மறைத்து வைத்திருந்த துப்பாக்கி.. போலீஸ் ஜீப்பில் அட்டாக்.. சிசீங் ராஜா என்கவுன்டர் எப்படி நடந்தது?
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சிசீங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார். நேற்றுதான் இவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை அழைத்து வந்த போது நீலாங்கரை அருகே தப்பி செல்ல முயன்றதால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார். போலீசார் இவரை பல வாரங்களாக தேடி வந்தனர். ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சீசிங் ராஜா நேற்று கைது செய்யப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் இதன் மூலம் 2-வது குற்றவாளி என்கவுன்டர் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த என்கவுண்டர் எப்படி நடந்தது? ஏன் நடந்தது? என்பது தொடர்பான சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
எப்படி நடந்தது?: சென்னை அழைத்து வந்தபோது நீலாங்கரை அருகில் தப்பி செல்ல முயன்றதால் போலீசார் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணைக்காக நீலாங்கரைக்கு போலீசார் இவரை அழைத்து சென்றுள்ளனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ததால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
போலீசாரை தாக்கிவிட்டு இவர் தப்பி ஓட முயன்று உள்ளார். இந்த நிலையில் அதிகாலையில் இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இவர் பொதுவாக பெரிய குற்றங்களை செய்துவிட்டு சில நாட்கள் சிறையில் இருப்பார். பின்னர் ஜாமீன் வாங்கிவிட்டு வெளியே வந்துவிடுவார். 7 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான சீசிங் ராஜா மீது பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரவுடி சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உட்பட 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்டார். தற்போது ராஜா என்கவுன்டர் செய்யப்பட்டு உள்ளார்.
போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய சீசிங் ராஜா வேகமாக நீலாங்கரையில் ஓடி உள்ளார். அதோடு இல்லாமல் தாம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை மிரட்டி உள்ளார். மேலும் போலீசாரின் வாகனத்தை இரண்டு முறை சுட்ட நிலையில் போலீசார் வேறு வழியின்றி தற்காப்புக்காக சீசிங் ராஜாவை என்கவுன்டர் செய்துள்ளனர்.
கொலை: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த விவகாரத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தும் நிலையில்தான் இந்த என்கவுன்டர் நடந்து உள்ளது.

இந்த விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் - ஆருத்ரா கோல்டு -தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இது அரசியல் கொலை அல்ல.. அதை தாண்டி வேறு எதோ இருக்கிறது.. பெரிய கேங்க் வார் விவகாரம் இதற்கு பின் உள்ளதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பேரூராட்சியின் அதிமுக கவுன்சிலராக உள்ளார் ஹரிதரன். இவரிடமிருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் ஏற்கனவே 25 பேர் இந்தக் வழக்கில் கைதாகி உள்ளனர். பாஜகவை சேர்ந்த அஞ்சலை என்பவர் இதில் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்டார். தற்போது ராஜா என்கவுன்டர் செய்யப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications