ஆட்டோவை வைத்து ஆட்டத்தை முடித்த சீமான்! அடடா இதெல்லாம் வேற லெவல் ஆச்சே! மேலிடத்திற்கு போன ரிப்போர்ட்
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி குறித்த ரிப்போர்ட் ஒன்று மேலிடத்திற்கு சென்றுள்ளதாம். லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக பல்வேறு ரிப்போர்ட்டுகள் அரசுக்கு சென்று கொண்டு இருக்கிறதாம்.
அதாவது தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. யாருக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளது. யார் எங்கே வெற்றிபெறுவார்.. எவ்வளவு வாக்கு வித்தியாசம் உள்ளது என்றெல்லாம் ரிப்போர்ட் சென்று கொண்டு இருக்கிறதாம்.

பொதுவாக லோக்சபா தேர்தல் முடிந்தால் கட்சிகளுக்கு மாவட்ட செயலர்கள் கொடுக்கும் இது போன்ற ரிப்போர்ட்டுகள் செல்வது வழக்கம். அதுவே ஆளும் கட்சி என்றால் மாவட்ட செயலாளர்கள் மட்டுமின்றி உளவுத்துறை கொடுக்கும் ரிப்போர்ட்டும் கூடுதலாக செல்லும், உளவுத்துறை பொதுவாக ஆளும் கட்சிக்கு எத்தனை இடங்கள் சாதகமாக இருக்கும், எத்தனை இடங்கள் எதிராக செல்லுங்கள், எங்கெல்லாம் அளவும் கட்சி வெல்ல வாய்ப்பு உள்ளது, எங்கெல்லாம் ஆளும் கட்சி சறுக்க வாய்ப்பு உள்ளது என்பதை தெரிவித்துவிடும்.
அதேபோல் எந்த இடங்களில் எல்லாம் இழுபறி நீடிக்கும் என்றும் ரிப்போர்ட் சென்றுவிடும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.
ரிப்போர்ட் சொல்வது என்ன?: இப்படிப்பட்ட நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளது. அதன்படி தேர்தல் தொடர்பாக வந்த முக்கோண ரிப்போர்ட் அது என்கிறார்கள். பென் என்ற திமுகவிற்கு நெருக்கமான அமைப்பு நடத்திய சர்வே + உளவுத்துறை சர்வே + மாவட்ட நிர்வாகிகள் எடுத்த சர்வே.
திமுக தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 40ல் வெல்லும். கோவையில் திமுகவே வெல்லும். அங்கே இரண்டாம் இடம் அதிமுகவிற்கு கிடைக்கும். வட மாவட்டங்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும். திருச்சி, பொள்ளாச்சி, ஈரோடுகளில் லேசான இழுபறி இருந்தாலும் திமுகவே வெல்லும். ஆனால் தென் மாவட்டங்களில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லாது. காரணம் அங்கே வாக்குகள் கடுமையாக பிரிந்துள்ளது என்று ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.
இந்த ரிப்போர்ட் மொத்தமாக திமுகவிற்கு ஆதரவாகவே சென்றுள்ளதாம்.
மாற்று கட்சிகள்: அதே சமயம் மாற்று கட்சிகள் பற்றிய ரிப்போர்டும் சென்றுள்ளதாம். அதில் அதிமுக இரண்டாவது பெரிய கட்சியாக நீடிக்கும். தென் மாவட்டங்களில் இடங்களில் பாஜக இரண்டாம் இடம் வரலாம். நாம் தமிழர் கட்சி தென் மாவட்டங்களில் முன்பு எடுத்ததை விட குறைவாக வாக்கு சதவிகிதம் எடுக்கும்.
கரும்பு விவசாயி சின்னம் இழந்தது அந்த கட்சிக்கு சிக்கலாகி உள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி சென்னையில் ஆட்டோவை வைத்து தெரு தெருவாக சின்னத்தை கொண்டு செல்ல பணிகளை செய்தது. இதனால் சென்னையில் மைக் சின்னம் சென்று சேர்ந்துள்ளது.
சென்னையில் ஆட்டோ மூலம் செய்த பிரச்சாரம் மைக் சின்னத்தை பிரபலப்படுத்தி உள்ளது. அதனால் அங்கே நாம் தமிழர் கட்சிக்கு நல்ல வாக்கு வங்கி கிடைக்கும். மற்றபடி வட மாவட்டங்களில் பெரிதாக கிடைக்காது என்று ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications