எடப்பாடி சொதப்பிட்டாரே.. ஜெயலலிதா இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா? திமுகவுக்கு இது "கேக் வாக்"
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் மற்றும் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தம் 14 மேசைகளில், 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் என்ற அதிமுகவின் நிலைப்பாடு, அக்கட்சியை மேலும் வலுவிழக்கவே செய்யும் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இது ஜெயலலிதா எடுக்காத அரசியல் முடிவு.

முன்பு ஜெயலலிதா இடைத்தேர்தலை புறக்கணித்து இருக்கிறார். ஆனால் அவர் புறக்கணித்த போது, மூன்றாவது அணி எதிர்திசையில் இல்லை. அப்போது என்டிஏ கூட்டணி பெரிதாக இல்லை. பாஜக கூட்டணியின் வாக்கு வங்கியும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழல் வேறு.
திமுகவிற்கு எதிர்கட்சி அதிமுக தான் என நிரூபிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பை அதிமுக இழந்திருக்கிறது. இந்த இடத்தை பாஜகவிற்கு அள்ளிக் கொடுத்துள்ளது. பாஜக கூட்டணி 'எதிர்கட்சி’ என்ற சான்சை அதிமுகவே உருவாக்கி கொடுத்துள்ளது.
கேக் வாக்: அதோடு அதிமுக இல்லாமல் போனது திமுகவிற்கு தேர்தலை கேக் வாக் ஆக்கி உள்ளது. ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த சூழ்நிலையில் கண்டிப்பாக போட்டியிட்டு இருப்பார். ஆனால் எடப்பாடி திடீரென பின்வாங்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு ஆனது. அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அப்படி இருக்க 82.48% வாக்குகள் பதிவானது.
இதன் அர்த்தம் அதிமுக தேர்தல் புறக்கணிப்பை மக்கள் கண்டுகொள்ளவில்லை. அதிமுகவிற்கு பாரம்பரியமாக வாக்களிக்கும் மக்களும் அதிமுக இல்லை என்றாலும் கவலைப்படாமல் வந்து வாக்களித்து உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட போது பதிவான வாக்குகள்-182426.
எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை புறக்கணிப்போம் அறிவிப்பு செய்தபோது பதிவான வாக்குகள்-195495. இதன் அர்த்தம் அதிமுக இல்லையென்றாலும் அதை மக்கள் பொருட்டாக கருதவில்லை. இங்கே சராசரியாக 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகும். இந்த முறை அதை தாண்டி கிட்டத்தட்ட 83 சதவிகிதம் பதிவாகி உள்ளது.
இதில் திமுகவிற்கு பாரம்பரியமாக செல்லும் 46-50 சதவிகிதம் சென்றுவிட்டது என்று வைத்துக்கொள்ளலாம். மீதம் உள்ள வாக்குகள் அதிமுக இல்லாமல் பாமக, நாம் தமிழருக்கு சென்று இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆளும் கட்சி என்பதால் திமுகவிற்கு மேலும் 10 சதவிகிதம் வாக்குகள் வந்தாலும் கூட.. 60 சதவிகிதத்தை திமுக எடுத்தாலும் கூட மீதம் உள்ள 20 சதவிகிதத்தை பாமக, நாம் தமிழர் பகிர்ந்து கொள்ளும்.
எடப்பாடி மிஸ் பண்ணிட்டாரு: முன்பு ஜெயலலிதா இடைத்தேர்தலை புறக்கணித்து இருக்கிறார். ஆனால் அவர் புறக்கணித்த போது, மூன்றாவது அணி எதிர்திசையில் இல்லை. அப்போது என்டிஏ கூட்டணி பெரிதாக இல்லை. பாஜக கூட்டணியின் வாக்கு வங்கியும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழல் வேறு.
இவர் ஒன்று பாஜக கூட்டணிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இன்னொரு பக்கம் திமுகவிற்கு தேர்தலை கேக் வாக் ஆக்கி கொடுத்து உள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications