அமைச்சர்களுக்கு கண்டம்.. அதிமுக தந்த அந்த "டிப்-ஆப்"..பொன்முடி, செந்தில் பாலாஜி.. அடுத்து அவரா?
சென்னை: திமுகவின் அமைச்சர்கள் பலர் அடுத்தடுத்து வழக்குகளில் சிக்க, கைதாக காரணமே அதிமுக லீகல் விங் கொடுக்கும் டிப் ஆப் தான் காரணம் என்று தகவல்கள் வருகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

அடுத்தடுத்த வழக்குகள்: இதையடுத்து ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு சொத்து குவிப்பு வழக்குகள் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ளன.
சூமோட்டோ வழக்குகள் மீதான விசாரணை வரும் பிப்ரவரி 5ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. தினசரி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, அமைச்சர் பதவியிழந்த பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்குகள் பிப்ரவரி மாதம் முழுக்க நடத்தப்பட உள்ளது.
திமுகவின் அமைச்சர்கள் பலர் அடுத்தடுத்து வழக்குகளில் சிக்க, கைதாக காரணமே அதிமுக லீகல் விங் கொடுக்கும் டிப் ஆப் தான் காரணம் என்று தகவல்கள் வருகிறது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் ஆனந்த் வெங்கடேசன் சுய மோட்டோ கேஸ் போட்டதுதான் இப்போது இந்த தீர்ப்பு வர காரணம். இதை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றம் சென்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் மற்ற அமைச்சர்கள் வழக்குகளில் விடுதலை ஆனதும் கூட சிக்கல் ஆகி உள்ளது. நீதி அரசர் ஆனந்த் வெங்கடேசன் விமர்சனம் செய்யப்பட்டு 1 பக்கத்திற்கு கட்டுரை முரசொலியில் எழுதப்பட்டது. இது எல்லாமே சிக்கலாகிவிட்டது,
அதோடு இல்லாமல் .. 2017ல் லஞ்ச ஒழிப்புத்துறை செய்த மேல்முறையீடு வாதங்களை இவர்கள் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதை தற்போது நீதிபதி ஜெயசந்திரன் கூறியுள்ளார். நீதி அரசர் ஆனந்த் வெங்கடேசன் திமுக அமைச்சர்கள் வழக்கை மட்டும் எடுக்கவில்லை. அதிமுக மாஜிக்கள் அமைச்சர்கள் வழக்கையும் எடுத்துள்ளனர்.
டிப் ஆப்: தற்போது வந்துள்ள தீர்ப்பு அதிமுகவிற்கு நல்ல டூல். அதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் நல்ல வாய்ப்பு. அதிமுக லீகல், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இந்த வழக்குகளை உன்னிப்பாக பாலோ செய்து கொண்டு இருக்கிறார்கள். அதிமுகவில் ஒரு லீகல் டீம் இதற்கு என்று உருவாக்கப்பட்டு திமுகவின் டாப் தலைவர்கள் மீதான வழக்குகள் ஆராய செய்யப்பட்டு வருகிறது.
அதை வெளியே கொண்டு வரும் பணிகளை அதிமுக செய்து வருகிறது. செந்தில் பாலாஜி வழக்கில் சட்ட ரீதியாக நெருக்கடி முற்ற காரணம் அதிமுக, பாஜகவும்தான். அதிமுக லீகல், பாஜக தலைவர் அண்ணாமலைதான் இதற்கான காரணம். சில வருமான வரித்துறை தகவல்கள் கூட.. பாஜக, அதிமுக கொடுத்த டிப் ஆப்தான் காரணம் என்கிறார்கள். வருமான வரித்துறைக்கு சில தகவல்களை கொடுப்பதே இந்த அதிமுக, பாஜக தலைகள்தான். ஆம்.. செந்தில் பாலாஜி அத்தனை இடங்களில் ரெய்டில் சிக்க அந்த டிப் ஆப்தான் காரணம்.
திமுகவிற்கு இது பெரிய நெருக்கடிதான். பதவியில் இருக்கும் அமைச்சர் நீக்கப்படுவது நெருக்கடிதான். செந்தில் பாலாஜியை இன்னும் அமைச்சராக நீடிப்பதும் நெருக்கடிதான். அவர் பதவியில் நீடிப்பதுதான் இன்னும் பிரச்சனை, என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications