பாத்ரூமில் ஓட்டை.. திடீரென அலறிய பெண்கள்.. போலீசுக்கு ஒரே ஓட்டம்.. கடைசியில் பார்த்தால்..!
பெண்கள் குளிக்கும்போது வீடியோ எடுத்த 2 பேர் வேளச்சேரியில் கைதாகி உள்ளனர்
சென்னை: பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுப்பதுதான் 2 இளைஞர்களின் பொழுதுபோக்காக இருந்துள்ளது.. இப்போது கைதாகி உள்ளே இருக்கிறார்கள்.
பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்து, அதன்மூலம் அந்த பெண்களை தங்கள் வலையில் விழ வைக்கும், கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பான புகார்களில், தினமும் ஏராளமான இளைஞர்கள் கைதாகி சிறை சென்றாலும்கூட, இந்த குற்றங்கள் குறையாமல் உள்ளது.

ஓட்டை
நேற்றுகூட ஒரு சம்பவம் நடந்தது. அந்த பெண்ணுக்கு 42 வயது.. தன்னுடைய வீட்டு குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார்... அப்போது குளியலறையில் உள்ள ஓட்டை வழியாக மொபைல் மூலம் யாரோ வீடியோ எடுப்பதாக உணர்ந்தார்... இதையடுத்து, அவர் வெளியே வந்து பார்த்தபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த தினகரன் என்ற 24 வயது நபர், செல்போனில் வீடியோ எடுத்தது தெரிய வந்தது. இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து தினகரனை கைது செய்தனர்.

டவுட் & சந்தேகம்
அதேபோல சென்னை வேளச்சேரியில் ஒரு சம்பவம் நடந்தது.. 21 வயது விஜய் என்பவர், பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். பிறகு அந்த வீடியோவை அந்தப் பெண்ணின் அண்ணன் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார்... இதனால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண்ணின் அண்ணன், பெரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்... அதற்கு பிறகு விஜய்யை பிடித்து விசாரணை நடத்தினர்...

குளியல் வீடியோ
அதில், நான் தான் அந்தப் பெண் குளிக்கும்போது அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அனுப்பியதாக வாக்குமூலம் தந்ததையடுத்து, புழலில் அடைக்கப்பட்டார். இன்று இன்னொரு சம்பவம் இதே வேளச்சேரியில் நடந்துள்ளது.. பெண்கள் குளிப்பதை 2 பேர் வீடியோ, போட்டோக்களை எடுத்துள்ளனர்.. இவர்களில் ஒருவர் கம்ப்யூட்டர் என்ஜினியராம்.. பெண்கள் வீடுகளில் குளிப்பதை குறிவைத்து வீடியோ எடுப்பதுதான் இவர்களின் பொழுதுபோக்காக இருந்துள்ளது.. இன்றும் அப்படித்தான், பெண்கள் குளிக்கும்போது, திருட்டுத்தனமாக வீடியோ எடுத்துள்ளனர்..

ஸ்பெஷல் கவனிப்பு
யாரோ தங்களை வீடியோ எடுப்பதாக உணர்ந்த பெண்கள், கத்தி கூச்சலிட்டுள்ளனர்.. இது தொடர்பாக வேளச்சேரி போலீஸ் நிலையத்திலும் புகார் தந்தனர்.. அப்போதுதான் விசாரணையில், வீடியோ எடுத்தது பக்கத்து வீட்டிலேயே வசித்து வரும் வெங்கடேசனும், அவரது நண்பரும் கம்ப்யூட்டர் என்ஜினியருமான ஸ்ரீராம்தான் என்பதும் நிரூபணமானது. இவர்களை கைது செய்த போலீசார், சிறப்பான முறையில் "கவனித்து" வருகிறார்கள்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications