எடப்பாடி சாதிச்சிட்டாரே.. பாஜக பக்கம் போக இருந்த பாமகவை.. பிடித்து இழுத்தது எப்படி? 2 பெரிய சீக்ரெட்
சென்னை: பாஜக கூட்டணிக்கு செல்ல இருந்த பாமகவை அதிமுக தங்கள் பக்கம் பிடித்து இழுத்துள்ளதாம். நாளை அல்லது அதிகபட்சம் நாளை மறுநாள் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்.. ஆனால் பாமகவை அதிமுக தங்கள் பக்கம் இழுத்தது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.
பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய ஆஃபர் ஒன்றை பாமகவிற்கு கொடுத்துள்ளாராம். அதிமுக சார்பாக பாமகவின் நிறுவனர் ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போது வைக்கும் கூட்டணியை 2026லும் தொடரலாம். நாம் சேர்ந்தால் சில இடங்களில் 2ம் இடம் அல்ல வெற்றிபெறும் வாய்ப்பு கூட உள்ளது. பாஜக கூட்டணியில் அதற்கு வாய்ப்பு இல்லை.

அன்புமணியிடம் பேசுங்கள். நீங்கள் விரும்பும் தொகுதியை கண்டிப்பாக கொடுக்கிறோம் என்று அதிமுக சார்பாக பேசப்பட்டு இருக்கிறது. எடப்பாடி கொடுத்த இந்த ஆஃபர்தான் பாமகவை அதிமுக பக்கம் இழுத்துள்ளதாம்.
2026 தேர்தலில் அதிமுக கூட்டணி நல்ல பலன் தரும் என கட்சிகாரர்கள் சொல்கிறார்கள் என சொல்லி அதிமுக உடன் கூட்டணி வைக்க பாமக முடிவு செய்துள்ளதாம் . 7 லோக்சபா சீட், 1 ராஜ்ய சபா சீட் என்று உறுதியாகி இருக்கிறதாம்.
இதை உறுதி செய்யவே சென்னையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக எம்எல்ஏ அருள் சந்திப்பு நடத்தினாராம். எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் உள்ள சேலம் தொகுதியை கூட கொடுக்கிறோம். அதை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்களே நில்லுங்கள். ஆனால் அதிமுக கூட்டணிக்கு மட்டும் வந்துவிடுங்கள் என்று எடப்பாடி கோரிக்கை விடுத்துள்ளாராம்.
இதனால்தான் பாமக அதிமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற முடிவை ஏற்கனவே எடுத்து உள்ளதாம்.
நழுவவிட்டு பாஜக: பாமக கூட்டணி: முதலில் பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணி நினைத்தாராம். கிட்டத்தட்ட அடம் பிடித்தாராம். பாஜகவுடன் கூட்டணி வைத்தால்.. எப்படியும் பாஜக மீண்டும் வெல்லும்.. அதன் மூலம் லோக்சபா தேர்தலில் நாமும் வென்று அமைச்சர் ஆகலாம் என்று அன்புமணி நினைக்கிறாராம். அதன்படி லோக்சபா தேர்தலில் அன்புமணிக்கு தர்மபுரி தொகுதியை மீண்டும் கொடுக்க வேண்டும். அங்கே திமுக தற்போது வலிமை இழந்துவிட்டது.
அன்புமணி அங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். மொத்தமாக 10 இடங்களில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இடங்களை குறைத்துக்கொண்டு.. அன்புமணிக்கு "மீண்டும்" ராஜ்ய சபை செல்ல வாய்ப்பு + அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பாமக சார்பாக பாஜகவிடம் அன்புமணி கோரிக்கை வைத்து உள்ளாராம்..
அன்புமணி 10 லோக்சபா சீட் + 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கேட்க.. 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கிடையாது. 4 லோக்சபா சீட் என்று பாஜக கூறியுள்ளாதாம். இதையடுத்து பாமக இறங்கி வந்து 10 லோக்சபா சீட் + அமைச்சர் பதவி என்றுள்ளதாம். இதையடுத்து 10 லோக்சபா சீட் ஓகே + மத்திய பிரிவுகளில் பெரிய பதவி ஒன்று + பாமகவில் ஒருவர் எம்பி ஆனால் அமைச்சர் பதவி பற்றி பார்க்கலாம் என்று பாஜக சொல்லி இருக்கிறதாம்.
ஆனால் அன்புமணிக்கு எதிரான வழக்கில் இருந்து விடுதலை எல்லாம் செய்ய வாய்ப்பு இல்லை என்று டெல்லி மறுத்துவிட்டதாம். மேலும் ராஜ்ய சபா சீட் கொடுக்கவும் வாய்ப்பு இல்லை என்று பாஜக கூறியதால் பாமக அதிமுக பக்கம் சென்றுள்ளதாம்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்!












Click it and Unblock the Notifications