இப்படியும் ஒரு உதவித் தொகையா.. அதுவும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு! எளிதில் விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகைக்கு வேலையில்லா பட்டதாரிகள் விண்ணப்பிப்பது எப்படி? உதவித் தொகை யார் யாருக்கு கிடைக்கும்? அதற்கு அரசு நிர்ணயித்து உள்ள தகுதிகள்? என்ன என்று விரிவாக பார்ப்போம்.
10 ஆம் வகுப்பு (தோல்வி) அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித் தகுதிகளை பெற்று இருப்பவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அந்த பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து, 2023 டிசம்பர் 31 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பு இல்லாம காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

யாருக்கெல்லாம் உதவித்தொகை?
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும். பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், B.Sc Nursing போன்ற பிரொபசனல் பட்டப் படிப்புகளை நிறைவு செய்து முடித்தவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
தகுதி என்ன?
வேலைவாய்ப்பு அற்ற பட்டதாரி இளைஞர்களுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். வயது 2023 டிசம்பர் 31 ஆம் தேதியின் படி பட்டியல் மற்றும் பழங்குடியினர் (SC/ST) பிரிவினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தை பெறுவது எப்படி?
வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கான உதவித்தொகைக்கான விண்ணப்பப் படிவத்தை பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காட்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடக்கி புத்தகத்துடன் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் மனுதாரர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகம் அறிவித்த தேதிக்கு உள்ளாக அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலை வாய்ப்பு அற்றோர் உதவித் தொகை திட்டப் பிரிவில் சமர்பிக்க வேண்டும்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications