பண்ணை வீட்டுக்கு போங்க! அடிமடியிலேயே கை வைத்த எடப்பாடி! ஏதும் புரியாமல் "வெலவெலத்த" ஓபிஎஸ்! பரபரப்பு
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் அடுத்தடுத்த அதிரடி மூவ்களால் ஓபிஎஸ் தரப்பு கொஞ்சம் ஆடிப்போய்தான் இருக்கிறதாம்.. அப்படி என்ன நடந்தது?
கோலிவுட்டில் 2000களில் வந்த ஆக்சன் படங்களுக்கு என்று ஒரு தீம் இருக்கும்.. வில்லன் ஒரு தவறு செய்வார்.. அதற்கு ஹீரோ பதிலடி கொடுப்பார்.. பின்னர் மீண்டும் வில்லன் ஹீரோவிற்கு பதிலடி கொடுக்க.. இடை இடையே ஆக்சன், காமெடி, எமோஷன் என்று அப்படியே மாறி மாறி விறுவிறுப்பாக கதைகள் நகரும்.
அதற்கு கொஞ்சமும் குறையாத விறுவிறுப்போடு நகர்ந்து கொண்டு இருக்கிறது அதிமுக உட்கட்சி மோதல். ரரக்கள் மோதலை படமா எடுத்து வெளியிட்டா.. ஆர்ஆர்ஆர் வசூலையே மிஞ்சுடும் போல என்று சொல்லும் அளவிற்கு ரத்தத்தின் ரத்தங்கள் ரத்த காயம் வரும் அளவிற்கு மோதி வருகிறார்கள்.

தற்போதைய நிலவரம்
அதிமுகவில் தற்போதைய நிலவரப்படி எடப்பாடி தரப்புதான் வலுவாக இருக்கிறது. ஓபிஎஸ்ஸுக்கு தொண்டர்கள் தரப்பு வலுவாக ஆதரவு கொடுத்து வருகிறது. அதாவது மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் அல்லாமல் கடைநிலை தொண்டர்கள், பொதுக்குழு, செயற்குழுவில் இல்லாத தொண்டர்கள் ஆதரவே ஓபிஎஸ் தரப்பிற்கு அதிகம் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள்தான் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சென்னையில் அதிமுக அலுவலகம் முன்பும், ஓபிஎஸ் வீடு முன்பும் கூடி அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

எடப்பாடி ஆதரவு
எடப்பாடிக்கு இன்னொரு பக்கம் எம்எல்ஏக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. ஓபிஎஸ் தரப்பிற்கு 74 மாவட்ட செயலாளர்களில் 64 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளதாகவும், ஓபிஎஸ்ஸுக்கு மீதம் உள்ள 6 பேர் ஆதரவு தருவதாகவும். 4 பேர் இருவருக்கும் ஆதரவு தரவில்லை என்று கூறப்படுகிறது. எம்எல்ஏக்கள் தரப்பில் 55 எம்எல்ஏக்கள் எடப்பாடி ஆதரவில் இருப்பதாகவும் 4-6 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் டீமில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிர்ச்சி
நேற்றுதான் எடப்பாடிக்கு ஆதரவாக நிர்வாகிகள் வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். எடப்பாடியை நேரில் சந்தித்தும்.. மாவட்டங்களில் கூட்டம் கூட்டியும் அவருக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். இதில் ஆச்சர்யப்பட வைத்த விஷயம் என்றால் அது தேனி மாவட்ட அரசியல்தான். தேனி மாவட்டத்தின் முக்கிய அதிமுக தலைகள் பலரும் எடப்பாடியை சந்தித்து ஆதரவு அளித்துள்ளனர். கம்பம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஜக்கையன் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
Recommended Video

நிர்வாகிகள் ஆதரவு
அதேபோல் கிருஷ்ண குமார், முருக்கோடை ராமர், பொன் முருகன், அன்னப்பிரகாஷ், சோலைராஜ், வைகைபாண்டி உள்ளிட்ட அதிமுகவின் பல்வேறு முக்கிய தேனி மாவட்ட நிர்வாகிகள் மொத்தமாக ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு வழங்கி உள்ளனர். இவர்களில் பலர் ஒரு காலத்தில் ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமாக இருந்தனர். உட்கட்சி தேர்தல் சமயத்தில் கூட இதில் சிலர் ஓபிஎஸ் டீமில்தான் இருந்தனர். ஆனால் இப்போது திடீரென எடப்பாடி கேம்பிற்கு மொத்தமாக ஜம்பாகி உள்ளனர்.

அதிர்ச்சி
இந்த சம்பவத்தால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேனி ஓபிஎஸ் கோட்டை. இங்கு இருக்கும் பலர் ஓபிஎஸ்ஸுக்கு ஜாதி ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் நெருக்கம். ஆனால் அப்படிப்பட்டவர்களையே எடப்பாடி தன் பக்கத்திற்கு இழுத்துள்ளதை ஓபிஎஸ் தரப்பால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஓபிஎஸ் மீதம் இருக்கும் நிர்வாகிகளிடம் அவசர அவசரமாக ஓபிஎஸ் போனில் பேசி இருக்கிறாராம்.

ஆதரவு
தேனியில் இருந்து பொதுக்குழுவில் இருக்கும் நபர்களின் லிஸ்டை எடுங்கள். அதில் யாரெல்லாம் எடப்பாடிக்கு ஆதரவு என்று பாருங்கள். நிலைமை கைமீறி போய்விட கூடாது என்று உத்தரவிட்டு இருக்கிறாராம். மேலும் நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் தாவுவதை தவிர்க்கும் வகையில், தேனி மாவட்டச் செயலாளர் சையதுகானுக்கு சில உத்தரவுகளை ஓபிஎஸ் போட்டுள்ளாராம். அந்த உத்தரவின் பெயரில் இப்போது சையது கான் காய்களை நகர்த்தி வருகிறார்.

பண்ணை வீடு
அதன்படி சையதுகான் தலைமையில் இன்று ஓபிஎஸ் பண்ணைவீட்டில் நிர்வாகிகள் ஆலோசனை நடக்க உள்ளது. எடப்பாடியை சந்தித்த நிர்வாகிகள் உட்பட எல்லோரையும் பண்ணை வீட்டுக்கு வாங்க என்று சையது கான் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் ஆதரவை மீண்டும் பேர் ஓபிஎஸ் இந்த முயற்சியை மேற்கொண்டு இருக்கிறாராம். இன்று பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள அந்த வீட்டில்.. எடப்பாடிக்கு எதிராக இவர்கள் இணைந்து ஆலோசனை நடத்த உள்ளனராம்!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications