மயிலாப்பூர் "ஆடிட்டர்".. எடப்பாடி.. புள்ளிகளை கனெக்ட் செய்த "ரெய்டு".. காமராஜ் வீட்டில் என்ன நடந்தது
சென்னை: அதிமுகவில் இரண்டு வெவ்வேறு புள்ளிகளை.. வெவ்வேறு வழக்குகளை கனெக்ட் செய்து இருக்கிறது வருமான வரித்துறை. சென்னையிலும் இருந்து மன்னைக்கு நேர் கோடு போட்டு முக்கியமான இரண்டு புள்ளிகளை கனெக்ட் செய்து இருக்கிறது வருமான வரித்துறை.. அவை என்னென்ன புள்ளிகள்?வருமானவரித்துறை வளையத்தில் சிக்கியது யார் யார்? தொடர்ந்து படியுங்கள்!
Recommended Video
அதிமுக ஆட்சியில் பல்வேறு நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களை எடுத்து செய்தவர் செய்யாத்துரை. அருப்புக்கோட்டையை சேர்ந்த இவர்.. தனது மகன் நாகராஜன் மூலம் எஸ்பிகே என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு அரசின் சாலை ஒப்பந்த பணிகள் பலவற்றை அதிமுக ஆட்சி காலத்தில் இந்த நிறுவனம்தான் டெண்டர் எடுத்தது. எடப்பாடி பழனிசாமிக்கு செய்யாத்துரை அப்போதே மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்பட்டது.

ரெய்டு
அதோடு எடப்பாடி பழனிச்சாமியின் சம்மந்திக்கும் செய்யாத்துரை நெருக்கம் என்று கூறப்பட்டது. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2018ம் வருடம் இவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டது. அதில் செய்யாத்துரையிடம் இருந்து ரூ174 கோடி பணம் மற்றும் 106 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது.

என்ன நடந்தது?
அதன்பின் இந்த விவகாரம் ஆறப்போடப்பட்டது. இந்த நிலையில் திடீரென தற்போது மீண்டும் செய்யாத்துரை வீடு மற்றும் அலுவலகங்கள் இரண்டு நாட்களாக வருமான வரித்துறை மூலம் ரெய்டு செய்யப்பட்டு வருகிறது. சென்னை, அருப்புக்கோட்டை, கோவையில் உள்ள செய்யாத்துரைக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள், வீடுகள் சோதனை செய்யப்பட்டன. எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமான சந்திர சேகர் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கி இருக்கும் அதே நேரத்தில்தான் இந்த ரெய்டும் நடத்தப்பட்டு வந்தது.

குழப்பம்
இதில் சென்னையில் நடத்தப்பட்ட ரெய்டு ஒன்றுதான் திருப்பத்தை ஏற்படுத்தியது. செய்யாத்துரையின் நிறுவனத்திற்கு மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டர் ஒருவர்தான் கணக்கு வழக்குகளை பார்த்து இருக்கிறார். இவரிடம் செய்யாத்துரை பற்றி பல ஆவணங்கள் இருந்துள்ளன. அதை கைப்பற்ற போன வருமான வரித்துறைக்கு அங்கு பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. செய்யாத்துரை பற்றிய ஆவணங்கள் கிடைத்த அதே நேரத்தில் காமராஜ் பற்றிய ஆவணங்களும் ஆடிட்டர் வீட்டில் நேற்று கிடைத்துள்ளன.

ஒரே ஆள்
அதாவது செய்யாத்துரைக்கு மட்டும் இவர் ஆடிட்டர் இல்லை முன்னாள் அமைச்சர் காமராஜுக்கும் இவர்தான் ஆடிட்டர். இதனால் ஆடிப்போன வருமான வரித்துறை ஆவணங்களை சோதனை செய்துவிட்டு இன்று காமராஜ் வீட்டிற்கு சோதனை செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இது முன்பே தெரிந்ததா அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை எதேர்சையாக பிளான் செய்ததா என்று தெரியவில்லை.. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையும் அதே நேரத்தில்.. இப்போது காமராஜ் வீட்டில் ரெய்டு நடத்தி வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை
லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலையே வருமானத்திற்கு அதிகமாக 59 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் காமராஜ் வீடு, அலுவலகம் என்று 59 இடங்களில் சோதனை செய்தது. இதற்கு இடையில் தற்போது வருமான வரித்துறையும் ஆடிட்டர் விவகாரம் காரணமாக காமராஜ் வீட்டில் ரெய்டு செய்துள்ளது. செய்யாத்துரை முறைகேட்டில் ஆடிட்டருக்கு பங்கு இருப்பதாக கருதப்படுவதால்.. அவரிடம் கிளைண்ட்டாக இருக்கும் அதிமுகவில் உள்ள காமராஜுக்கும் இதில் பங்கு இருக்கிறதா என்று சோதனை செய்ய வருமான வரித்துறை இந்த ரெய்டை மேற்கொண்டுள்ளதாம்.

மன்னை டூ சென்னை
அதாவது சென்னையில் ஆடிட்டர் வீட்டில் இருந்து மன்னையில் காமராஜ் வீட்டிற்கு கோடு போட்டு கனெக்ட் செய்துள்ளனர் ஐடி அதிகாரிகள். லஞ்ச ஒழிப்புத்துறையோடு வருமான வரித்துறையும் ஒரே நேரத்தில் காமராஜ் வீட்டில் சோதனை செய்வதால்.. பெரிய ஹீரோ படத்தின் முதல் நாள் ஷோ போல காமராஜ் வீடு கூட்டமாக காணப்படுகிறது. இரண்டு தரப்பையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் காமராஜ் தரப்பு அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications