரை நிறுத்த முடியும். இதன் மூலம் 90000 வரை அசால்ட்டாக சம்பாதிக்க முடிகிறதாம்.. இரண்டு கிரவுண்ட் அல்லது மூன்று கிரவுண்ட் இடம் இருக்கிறது என்றால் பிளே கிரவுண்ட்டிற்கும் விடுகிறார்கள்.. அதாவது விளையாட்டு மைதானங்களை ஆரம்பிக்கிறார்கள்.. ஒரு மணி நேரத்திற்கு 800 ரூபாய் என்று வாடகைக்கு விட்டு மாதம் 2 லட்சம் 3 லட்சம் வரை அசால்ட்டாக சம்பாதிக்கிறார்கள்..

சென்னையில் காலியிடங்களேதற்போது மிகப்பெரிய வருமானம் தரும் விஷயமாக மாறிவிட்டது. அதுவும் கார் பார்க்கிங் இல்லாத பகுதிகளில் கார் பார்க்கிங் மையத்தையும், விளையாட்டு மைதானங்கள் இல்லாத பகுதிகளில் விளையாட்டு மைதானங்களை உருவாக்கினால் பெரிய லாபம் தரும் விஷயமாக வரும் காலத்தில் இருக்கிறார்கள் என்கிறார்கள். தற்போதைய நிலையில் கார் பார்க்கிங் உள்ள வீடுகளுக்கும் மதிப்பு பெரிய அளவில் அதிகமாக உள்ளது.

சென்னையின் முக்கிய பகுதிகளில் கார் பார்க்கிங் வசதி உள்ள புதிய வீடுகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி உள்ளது. இதன் காரணமாக பழைய வீடுகளை இடித்துவிட்டு அங்கு பார்க்கிங் வசதியுடன் அடுக்குமாடிகள் உருவாகி வருகின்றன.ஒருவர் குடியிருந்த வீடுகள் 10 பேருக்கு சொந்தமான வீடுகளாக சென்னையின் மையப்பகுதிகளில் தற்போது வேகமாக மாறிவருகின்றன. இடம் வைத்துள்ள பலர் கோடிகளில் சம்பாதித்து வருகிறார்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+