இதுதாங்க நெப்போலியன்.. பழைய நட்பை மறக்கவில்லை பாருங்க.. நண்பன் அழகிரிக்கு செஞ்ச உதவி.. ப்பா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியன் மு.க அழகிரிக்கு செய்த உதவி ஒன்று அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

திமுக உறுப்பினராக இருந்த நடிகர் நெப்போலியன் அரசியல் ரீதியாக எம்எல்ஏ, எம்பி, மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்து இருக்கிறார். அமைச்சர் கே. என் நேருவின் உறவினரான இவர்.. திமுகவில் ஒரு காலத்தில் மிக முக்கியமான உறுப்பினராக இருந்தார்.

mk stalin vijay azhagiri

அதன்பின் மகனின் உடல் நலனை கவனிக்க வேண்டும் உள்ளிட்ட காரணங்களால்.. அரசியலில் இருந்து விலகி இருக்க தொடங்கினார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்தும் விலகியவர் இப்போது அமெரிக்காவில் செட்டிலாகி அங்கே மகனின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதோடு.. விவசாயமும் செய்து வருகிறார்.

இந்த நிலையில்தான் நடிகர் நெப்போலியன் தனது நெருங்கிய நண்பர் மு க அழகிரிக்கு செய்த உதவி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

அழகிரி மகன் உடல்நிலை

சமீபத்தில் அழகிரியின் மகன் துரைதயாநிதி, மிகமோசமான உடல்நிலை பாதிப்புக்கு ஆளானது அழகிரியை நிலைகுலைய வைத்தது. ஐசியூவில் நீண்ட காலம் அழகிரி மகன் வைக்கப்பட்டு இருந்தார். அவர் உடல்நிலை நாளுக்கு நாள் மிக மோசமாகி அதன்பின் ஒரு வழியாக மீண்டு வந்தார். அண்ணன் மு. க அழகிரியின் மகன் துரைதயாநிதிமீது அளவுக்கடந்த பாசம் வைத்திருக்கும் ஸ்டாலினையும் இது மிகவும் பாதித்தது.

மருத்துவமனைக்குச் சென்று அழகிரிக்கு ஆறுதல் சொன்னதோடு துரை மீண்டு வருவார்; நீங்கள் தைரியமாக இருங்கள் ; கவலைப்படாதீர்கள் என்று அவரை தேற்றினார். உடல் நலம் தேறிய நிலையில், அவரை அமெரிக்காவிற்கு மேல் சிகிச்சைக்காக துரையை அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.

இப்படிப்பட்ட நிலையில்தான் நெப்போலியன் முக்கியமான கட்டத்தில் துரைதயாநிதிக்கு உதவியாக வந்துள்ளார்.

அழகிரிக்கு உதவிய நெப்போலியன்

துரை தயாநிதி உடல்நிலை பற்றி தெரிந்ததும் போன் செய்து அழகிரி நெப்போலியனிடம் பேசி உள்ளார். உயர் சிகிச்சை, தினசரி பராமரிப்பிற்கு துரைதயாநிதியை அமெரிக்காவிற்கு கொண்டு செல்லும் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது நானே பார்த்துக்கொள்கிறேன் உங்கள் மகனை என்று நெப்போலியன் அழகிரிக்கு ஆபத்பாந்தவனாக வந்துள்ளார்.

அப்போதில் இருந்து அமெரிக்காவில் இருக்கும் நடிகர் நெப்போலியனின் பராமரிப்பில் தான் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக துரை தயாநிதி இருந்து வருகிறார். தனது நண்பனின் மகனை தன் மகனாக பாவித்து உதவி செய்து வருகிறார் நெப்போலியன்.

அழகிரி அரசியல்

அவருக்கு உலகின் தலை சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதில், மிகவும் நன்றாக இருக்கிறார் துரை. மகனை அருகில் இருந்து கவனித்து வந்த அழகிரி, சமீபத்தில் தான் சென்னைக்கு வந்தார். அவரை வரச்சொன்னதும் ஸ்டாலின் தான். 20 நாட்களுக்கு முன்பு, துரையின் நலம் விசாரிக்க அழகிரியிடம் ஸ்டாலின் பேசியிருக்கிறார். அப்போது துரையிடமும் பேசினார் ஸ்டாலின். அப்போதுதான்,
'அரசியல் ஈடுபாடில்லாமல் அப்பா (அழகிரி) மிகவும் தனிமையில் இருப்பதாக நினைக்கிறார் சித்தப்பா.

தனிமையில் இருக்கும் அண்ணன்

அவரை நீங்கள் அழைத்துப் பேச வேண்டும். இதுவரை எனக்காக எல்லாத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு இருந்தார். இப்போது நான் குணமாகிவிட்டேன். இனியும் அவர் தனிமையாக இருக்க வேண்டாம் என தோணுது சித்தப்பா' என்று ஸ்டாலினிடம் துரை தயாநிதி சொல்லியிருக்கிறார். இதனை அடுத்தே, அழகிரியை வீட்டுக்கு அழைத்தார் ஸ்டாலின். பிறந்த நாளையொட்டி அழகிரியும் சந்தித்து விட்டுச் சென்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+