10 சென்னை பெண் வீடியோக்கள்.. ஆனந்தபாபுவின் அசிங்கமான வேலை.. அடுத்தவரின் கட்டுமஸ்தான உடலே மூலதனம்
சென்னை: சென்னையைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் வேறு ஒருவரின் கட்டுமஸ்தான புகைப்படத்தை காட்டி இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அந்தரங்க வீடியோ அனுப்ப சொல்லி ரசித்து பார்த்த என்ஜினீயர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்,
சென்னையை சேர்ந்த மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் ஒருவர், 'இன்ஸ்டாகிராம்' மூலம் இளைஞர் ஒருவருடன் பழகியிருக்கிறார். ஒரு கட்டத்தில் மாலதியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய இளைஞர், அந்த பெண்ணிடம் அவரது ஆபாச வீடியோக்களை தனது 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார்.

திருமணம் செய்து கொள்ள போகிறவர் தானே என்று நினைத்து மாலதியும் அதேபோல் ஆபாச வீடியோக்களை அனுப்பி இருக்கிறார். இது போல் தொடர்ந்து அந்த இளைஞர் ஆபாச வீடியோ கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பெண் திட்டவட்டமாக மறுத்தார். உடனே அந்த இளைஞர், ஆபாச வீடியோ அனுப்பாவிட்டால், ஏற்கனவே நீ அனுப்பிய வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தனது பெற்றோர் மூலம் பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரேயா குப்தாவிடம் நேரில் சென்று புகார் அளித்தார். இதையடுத்து ஏழு கிணறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் இந்த வழக்கில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இளம்பெண் மாலதியிடம் ஆபாச வீடியோ கேட்டு மிரட்டியது கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ஆனந்த்பாபு(வயது 25) என்பதுஉறுதியானது. என்ஜினீயரிங் படித்துள்ள அவர், சென்னை போரூரில் உள்ள அவரது அண்ணன் வீட்டில் தங்கியிருந்தபடி, அவரது அண்ண நடத்தி வரும் எலெக்ட்ரானிக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து போலீசார் ஆனந்த்பாபுவை கைது செய்து ஏழுகிணறு போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று தீவிரமாக விசாரித்தனர்
அப்போது ஆனந்த் பாபுவுக்கு ஆபாச வீடியோக்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இதற்காக 'இன்ஸ்டாகிராமில்' போலியாக வெவ்வேறு பெயர்களில் 3 கணக்குகளை தொடங்கியிருக்கிறார். அத்துடன் காதல் வலை வீசியுள்ளார். ஆனால் தன்னை எந்த பெண்ணும் திரும்பி பார்க்காததால், வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் இருந்து அவரது கட்டுமஸ்தான உடல் அமைப்பை கொண்ட புகைப்படத்தை எடுத்து தனது புகைப்படம் போல் பதிவிட்டு வந்துள்ளார்.
அந்த கட்டுமஸ்தான புகைப்படத்தை பார்த்து அது ஆனந்த்பாபுதான் என நினைத்து, ஒரே நேரத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் அவருடன் தகவல் பரிமாற்றம் செய்து பழகி வந்திருக்கிறார்கள். அவர்களிடம் ஆனந்த்பாபு தனது முகத்தை காட்டாமலும், போனில் நேரடியாக பேசாமலும் வெறுமனே 'இன்ஸ்டாகிராம்' மற்றும் 'வாட்ஸ்அப்' மூலம் பேசி வந்துள்ளார்.
இதற்காக 'இன்ஸ்டாகிராமில்' பழகிய ஒரு பெண்ணிடம், "நான் வெளிநாட்டிலிருந்து வந்தவன் என்பதால் இங்கு சிம்கார்டு வாங்க நேரமில்லை. எனவே உங்கள் செல்போன் எண்ணில் நான் 'வாட்ஸ் அப்' மட்டும் பயன்படுத்தி கொள்கிறேன் என்று அதன் மூலமே பேசி வந்துள்ளார்.
தன்னுடன் 'இன்ஸ்டாகிராமில்' பெண்களிடம் ஆனந்த்பாபு, மயக்கும் வகையில் பேசுவதுடன், அவர்களை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி வலையில் வீழ்த்தி வந்துள்ளார். அத்துடன் அந்த பெண்களிடம் உங்கள் ஆபாச வீடியோக்களை 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி வைக்கும்படி கூறுவாராம். அவரது பேச்சில் மயங்கி பெண்களும், அதுபோல் அனுப்பி வைக்க, அதனை அவ்வப்போது பார்த்து ரசித்து வந்திருக்கிறார்.
அதேநேரம் அப்படி வீடியோ எடுத்து அனுப்ப மறுக்கும் பெண்களிடம் ஏற்கனவே அனுப்பிய ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவார். இதனால் பயந்து போன பலர், வேறு வழி தெரியாமல் அவர் சொன்னபடி ஆபாச வீடியோக்களை அனுப்பி வந்துள்ளார்கள்.
ஆனந்த்பாபுவின் செல்போனில் இதுபோல் 10-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கைதான ஆனந்த்பாபுவை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு புழல் சிறையில் போலீசார் அடைத்துள்ளனர். காதலன் தானே கேட்கிறான் என்று நினைத்து எந்த பெண்ணும் இதுபோல் புகைப்படங்களை அல்லது வீடியோக்கள் அனுப்பிவிட வேண்டாம். இதுபின்னாளில் பேராபத்தில் முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications