வருது சென்னை மெட்ரோ 2.0.. வீடு, நிலம் வாங்கினால் இந்த 7 ஏரியாவில் வாங்குங்க.. பல கோடி லாபம் வரும்
சென்னை: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் வழித்தடத்தின் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. இங்கே விரைவில் போக்குவரத்து தொடங்க உள்ளதால்.. இதே ஏரியாவில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயரப்போகிறது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
₹63,246 கோடியில் கட்டப்படும் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தில் கிட்டத்தட்ட 70% பணிகள் நிறைவடைந்துள்ளது. 118.9 கி.மீ., தூரத்திற்கு இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான 9 கிமீ தூரம் 2025 டிசம்பரில் திறக்கப்பட உள்ளது. 50.5 கிமீ சுரங்கப்பாதையில் 19 கிமீ சுரங்கப்பாதை மட்டுமே தற்போது முடிக்கப்பட்டுள்ளது.
காரிடார் 3ல் ரத்து செய்யப்பட்ட ஸ்டேஷன் டெண்டர் காரணமாக பணிகள் தாமதம் அடைந்து உள்ளது. விரைவில் போரூர்-கோடம்பாக்கம் ரூட்டை திறக்க அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர். சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-IIத்தில் மெட்ரோ நிலையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வருட இறுதியில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ரியல் எஸ்டேட் மதிப்பு
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் வழித்தடத்தின் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. இங்கே விரைவில் போக்குவர்த்து தொடங்க உள்ளதால்.. இதே ஏரியாவில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயரப்போகிறது. முக்கியமாக இந்த 7இடங்களில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயரப்போகிறது.
மாதவரம்
பூந்தமல்லி
ரெட்டேரி
கொளத்தூர்
ஓஎம்ஆர்
கேளம்பாக்கம்.
போரூர்
ஆகிய 7 இடங்களில் ரியல் எஸ்டேட் தொகை கடுமையான உச்சத்தை அடைய போகிறது. இங்கே தற்போது 3000 முதல் 9 ஆயிரம் ருபாய் வரை சதுர அடிக்கு செல்கிறது. இது அப்படியே 30-50 சதவிகிதம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் இங்கே நிலம் வாங்கினால் அது பெரிய பலனாக இருக்கும்.
பணிகள் தீவிரம்
கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீ நீளம் கொண்ட வழித்தடம் 4-ல் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தை மேம்படுத்தவும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளின் தொடர்ச்சியாக, முல்லைத்தோட்டம் மற்றும் கரையான்சாவடி நிலையங்களுக்கு இடையே மேம்பாலப் பணிகள் நிறைவுற்று முக்கியமான மைல்கல்லை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எட்டியுள்ளது.
பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்திற்கு ஒரு மோட்டார் டிராலி வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டு, கிரேடு செப்பரேட்டர் கட்டுமானத்திற்காக தொடக்க புள்ளியாக நியமிக்கப்பட்ட தூண் எண். 424-ஐ அடைந்தது. கூடுதலாக, மேல்நிலை உபகரண (OHE) பணிகளுக்கான ஒரு முக்கியமான சாலை மற்றும் இரயில் வாகனம் பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்திற்கு மாற்றப்பட்டது, இது திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான படியை குறிக்கிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், போரூர் மற்றும் பூந்தமல்லி பணிமனை இடையே கட்டுமானப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த வழித்தடத்தை 2025 ஆம் ஆண்டின் இறுதியில் பயணிகள் சேவைக்காக திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications