தனி விமானத்தில் பயணித்தால் எப்படி?.. முதல்வரிடம் கத்துக்கோங்க விஜய்.. அமீர் அட்வைஸ்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய், திமுக அரசு இருவர் மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களே விஜய்க்கு எதிராக பேசி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் மீது இயக்குநர் அமீர் பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளார். முதல்வரைபோல மக்களுடன் பயணிக்க வேண்டும். தனி விமானத்தில் பயணித்தால் எப்படி மக்கள் பிரச்சனை புரியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திரைப்பட இயக்குநர் அமீர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார், ஒரிஜினல் கூட்டத்தை படப்பிடிப்பிற்கு பயன்படுத்திக் கொள்வதில் தவறலில்லை. கரூர் சம்பவத்தை பார்க்கும்போது, ஒரு பெரும்பான்மையான கூட்டம் கூடும் மனிதருக்கு வழிகாட்ட ஆள்இல்லை. அவருக்கும் தெளிவான பார்வை இல்லை. அதை சரி செய்தாலே இந்தப் பிரச்சனை முடிந்துவிடும். நாமும் இதைப்பற்றி பேச தேவையில்லை.

விஜய் மீது விமர்சனம்
உதயநிதி திடீரென்று அரசியலுக்கு வரவில்லை. அவர் தாத்தா காலத்தில் இருந்தே அரசியலில் இருந்தார். உதயநிதி பிறந்ததே ஒரு அரசியல் குடும்பம். அதை பெரிதாக விமர்சிக்க தேவையில்லை. உதயநிதி செய்யும் தவறை விமர்சிக்கலாம். பணக்காரர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று இல்லை. அமெரிக்காவிலேயே ஒரு பணக்காரர் தான் அதிபராக இருக்கிறார். அடிப்படையில் மக்கள் பிரச்சனைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
பேருந்து எந்தப் பகுதிக்கு செல்லும், ரேஷன் கடையில் என்னென்ன பொருட்கள் கிடைக்கும், எதற்கு மானியம் கிடைக்க வேண்டும் என்பதெல்லாம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வேண்டும். விஜய் மக்களுடன் நெருக்கமாக வேண்டும். அவர் இன்னும் நெருக்கமாகவில்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின் பலமுறை விமான நிலையத்தில் சந்தித்துள்ளேன். அவர் சின்ன விமானத்தில் மக்களுடன் பயணிக்கிறார். அவரைப் பார்த்து கற்று கொள்ள வேண்டும்.
ஹிட்லரை போல
விஜய் தனி விமானத்தில் பயணிக்கிறார். அவர் ஒரு முறையாவது மக்களுடன் பயணித்தால் அவர்கள் சுட்டிக் காட்டுவார்கள். மக்களே அவரிடம் செய்ய வேண்டிய மாற்றங்களை எடுத்துச் சொல்வார்கள். தனி விமானத்திலேயே சென்று வந்தால் மக்களிடம் எப்போது பேசுவார். கட்சி ஆரம்பித்து 2 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதுவரை ஒருமுறை கூட பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. ஒரு பத்திரிகையாளரிடமும் பேசவில்லை.
என்னதான் செய்ய போகிறீர்கள். அவரை வழிநடத்த வேண்டும். ஹிட்லர் கூட்டங்களில் தான் அவர் பேசும்போது நிர்வாகிகள் நின்று கொண்டிருப்பார்கள். உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரி ஹிட்லர் தான். அதேபோல விஜய் பேசும்போது தவெக நிர்வாகிகள் நிற்கிறார்கள். இது விஜய்யின் கட்டளையா, நிர்வாகிகளின் அணுகுமுறையில் உள்ள தவறா. கரூர் சம்பவம் தொடர்பாக அரசு விசாரணை ஆணையம் போட்டுள்ளது, நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளது, விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. அதனால் கரூர் சம்பவத்தைப் பற்றி பேசவில்லை.
தந்தையை உடன் வைக்கவும்
எந்த ஒரு தகப்பனும் தன் மகன் நாசமாவதை விரும்ப மாட்டான். இது எல்லாம் ஒரு முகமா என பத்திரிகைகள் விஜயை ஆரம்பத்தில் விமர்சித்தன. இப்போது அதே பத்திரிகைகள் அவரை அடுத்த முதல்வரா என்று விவாதம் நடத்துகின்றன. அவரின் அனைத்து பாதையை வகுத்ததும் அவரின் தந்தை தான். இப்போது அவருடன் உள்ள யாரும் உண்மையாக இருக்க மாட்டார்கள். எனவே விஜய் தன் தந்தையை உடன் வைத்துக் கொண்டால் நல்ல வழிகாட்டுதலாக இருப்பார்.
உடன் இருப்போர் விஜய்யை தவறாக வழி நடத்துகிறார்கள். ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய், அதற்கு இன்னொரு பொய் என்று இப்போது உச்ச நீதிமன்றம் போய் நிற்கிறது. நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆவணங்கள் வேண்டும். இவர் சொல்வது போல் சதி நடந்திருந்தால், அவர்கள் வெளியில் வந்து சொல்லியிருப்பார்கள் தானே. என்றார்.
-
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம்












Click it and Unblock the Notifications