குமார் + நாகராஜ் + கேகேஎஸ்எஸ்ஆர்.. ஸ்டாலினின் "மூவர்" டீம்.. அம்மாடி ரூ.1000 கோடியா.. அலறிய அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அதிமுக பிரமுகரின் நிலத்தை மீட்பதற்கு பின் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாடு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட, கடந்த அரசால் இலவசமாக வழங்கப்பட்ட அரசு நிலங்கள் பல மீட்கப்பட்டு வருகின்றன. அரசுக்கு சொந்தமான இந்த நிலங்களை அதிரடியாக அரசு அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.

 How did CM M K Stalin team recover Agri Horticultural Land worth Rs.1000 crore in Chennai?

உதாரணமாக தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கோவில் நிர்வாகம் மற்றும் சொத்துக்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக கோவில் சொத்துக்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றப்படும் என்று ஏற்கனவே சேகர் பாபு அறிவித்து இருந்தார்.

அதன்பின் சாலிகிராமம், காந்தி நகர் பகுதியில் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.250 கோடி ஆகும். அமைச்சரின் முயற்சியால் இந்த நிலம் மீட்கப்பட்டது. 36,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் 4,78,272 ஏக்கர் உள்ளது.

இவை அரசு ஆவணங்களிலும் சமீபத்தில் ஏற்றப்பட்டு பொதுவில் பதிவேற்றப்பட்டது. இந்த நிலையில்தான் சென்னையில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி ஆக்கிரமித்து வைத்து இருந்த நிலம் இன்று மீட்கப்பட்டது. அண்ணாசாலையில் அமெரிக்க துணை தூதரகம் அருகே இருக்கும் இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது.

ரூ1,000 கோடி மதிப்பிலான 115 கிரவுண்ட் நிலம் அதிரடியாக அரசு அதிகாரிகள் மூலம் நேற்று மீட்கப்பட்டு இரவோடு இரவாக சீல் வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தோட்டக் கலை துறைக்கு சொந்தமான நிலம் ஆகும் இது.

1989-ம் ஆண்டு முதல் இவர் ஆக்கிரமித்த பல்வேறு நிலங்களை மீட்க தமிழ்நாடு அரசு முயன்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில், 20 ஏக்கர் நிலம் நிலம் அரசு மூலம் மீட்கப்பட்டது. இந்த மீட்கப்பட்ட நிலம்தான் ஜெமினி பாலத்திற்கு கீழ் உள்ள செம்மொழி பூங்கா நிலம் ஆகும்.

இங்கே மீதம் இருந்த நிலங்களை மீட்க முடியாமல் அரசு கஷ்டப்பட்டு வந்தது. கோர்ட்டில் நடந்த சட்ட போராட்டம் காரணமாக நிலத்தை மீட்க முடியாமல் அரசு திணறி வந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு விசாரணை நடந்து வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் இதில் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. தோட்டக் கலை துறை நிலத்தை மீட்கலாம் என்று உத்தரவிட்டது. இதையடுத்தே ரூ1,000 கோடி மதிப்பிலான 115 கிரவுண்ட் நிலம் அதிரடியாக அரசு அதிகாரிகள் மூலம் நேற்று மீட்கப்பட்டு இரவோடு இரவாக சீல் வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தோட்டக் கலை துறைக்கு சொந்தமான நிலம் ஆகும் இது.

இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் சந்தித்து, சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 115 கிரவுண்ட் நிலம் சட்டப்போராட்டம் நடத்தி மீட்கப்பட்டதையொட்டி வாழ்த்துப் பெற்றார்.

உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், நில நிருவாக ஆணையர் எஸ். நாகராஜன், ஆகியோர் இருந்தனர். நாகராஜன், குமார், வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய டீமின் சட்ட போராட்டம், அவர்கள் களமிறங்கிய ஆவணங்கள் இவைதான் அதிமுக கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து நிலத்தை மீட்க முக்கிய காரணம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+