இங்கே ஆத்மாவும் எழுந்து ஆடும்! சிஎஸ்கேவிற்கு வந்ததும் மாறிய ரஹானே ஆட்டம்! பின்னணியில் இதான் சூட்சமம்
சென்னை: நேற்று சிஎஸ்கே மும்பை இடையிலான போட்டியில் ரஹானே ஆடிய விதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
மும்பைக்கு எதிரான ஐபிஎல் 2023 ஆட்டத்தில் சிஎஸ்கே அணி அதிரடி வெற்றி பெற்றுள்ளது. முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்டனர், ஜடேஜாவின் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. சான்டனர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் வெறும் 157-8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி எளிதாக 159-3 ரன்களை எடுத்து வென்றது.

ரஹானே 27 பந்தில் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் என்று மொத்தம் 61 ரன்களை எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார். டெஸ்ட் பவுலர் என்று கருதப்பட்டு வந்த அவரின் இந்த சிறப்பான பவுலிங் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி , ஷிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னர், சிசண்டா மகலா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் களமிறங்கினர். இம்பாக்ட் வீரராக பேட்டிங் இறங்கும் போது ராயுடு மட்டும் களமிறங்கினார்.

நேற்று இந்த போட்டியில் ரஹானே ஆடிய விதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. முழுக்க முழுக்க ஆட்டம் அவர் கட்டுப்பாட்டில் இருந்தது. சரியான கண்ட்ரோலில் அவர் துல்லியமாக பேட்டிங் செய்தார். எங்கேயுமே அவர் பால்ஸ் ஷாட் அடிக்கவில்லை. இங்கே சொதப்பிவிடுவார் என்று கூறும் அளவிற்கு அவரின் பேட்டிங் எங்குமே சொதப்பலாக இல்லை.
முக்கியமாக அவர் பவுண்டரி அடித்த சமயங்களில் எல்லாம் முழு கண்ட்ரோலில் இருந்தார். சரியான டைமிங்கில், நன்றாக இவர் கேப்பை பார்த்து துல்லியமாக ஆடிய விதம் இவரின் அனுபவத்தை அப்படியே வெளிக்காட்டியது. சிஎஸ்கே அணியில் பொதுவாக மறைந்து போன ஆன்மா வந்தால் கூட அசத்தல் ஆட்டம் போடும். அதை நேற்று ரஹானேவும் செய்து காட்டினார்.
பெங்களூரில் அணியால் இவர் இனி வேலைக்கு ஆக மாட்டார் என்று விரட்டப்பட்ட வாட்சன் சிஎஸ்கே வந்து மிக சிறப்பாக ஆடினார். அதேபோல் மொயின் அலி, துபே போன்றவர்களும் அவ்வளவுதான் என்று கருதப்பட்ட போது சிஎஸ்கேவில் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.
மும்பை போன்ற அணியால் அம்பதி ராயுடு ஓரம்கட்டப்பட்ட பின்பும் கூட சிஎஸ்கே வந்து தொடர்ச்சியாக ராயுடு சிறப்பாக ஆடிக்கொண்டு இருக்கிறார். மேலும் ராபின் ஊத்தாப்பாவை ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மாறி மாறி ஆட வைத்து கேம் ஆடிக்கொண்டு இருந்த நிலையில் சிஎஸ்கே அவரை சிறப்பாக பயன்படுத்தி, கடந்த சீசனுக்கு முந்தைய சீசன் கோப்பை அடிக்கவும் காரணமாக இருந்தது.

தற்போது அதேபோல்தான் பார்ம் அவுட் ஆகிவிட்டார் என்று கருதப்பட்ட ரஹானேவை எடுத்து.. டி 20 வீரர் இல்லை என்று கருதப்பட்ட வீரரையே வைத்து டி 20 போட்டியில் சிஎஸ்கே அணி வென்றுள்ளது மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதற்கு முன்பாகவே ரஹானே தனது டி 20 போட்டி திறனை வெளிப்படுத்தி உள்ளது.
சையது முஸ்தாக் கோப்பை தொடரில் மும்பை அணிக்காக இவர் அடுத்தடுத்து பல அரை சதங்களை அடித்துள்ளார். ஒரு போட்டியில் 50 பந்தில் 74 ரன்கள் அடித்து மிரட்டினார். கடந்த இரண்டு சீசன்களாக சையது முஷ்டாக் டி 20 கோப்பை தொடரில் இவர் சிறப்பாக ஆடி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் சிஎஸ்கே இவரை நம்பி அணியில் எடுத்தது மட்டுமின்றி அவரை சிறப்பாக பயன்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications