மத்திய பிரதேசத்தில் அரிதான சம்பவம்.. இளைஞரை கடித்ததும் இறந்த கொடிய விஷமுள்ள பாம்பு.. எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பிரதேசத்தில் உள்ள பாலகட் என்ற மாவட்டத்தில் சச்சின் நாக்புரே என்ற இளைஞரை கடித்த விஷப்பாம்பு, அடுத்த ஐந்து நிமிடத்தில் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பாம்பு இறந்ததற்கு அவரை கடித்ததுன் காரணமாக அல்லது என்ன என்பதை மருத்துவர்கள் ஆய்வு செய்து உறுதி செய்தால் தான் உண்மை தெரியவரும். அதேநேரம் கடந்த ஏழெட்டு வருடங்களாக வேம்பு, மா, நாவல் மரம் உள்ளிட்ட மூலிகை குச்சிகளால் பல் விளக்குவதால் பாம்புக்கு தன் உடல் விஷமாகியிருக்கலாம் என கடிபட்டவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நடிகர் செந்திலை ஒரு படத்தில் ஒரு பாம்பு கடிக்கும். ஆனால் கடிப்பட்ட செந்திலுக்கு ஒன்றும் ஆகாது.கடித்த பாம்பு செத்து போயிருக்கும். அப்படி ஒரு சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தின் பாலகாட் மாவட்டத்தில் நடந்ததாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பது உறுதியாக தெரியவில்லை.. எனினும் பரவும் தகவல்களை பற்றி பார்ப்போம்.

How did a deadly venomous snake die after biting a young man in Madhya Pradesh

மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் பாலகாட்டின் குட்சோடி கிராமத்தில் சச்சின் நாக்புரே என்ற 25 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் ஒரு கார் மெக்கானிக் ஆவார். அந்த பகுதியில் பணியாற்றி வருகிறார். சச்சின் நாக்புரே வியாழக்கிழமை (நேற்று) அன்று காலை ​​7 மணி அளவில் தனது பண்ணைக்குச் சென்றார். அப்போதுதான், அவர் தற்செயலாக பாம்பை மிதித்துவிட்டார். இதனால் கோபத்தில் அந்தபாம்பு அவரைக் கடித்தது. இருப்பினும், மனிதனைக் கடித்த அந்த கடும் விஷம் உள்ள பாம்பு, அடுத்த 5-6 நிமிடங்களுக்குள் உயிரிழந்துவிட்டது. அதேநேரம் பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட சச்சின் நாக்புரே தற்போது ஆபத்தில் இருந்து மீண்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொதுவாக வல்லுநர்களின் கூற்றுப்படி, ஒரு மனிதனைக் கடித்த பிறகு ஒரு பாம்பு இறப்பது மிகவும் அரிது. இந்த அசாதாரண நிகழ்வில் மட்மே சாத்தியம் என்கிறார்கள். ஒரு பாம்பு ஒரு மனிதனைக் கடிக்க அதன் விஷத்தின் கணிசமான அளவைப் பயன்படுத்தினால், அது விஷக் குறைவால் பாதிக்கப்படும் என்றும் இது பாம்பை பலவீனப்படுத்தக்கூடும், குறிப்பாக உணவுக்காக வேட்டையாட வேண்டியிருந்தால் பாதிக்கப்படும் என்கிறார்கள். அப்போது பலவீனமாகி இறக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

அதேபோல் மனிதனை கடித்த பின்னர் தொற்று ஏற்பட்டால், குறிப்பாக பாம்பின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அல்லது காயத்தால் பாதிக்கப்பட்டிருந்ல், அது பாம்பின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதேபோல் பாம்புக்கு ஒரு மனிதனைக் கடிக்க முயற்சிக்கும் போது ஏற்படும் போது அதன் உடலில் ஏற்படும் காயங்கள் (மனிதன் தாக்கியதால் அல்லது உடலில் பாதிப்பு ஏற்பட்டால்) மரணத்திற்கு காரணமாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் பாம்புக்கடியால்பாதிக்கப்பட்ட போதும்உயிர் பிழைத்த சச்சின், தன்னை கடித்த விஷப்பாம்பு இறந்த போனதற்கு வேறு காரணங்களை கூறுகிறார்.. கடந்த ஏழெட்டு வருடங்களாக வேம்பு, மா, நாவல் மரம் உள்ளிட்ட மூலிகை குச்சிகளால் பல் விளக்குவதால் பாம்புக்கு தன் உடல் விஷமாகியிருக்கலாம் என்கிறார். ஆனால் சச்சின் சொல்லும் காரணம் கட்டுக்கதையாகவே இருக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

வனத்துறை அதிகாரி தர்மேந்திர பிசென் இதை 'அரிதிலும் அரிதான' நிகழ்வு என்று கூறினார். ஒரு பாம்பு ஒரு நபரைக் கடித்த உடனேயே இறக்கும் நிகழ்வு நடக்கலாம் என்றும் விளக்கினார். எந்த சந்தரப்பத்தில் பாம்பு ஒரு மனிதை கடித்த உடன் இறக்கும் என்றால், வாய்ப்பு , கடித்த பிறகு சில சமயம் கூர்மையான பற்கள் உடையும், பாம்பின் விஷப் பை உடைந்து, அதன் திடீர் மரணத்திற்கு வழிவகுக்கும் என்று வனத்துறை அதிகாரி கூறினார்.. அதேநேரம் பாம்பு கடித்த உடனேயே சச்சினை குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுவிட்டனர். ஆபத்து கட்டத்தை கடந்த அவர், சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கடித்த பாம்பு சாதாரண பாம்பு அல்ல, டோங்கர்பெலியா பாம்பு என்றும், இது மிகவும் விஷம் நிறைந்த பாம்பு என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+