பூமியில் உள்ள மரங்களை ஒரு உலுக்கு உலுக்கிய.. சூரியனில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு.. விஞ்ஞானிகள் ஷாக்!
சென்னை: சூரியனில் ஏற்பட்ட பெரிய வெடிப்பு ஒன்றின் காரணமாக ஏற்பட்ட சோலார் புயல் காரணமாக பூமியில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சூரியனில் இருந்து வெளியாகும் காந்தப்புயல் கதிர்கள், அலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுவாக சூரியனின் காந்த புலன்களுக்கு அருகே இருக்கும் வளிமண்டல பகுதிகள் அடர்த்தி குறைவாக இருக்கும். இவை குறைந்த வெப்பத்துடன், குறைந்த அடர்த்தியுடன் காணப்படும். இதன் காரணமாக சூரியனின் துருவ பகுதிகளில் உள்ள வளிமண்டலத்தில் சிறிய சிறிய துளைகள் காணப்படும்.
இதை Coronal holes என்று அழைப்பார்கள். இந்த துளை வழியாக சூரியனின் மின் காந்த அலைகள் வெளியேறும். இதைத்தான் solar wind என்று அழைப்பார்கள். இந்த solar wind பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு 2.9 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் செல்ல கூடியது. இந்த solar wind வெளியே வந்தவுடன் நமது சூரிய குடும்பத்தில் பல திசைகளுக்கு செல்லும்.
ஏன் நமது பூமியை நோக்கியும் கூட வரும். பூமி போன்ற அதிக மின் காந்த புலம் கொண்ட கிரகங்கள் இந்த solar windயை தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும். இது புவி காந்த புயலை ஏற்படுத்தும். இப்போது பூமியை நோக்கி வரும் solar wind காரணமாக பூமியில் லெவல் 1 புவி காந்த புயல் கூட ஏற்படும். இப்படி காந்த புயல் பற்றி பலரும் படித்து இருப்பீர்கள்.

இந்த சோலார் புயல் காரணமாக பூமி பலமுறை தாக்கப்பட்டு உள்ளது. அப்படித்தான் 14 ஆயிரம் வருடங்களுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட பெரிய வெடிப்பு ஒன்றின் காரணமாக ஏற்பட்ட சோலார் புயல் காரணமாக பூமியில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் இப்போதும் கூட மரங்களில் உள்ள வளையங்களில் கண்டுபிடிக்க கூடியதாக உள்ளதாம். மரங்களை வெட்டும் போது அதில் வளையங்களை பார்க்க முடியும். உள்ளே தண்டு பகுதியில் வளையங்கள் இருக்கும். இந்த வளையங்கள்தான் மரங்களின் வயதை தீர்மானிக்கும். அதே போல அந்த மரங்கள் கடந்து வந்த சில கடினமான சுற்றுச்சூழல் நிலைகளையும் கூட இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும்.
Earth and Planetary Science Letters வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 12,350 BCல் ஏற்பட்ட இந்த சோலார் புயல்தான் மனித குலத்திற்கு தெரிந்து ஏற்பட்ட மிகப்பெரிய சோலார் புயல் ஆகும். அந்த சோலார் புயல் எல்லாம் இப்போது ஏற்பட்டால் ஒரே நாளில் உலகின் மொத்த தொலைத்தொடர்பும் துண்டிக்கப்படும். அதில் இருந்து மீண்டும் வருவதெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று. அல்லது பல ஆண்டுகள் ஆகும்.
Miyake Event என்று அழைக்கப்படும் இந்த சோலார் புயல் காரணமாக பூமியில் இருக்கும் மரங்கள் கூட கடுமையான பாதிப்புகளை சந்தித்ததாம். மரங்களில் உள்ள வளையங்களில் காணப்படும் கார்பன் 14ஐ வைத்து இதை கண்டுபிடித்துள்ளனர். மரங்களில் கார்பன் 14 அதிகரிப்பிற்கு சோலார் புயல் காரணமாக அமைந்துள்ளது. கார்பன்-14 என்பது சூரியத் துகள்கள் பூமியின் வளிமண்டலத்துடன் மோதும்போது உருவாகும் ஒரு கதிரியக்க ஐசோடோப்பாகும்.
2012 இல் ஃபுசா மியாகே என்பதை இதை முதன்முதலில் கண்டுபிடித்ததிலிருந்து இந்த கார்பன்-14ஐ வைத்து பல ஆய்வுகள் செய்யப்பட்டு உள்ளன. கி.பி 774 மற்றும் கி.பி 993 வரை குறைந்தது ஆறு சோலார் புயல் நிகழ்வுகள் நடந்தது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த புயல்தான் மிக மோசமானது.
பூமியில் உள்ள மரங்கள் கூட அந்த புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பிரான்சின் ட்ரூசெட் நதிக்கரையோரத்தில் உள்ள ஸ்காட்ஸ் பைன் மரங்களில் கார்பன்-14 அதிகரிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் கிரீன்லாந்து பனிக்கட்டிகளில் பெரிலியம்-10 அளவை கணக்கிட்டதில் இது உறுதிப்படுத்தப்பட்டது. அங்கே பெரிலியம்-10 கட்டுக்கடங்காத அளவில் இருந்துள்ளது. இது அந்த சோலார் புயலின் வீரியத்தை காட்டுகிறது. அந்த சோலார் புயலின் உலகளாவிய பரவலை இது உறுதிப்படுத்தியது.
ஐஸ் ஏஜ் காலத்தில் இந்த புயல் ஏற்பட்டு உள்ளது. அதாவது நீங்கள் ஒரு வருடம் முழுக்க காஸ்மிக் ரேடியஷனை பெற்றால் எப்படி இருக்கும்.. அதே அளவு ரேடியேஷனை வெறும் 8 நொடிகளில் அன்று பூமி பெற்றுள்ளது. அதுவும் ஒரு நாள் அல்ல.. இந்த காஸ்மிக் ரேடியஷன் சுமார் சில மாதங்கள் விடாமல் பூமியை அப்போது தாக்கி உள்ளது. இதனால் பூமியின் ஒவ்வொரு மூலையும் அப்போது கடுமையாக பாதிக்கப்பட்டதாக அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications