டான்சர் ரமேஷ் இறந்தது இதனால் தானா? “முதல் மனைவி வீட்டுக்கு போனார்..” முதற்கட்ட தகவல் சொல்வது என்ன?
சென்னை : சமூக வலைதளங்களில் பிரபலமான டான்சர் ரமேஷ் நேற்று திடீரென மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷுக்கும் அவரது முதல் மனைவிக்கும் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாகவே ரமேஷ் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் இதுவரை போலீசாரால் உறுதிப்படுத்தப்படவில்லை.
தெருக்களில் சினிமா பாடல்களுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடும் டான்சர் ரமேஷுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதன் மூலம் பிரபல தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார் ரமேஷ்.
டான்சர் ரமேஷிற்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இவர் முதல் மனைவி புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் வசித்து வருகிறார். இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார் ரமேஷ்.
இந்நிலையில், நேற்று தனது பிறந்தநாளையொட்டி முதல் மனைவியின் வீட்டுக்குச் சென்ற டான்சர் ரமேஷ், அங்கு 10வது மாடியில் இருந்து விழுந்து மரணமடைந்துள்ளார்.

டான்சர் ரமேஷ்
சிறு வயதில் இருந்தே, நடனத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ரமேஷ், நடனக் கலைஞராக வர வேண்டும் என்கிற ஆசையில், திரைப்படங்களை பார்த்து பயிற்சி பெற்று தன்னுடைய நடன திறமையை மெருகேற்றிக் கொண்டு, சினிமாவிலும் வாய்ப்புத் தேடியுள்ளார். சில ஆண்டுகள் முயன்றும், வாய்ப்பு கிடைக்காததால் கூலி வேலை செய்து வந்துள்ளார். பின்னர், பிளாட்பாரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் கடை நடத்தி வந்துள்ளார்.

பிரபலம்
ரமேஷின் அபாரமான நடனத் திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக இவரது நண்பர்கள் மற்றும் பகுதிவாசிகள், ரமேஷின் டான்ஸ் வீடியோவை எதார்த்தமாக டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வெளியிட, அது ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ரமேஷ் சமூக வலைதளங்களில் வாயிலாக உலகம் முழுவதும் பிரபலமானார். சோஷியல் மீடியாவில் எங்கு திரும்பினாலும் இவரது டான்ஸ் வீடியோக்கள் ஓடின.

டிவி நிகழ்ச்சி வாய்ப்பு
இதையடுத்து, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு பல பிரபலங்களையும் தனது நடனத்தால் கவர்ந்திருந்தார் ரமேஷ். அவ்வப்போது, யூடியூப் ஊடகங்களுக்கும் இவர் பேட்டி கொண்டு வந்தார். இந்நிலையில், இவரது திறமைக்கு பலனாக சினிமா சான்ஸும் தேடி வந்தது. சில திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

வாய்ப்பு தேடி வரும்போது அதிர்ச்சி
அஜித்குமார் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'துணிவு' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் டான்சர் ரமேஷ். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும், 'ஜெயிலர்' படத்திலும் டான்ஸ் ஆடியுள்ளார் ரமேஷ். அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கிய நிலையில், திடீரென இவர் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலையா? விபத்தா?
சென்னை புளியந்தோப்பில் உள்ள கேபி பார்க் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின், பத்தாவது மாடியில் இருந்து விழுந்து மரணமடைந்துள்ளார் டான்சர் ரமேஷ். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்தும், இவரது மரணம் தற்கொலையா? அல்லது எதிர்பாராமல் தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்பது குறித்தும் பேசின் பிரிட்ச் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 மனைவிகள்
டான்சர் ரமேஷிற்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இவரது முதல் மனைவி புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பில் வசித்து வருகிறார். ரமேஷ், இரண்டாவது மனைவியுடன் மூர் மார்க்கெட் பகுதியில் வசிந்து வந்துள்ளார். இன்று தனது பிறந்தநாள் என்பதால், ரமேஷ், முதல் மனைவியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போதுதான் பத்தாவது மாடியில் இருந்து விழுந்து மரணமடைந்துள்ளார். கணவன் - மனைவி இடையேயான வாக்குவாதத்தில் மனமுடைந்து டான்சர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தத் தகவல் உறுதி செய்யப்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications