"ஆளுநர்".. இது தப்பா இருக்கே.. இரவே சுதாரித்த ஸ்டாலின்! டெல்லிக்கு போங்க.. டீமை அனுப்பிய துரைமுருகன்
சென்னை: தமிழ்நாட்டில் ஆளுனர் ஆர். என் ரவிக்கும் - முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில்தான் திமுக சார்பாக ஒரு டீம் டெல்லிக்கு சென்றுள்ளது. இந்த முடிவிற்கு பின் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான ஆலோசனை ஒன்றை செய்து அதன்பின் முடிவு ஒன்றை எடுத்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும்.. முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையில் மோதல் அடுத்த லெவலை அடைந்து உள்ளது. இத்தனை நாட்கள் அறிக்கை, கட்டுரை, பேட்டி என்று மோதல் நிலவி வந்தது. இந்த மோதல் தற்போது சட்டசபையிலேயே மோதிக்கொள்ளும் அளவிற்கு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியின் சட்டசபை உரைக்கு எதிராக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். ஆளுநர் ஆர். என் ரவியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் செய்தது என்ன?
தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார். ஆளுநர்கள் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே பேச வேண்டும் என்பதுதான் சட்டம். இதுதான் சட்டசபை விதி. ஆனால் ஆளுநர் ஆர். என் ரவி இந்த விதியை மீறி உள்ளார். ஆளுநர் ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார். அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன.

ஆளுநர் பேசவில்லை
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் பெயர்களையும் ஆளுநர் ஆர். என் ரவி பேசாமல் தவிர்த்து இருக்கிறார். இதையடுத்து ஆளுனர் ஆர். என் ரவியின் பேச்சுக்கு எதிராக தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கொண்டு வந்தார். ஆளுநரின் உரையை நீக்கிவிட்டு உண்மையான உரையை பதிவு செய்யும்படி முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இந்த தீர்மானம் சட்டசபையில் வெற்றிபெற்ற நிலையில், ஆளுநர் ரவியின் பேச்சு நீக்கப்பட்டு, உண்மையான அரசு தயாரித்த உரை சட்டசபை பதிவில் ஏற்றப்பட்டது.

மோதல்
இந்த மோதல் உச்சம் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு அரசுக்கு பதிலடி தரும் விதமாக ஆளுநர் ஆர். என் ரவி தனது பொங்கல் அழைப்பிதழில் தமிழக அரசு என்று குறிப்பிட்டு உள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி அனுப்பி இருக்கும் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம்பெற்று இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 12ம் தேதி மாலை இந்த பொங்கல் விழா நடக்கிறது. இந்த பொங்கல் விழாவிற்கு ஆளுநர் சார்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சட்டசபையில் உள்ள கட்சிகள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு சென்றுள்ளது. இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம்பெற்று உள்ளது.

பதிலடி
இந்த நிலையில் ஆளுநருக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக நேற்று முதல்வர் ஸ்டாலின் டாப் அமைச்சர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறதாம். முதலில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தாக்கல் செய்யலாம். ஆனால் அதிலேயே ஆளுநரின் உரை சரியில்லை என்று அவருக்கு வருத்தம் தெரிவிக்கும் வாசகங்களும் இடம்பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்பின் ஆளுநருக்கு எதிராக கோர்ட்டுக்கு செல்லலாமா? அவர் தமிழகம் என்று சொல்வதற்கு எதிராக செல்லலாமா என்று ஆலோசனை செய்துள்ளனர்.

முடிவு
ஆனால் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்ட சிலரோ.. இப்போது கோர்ட்டுக்கு போக வேண்டாம். கோர்ட் வழக்குகளை தனியாக பார்த்துக்கொள்ளலாம். ஆளுநர் சட்டசபையில் விதி மீறியதை அங்கேயே தீர்மானம் மூலம் நிராகரித்துவிட்டோம். அதனால் அது தொடர்பாக நாம் கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய அவசியமும் கிடையாது. தமிழ்நாடு வார்த்தை பிரயோகம் தொடர்பாக கோர்ட் செல்வது பற்றி பின்னர் யோசிக்காமல்., இப்போது யோசிக்க வேண்டியது எல்லாம் ஆளுநருக்கு எதிராக டெல்லியில் பிரஷர் கொடுக்க வேண்டும் என்று பேசி உள்ளனர்.

டெல்லி பேச்சு
இதையடுத்தே முதல்வர் ஸ்டாலின் எம்பிக்களை டெல்லிக்கு அனுப்பலாம். சட்டசபை நடக்கிறது. அதனால் அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்ப முடியாது. அதனால் எம்பிக்களை டெல்லிக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்துள்ளனர். இந்த ஆலோசனை எல்லாம் 9ம் தேதி இரவு செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து நேற்று பிற்பகலில் திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, ஆ ராசா ஆகியோர் டெல்லி செல்வதாக முடிவு செய்யப்பட்டது. ஆளுநரின் செயல் தவறு. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் முறையிடும் விதமாக தமிழ்நாடு அரசு இந்த மூவை செய்துள்ளது. ஆளுநர் பற்றிய முறையான அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த அறிக்கை தமிழ்நாடு எம்பிக்களுக்கு மெயில் மூலமாக அனுப்பப்படும். இந்த அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் தமிழ்நாடு எம்பிக்கள் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications