ஏ4 ஷீட்டை.. நான்காக மடித்து.. லஞ்ச் பேக்கில் மறைத்து.. எடப்பாடி பக்கா பிளானோடு.. செய்த "சம்பவம்"
சென்னை: நேற்று சட்டசபையில் அதிமுக நடத்திய யார் அந்த சார்? போராட்டம் கவனம் பெற்றது. ஆளுநர் ஆர். என் ரவியின் நடவடிக்கை காரணமாக கவனிக்கப்படாமல் போன இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுவாக பதாகைகள், பெரிய நோட்டீஸ்கள் இருந்தால் அதை உள்ளே கொண்டு செல்ல முடியாது. இதை தடுக்க எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டப்படி ஏ4 ஷீட்டை.. நான்காக மடித்து.. லஞ்ச் பேக்கில் மறைத்து கொண்டு சென்றுள்ளனர்.

அதேபோல் யார் அந்த சார்? பேட்ஜை சட்டை பைக்குள் வைத்து அதற்கு முன் பக்கத்தில் ஜெயலலிதா புகைபடத்தை வைத்து மறைத்து உள்ளனர். அதிமுக இந்த போராட்டத்தை சட்டசபைக்கு உள்ளேயே கொண்டு வந்தது திமுகவை திரும்பி பார்க்க வைத்துள்ளதாம்.
சென்னை முழுவதும் அதிமுக சார்பில் யார் அந்த Sir? என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது... கடந்த 1 வாரமாக இந்த பிரச்சாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் சார் ஒருவரிடம் பேசியதாக புகார்கள் வைக்கப்பட்ட நிலையில்.. யார் அந்த சார்? என்று கேட்டு அதிமுக சார்பாக போஸ்டர் அடிக்கப்பட்டு உள்ளது.
கிட்டத்தட்ட அதிமுகவை இந்த பிரச்சாரம் தூக்கத்தில் இருந்து எழுப்பி உள்ளது. உறங்கிக்கிடந்த அதிமுக தொண்டர்கள் திமிறி எழுந்துள்ளன. அதிமுகவை லைம் லைட்டிற்கு கொண்டு வந்த இந்த பிரச்சாரத்திற்கு பின்னணியில் இருப்பது வேறு யாரும் இல்லை.. அது பிரஷாந்த் கிஷோர் என்று கூறப்படுகிறது.
அவர் தந்த ஐடியாவின் அடிப்படையிலேயே அதிமுகவின் இந்த போஸ்டர் பிரச்சாரம் திட்டமிடப்பட்டது என்று கூறப்படுகிறது. யார் அந்த Sir? என்ற போஸ்டர் கண்டிப்பாக மக்களிடம் சென்று சேரும் என்று அவர்தான் ஐடியா தந்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு:
சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபர் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
போலீசார் பதிவு செய்துள்ள எப்ஐஆரில்.. அந்த ஆள் தனியாக செய்யவில்லை என்று பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். அதோடு ஆடி காரில் ஒருவர் வந்ததாக கூறி உள்ளார்.
இதெல்லாம் போக.. உன்னுடைய வீடியோவை.. வைத்து இனி உன்னை அழைப்பேன். நீ வர வேண்டும். உன்னை ஒரு சாரிடம் கூட்டி செல்வேன். நீ ஒத்துழைக்க வேண்டும். நீ Sir ஒருவருடனும் இருக்க வேண்டும். தயாராக இரு என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
அந்த சார் யார்... அந்த சார் யார்.. அவர் பல்கலையில் வேலை செய்பவரா.. இல்லை வெளியே இருக்கும் ஏதாவது ஒரு சாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். அதிமுக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாம். பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பிரஷாந்த் கிஷோர் இப்போது வெளிப்படையாக பணிகளை செய்வது இல்லை. அவரின் நிறுவனம் மட்டுமே பணிகளை செய்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் இப்போதும் பிரஷாந்த் கிஷோர்தான். அவரின் ஐடியா பெயரிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறதாம்.
-
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications