ஸ்டாலின் போன் செய்யும் நேரத்தில் நடந்த சம்பவம்.. வாடிய பிரக்ஞானந்தா முகம்.. அடுத்து நடந்த சுவாரசியம்
சென்னை; செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலினும் போன் செய்த போது என்ன நடந்தது?இந்த போன் கால் இணைப்பு எப்படி ஏற்படுத்தப்பட்டது என்ற விவரம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா உலகம் முழுக்க கவனிக்கப்பட்டு வருகிறார். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அவர் ஆடிய விதம் பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றுள்ளது. அஜர்பைஜான் நாட்டில் உலகக்கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதன் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயது வீரர் பிரக்ஞானந்தா வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

உலகின் நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், டை பிரேக்கர் வரை சென்ற ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வென்று பைனலுக்கு சென்றார். பைனலில் மேக்னஸ் கார்ல்சன் உடன் நடந்த ஆட்டத்தில் முதல் இரண்டு சுற்றுகள் டிராவில் முடிய 3வது சுற்றில் பிரக்ஞானந்தா டை பிரேக்கரில் தோல்வி அடைந்தார்.
இதன் மூலம் அஜர்பைஜான் நாட்டில் நடந்த உலகக்கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார். அவர் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்றாலும் உலக நாடுகள் அவரின் ஆட்டத்தை பாராட்டி வருகின்றன.
முதல்வர் ஸ்டாலினும் கூட பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டுகளை தெரிவித்தார். அதில், செஸ் உலகக்கோப்பை போட்டியில் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இறுதிப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்க்கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து மிளிருங்கள்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதோடு பிரக்ஞானந்தாவின் அம்மாவிற்கு போன் செய்து அவரிடம் தனது பாராட்டுகளை தெரிவித்தார். பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலின் போன் செய்த நிகழ்வு வீடியோவாகவும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலினும் போன் செய்த போது என்ன நடந்தது?இந்த போன் கால் இணைப்பு எப்படி ஏற்படுத்தப்பட்டது என்ற விவரம் வெளியாகி உள்ளது.
போன் பிரச்சனை: இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியும் , எழுத்தாளருமான ஸ்ரீதரன் மதுசூதனன் போஸ்ட் செய்துள்ளார். அதில், FIDE உலகக்கோப்பை நிறைவு விழாவுக்கு வந்து உட்கார்ந்த பிரக்ஞானந்தா Praggnanandhaa R. முகம் சரியாயில்லை. "என்னப்பா?" என்றேன்.
தமிழக முதல்வர் M. K. Stalin அவர்கள் பிரக்ஞானந்தாவையும் அவரது அம்மா நாகலட்சுமியையும் காணொளி வழியே அழைத்து வாழ்த்திப் பாராட்ட விரும்புவதாக முதல்வர் அலுவலகத்திலிருந்து சொன்னார்களாம். ஆனால், பிரக்ஞானந்தாவின் தொலைபேசி இணைப்பு சரியாக வேலை செய்யவில்லை.
நான் எனது தொலைபேசி இணைப்பிலிருந்து hotspot கொடுத்தும் இணைப்பு வேலை செய்கிறதா என்று சந்தேகமாகவே இருந்தது.
உலகக்கோப்பை பரிசளிப்பு விழா துவங்கிவிட்டது. எக்கணமும் அவரை மேடைக்கு அழைக்கலாம் என்கிற சூழல். இந்தியா நேரமோ இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது என்பதால் விழா முடிந்ததும் பேசலாம் என்பதும் சாத்தியமில்லை.
தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் @rpragchess பிரக்ஞானந்தாவையும் அவரது அம்மா நாகலட்சுமியையும் காணொளி வழியே அழைத்து வாழ்த்திப் பாராட்ட விரும்புவதாக முதல்வர் அலுவலகத்திலிருந்து சொன்னார்களாம். ஆனால், பிரக்ஞானந்தாவின் தொலைபேசி இணைப்பு சரியாக வேலை செய்யவில்லை... https://t.co/GRl4gBztNZ pic.twitter.com/zq6iFSj6GW
— 🚶🏽பயணி தரன் (@PayaniDharan) August 25, 2023
முதல்வர் அலுவலகத்துக்கு என்னுடைய தொலைபேசி எண் தந்து அழைக்கச் சொன்னேன். முதல்வர் லைனில் வரும்முன்பு, "வணக்கம் சொல்லு, நல்லா பேசு" என்று நாகலட்சுமி பிரக்ஞானந்தாவுக்குச் சொன்னார். தில்லிக்கு ராஜான்னாலும் அம்மாவுக்குப் பிள்ளை தானே., என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications