அரிதாக நடக்கும் அதிசயம்! சட்டப்படி சாதித்த ஓபிஎஸ்! தூரத்தில் தெரியும் சின்ன வெளிச்சம்! என்ன நடந்தது?
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் வழக்கு இன்று விசாரணைக்கு வருவது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வத்திற்கு சில சாதகமான அம்சங்கள் ஏற்பட்டுள்ளன. வழக்கு விசாரணை தொடங்கும் முன்பே இதில் ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமான சில விஷயங்கள் ஏற்பட்டுள்ளன.
அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம்.. நாங்கள் இந்த வழக்கை விசாரிக்கவில்லை. உயர் நீதிமன்றமே இந்த வழக்கை முதலில் இருந்து "பிரஷ்ஷாக" விசாரிக்கட்டும். 2 வாரங்களில் வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட வேண்டும் என்று கூறியது.
வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய போதிலும், உயர் நீதிமன்றத்தில் அதே தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி
முன்னதாக வழக்கில் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஓ பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது இவரே. அதோடு அனைத்திற்கும் கோர்ட் படி ஏறாமல் பொதுக்குழுவில் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்றும் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவுரை வழங்கினார். இந்த பொதுக்குழு வழக்கு மீண்டும் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தரப்பிற்கு சென்றதால் ஓபிஎஸ் தரப்பு வழக்கில் மீண்டும் தங்களுக்கு எதிராக தீர்ப்பு வருமோ என்று அச்சத்தில் இருந்தது.

முறையீடு
இதையடுத்தே இந்த நிலையில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை இந்த வழக்கு விசாரணையில் இருந்து மாற்ற வேண்டும். வழக்கை வேறு அமர்விற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி பண்டாரியிடம் இதற்காக கடிதம் அனுப்பப்பட்டது. இதில் முடிவு எடுக்கப்படும் முன் வழக்கு விசாரணை கடந்த வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், ஜூலை 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தனக்கு எதிரான கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளதால் இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு
இதை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். அதோடு இது நீதிமன்ற அவமதிப்பிற்கு சமம் என்றும் எச்சரித்தார். இதையடுத்து மறுநாள் நடந்த விசாரணையில் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கேட்டது. ஆனால் மனுவாக மன்னிப்பு தெரிவிக்க மறுத்தது. இது போக.. நாங்கள் நீதிபதியை விமர்சனம் செய்யவில்லை, அவர் தீர்ப்பில் உள்ள சில வரிகளைத்தான் விமர்சிக்கிறோம் என்று கூறியது.

என்ன நடந்தது?
இதையடுத்து தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.. இந்த மனுவை தலைமை நீதிபதி பண்டாரிக்கி அனுப்பி.. அவரே.. வழக்கை யார் விசாரிப்பது என்று முடிவு செய்வார் என்று கூறினார். இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வத்திற்கு சட்ட ரீதியாக அந்த குட் நியூஸ் வந்துள்ளது. அதன்படி தற்போது நீதிபதி மாற்றப்பட்டு தனி நீதிபதி ஜெயசந்திரன் முன் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதில் சட்ட வழக்குகளில் அரிதாக நடக்கும் அதிசயம் ஒன்று நடந்து உள்ளது.

அதிசயம்
முன்னதாக தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை மாற்ற சொன்ன போதே, அவரை மாற்றும் எண்ணம் எனக்கு இல்லை. இருந்தாலும் உங்கள் மனுவை பரிசீலனை செய்கிறேன் என்று கூறினார் தலைமை நீதிபதி பண்டாரி. இருப்பினும் அதிசயமாக தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மாற்றப்பட்டு இருக்கிறார். பொதுவாக ஒரு வழக்கில் இருக்கும் நீதிபதி.. ஏற்கனவே மனு தாரருக்காக வழக்கறிஞராக ஆஜராகி இருந்தாலோ, அல்லது ஏதாவது ஒரு வகையில் மனுதாரருடன் தொடர்பில் இருந்தாலோ மட்டும்தான் நீதிபதி மாற்றப்படுவார்.

மாற்றம் ஏன்
ஆனால் இந்த வழக்கில் அதிசயமாக தனி நீதிபதி மாற்றப்பட்டு இருக்கிறார். தலைமை நீதிபதியின் தனிப்பட்ட முடிவாக இது இருக்கலாம். சட்ட ரீதியாக ஓபிஎஸ் கொஞ்சம் சாதித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். வழக்கில் இன்னொரு சாதகமான விஷயமும் ஓ பன்னீர்செல்வத்திற்கு உள்ளது. அதிமுக பொதுக்குழு முடிவுகளை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. அதேபோல் அதிமுகவில் துணை எதிர்கட்சித் தலைவர் மாற்றப்பட்டதை இன்னும் சபாநாயகரும் அங்கீகரிக்கவில்லை. இந்த விஷயங்களை புதிய தனி நீதிபதி முன் ஓபிஎஸ் குறிப்பிட வாய்ப்புகள் உள்ளன... இன்றும் இந்த விஷயங்களை ஓபிஎஸ் தரப்பு வாதமாக வைக்கும்.. இதனால் பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ்ஸுக்கு தூரத்தில் சின்ன வெளிச்சம் தெரிய தொடங்கி உள்ளது.
-
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே?












Click it and Unblock the Notifications