சென்னை மேயர்.. ஃபைனலாக சீனியர் அமைச்சரின் சாய்ஸை டிக் அடித்த முதல்வர் ஸ்டாலின்.. நடந்தது என்ன?
சென்னை: சென்னை மேயர் பதவிக்கு கடும் போட்டிகள் நிலவிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் சீனியர் அமைச்சர் ஒருவரின் சாய்ஸை டிக் அடித்துள்ளார். இதற்கு காரணம் என்ன?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணியே 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. இதையடுத்து தமிழகத்தின் தலைநகரான சிங்கார சென்னையின் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
கடந்த 2011 ஆம்ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவின் சைதை துரைசாமி சென்னை மேயராக இருந்தார். அதற்கு பிறகு 11 ஆண்டுகள் கழித்து தற்போது நகர்ப்புற தேர்தல் நடத்தப்பட்டு சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணி அதிக அளவில் வென்றுள்ளது.

வார்டுகள்
சென்னையில் பெரும்பாலான வார்டுகளில் பெண்களே வென்றுள்ளதால் மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அது போல் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் மேயராக்கப்படுவார் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த மேயர் பதவியை பெற திமுகவின் அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன், உதயநிதி உள்ளிட்டோரிடம் இருந்து லிஸ்ட் முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றது.

முதல்வர் ஸ்டாலினிடம் லிஸ்ட்
இவர்களை தவிர இன்னும் முக்கியஸ்தர்களிடம் இருந்தும் பரிந்துரைகள் முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றன. பரிந்துரைத்தவர்கள் அனைவருமே முக்கியமானவர்கள் என்பதால் முதல்வர் ஸ்டாலின் யாரை தேர்வு செய்வது என்பதை யோசித்தார். அதில் தேர்வானவர்தான் பிரியா ராஜன். இவரை பரிந்துரைத்தவர் அமைச்சர் சேகர் பாபு.

முதல்வர் ஸ்டாலினின் சாய்ஸ்
முதல்வர் ஸ்டாலினின் இந்த தேர்வுக்கு என்ன காரணமாக இருக்கும் என அறிவாலய வட்டாரங்களில் கேட்டோம். அவர்கள் கூறியது: பிரியா ராஜனின் குடும்பம் 40 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் விசுவாசியாக உள்ளனர். அது போல் அந்த பெண் வடசென்னையை சேர்ந்தவர் என்பதால் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை மேயராக்கினால் நன்றாக இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் யோசித்தாராம்.

வடசென்னை
மழை, புயல், வெள்ளம் என எது வந்தாலும் முதலில் கடுமையாக பாதிக்கப்படுவது வடசென்னைதான். அது போல் தொற்று நோய் என்றாலும் முதலில் வடசென்னைதான் பாதிக்கப்படுகிறது. கொரோனா ஹாட்ஸ்பாட்டாக வடசென்னை இருந்ததை அனைவரும் அறிவோம்.

தத்தளித்த வடசென்னை
வடசென்னையில் உள்ள சுகாதாரம், தண்ணீர் பிரச்சினை, சாலை பிரச்சினை, மின்சாரம் உள்ளிட்டவற்றை நன்கு அறிந்தவர் மேயராக வந்தால் அந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கருதியிருக்கலாம். கடந்த நவம்பர் மாத மழையில் இடுப்பளவுக்கு மேல் மழை நீரில் வடசென்னை தத்தளித்தது.

பிரியா ராஜன் தேர்வு இப்படிதான்
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு கொடுத்த பரிந்துரையை ஏற்றிருக்கலாம் என்றனர். முதல்வர் ஸ்டாலின் கணித்ததை போல் பிரியா ராஜன் வடசென்னை மக்களின் துயரை துடைக்க திட்டங்களை வகுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications