நீ ஏறி ஆடு கபிலா.. முழுசாக நம்பிய தோனி.. சிஎஸ்கே மேஜிக்! இந்திய டெஸ்ட் அணியில் ரஹானே வந்தது எப்படி?
சென்னை: சிஎஸ்கே அணியில் சிறப்பாக ஆடி வரும் ரஹானே இந்திய டெஸ்ட் அணிக்குள் மீண்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7ம் தேதி நடக்கிறது. இரண்டாவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்ஸ் போட்டிக்கு இந்திய அணி தேர்வாகி இருக்கிறது.

இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. அதில்,
ரோஹித் சர்மா (கேப்டன்)
சுப்மன் கில்
சேதேஷ்வர் புஜாரா
விராட் கோலி
அஜிங்க்யா ரஹானே
கேஎல் ராகுல்
கேஎஸ் பாரத் (WK)
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவீந்திர ஜடேஜா
அக்சர் படேல்
ஷர்துல் தாக்கூர்
முகமது ஷமி
முகமது சிராஜ்
உமேஷ் யாதவ்
ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
கடந்த முறை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்ட ரஹானே இந்த முறை இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளார். பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பார்ம் காரணமாக ஆடாத அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

சிஎஸ்கே: சிஎஸ்கே அணியில் சிறப்பாக ஆடி வரும் ரஹானே இந்திய டெஸ்ட் அணிக்குள் மீண்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறார். சிஎஸ்கே அணியில் இவர் பார்மிற்கு திரும்பியது அவர் அணிக்குள் மீண்டும் வர முக்கிய காரணம் ஆகும்.
இந்த சீசனில் மும்பைக்கு எதிரான ஐபிஎல் 2023 ஆட்டத்தில் சிஎஸ்கே அணி அதிரடி வெற்றி பெற்றது. இதில் ரஹானே 27 பந்தில் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் என்று மொத்தம் 61 ரன்களை எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார். டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று கருதப்பட்டு வந்த அவரின் இந்த சிறப்பான பேட்ஸ்மேன் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
அதேபோல் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ரஹானே ஆடிய விதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. முழுக்க முழுக்க ஆட்டம் அவர் கட்டுப்பாட்டில் இருந்தது. சரியான கண்ட்ரோலில் அவர் துல்லியமாக பேட்டிங் செய்தார். எங்கேயுமே அவர் பால்ஸ் ஷாட் அடிக்கவில்லை. சிஎஸ்கே அணியில் பொதுவாக மறைந்து போன ஆன்மா வந்தால் கூட அசத்தல் ஆட்டம் போடும். அதை நேற்று ரஹானேவும் செய்து காட்டினார்.

இங்கே சொதப்பிவிடுவார் என்று கூறும் அளவிற்கு அவரின் பேட்டிங் எங்குமே சொதப்பலாக இல்லை. டெஸ்ட் வீரர் என்று அழைக்கப்பட்டவர்.. டெஸ்ட் அணியில் இருந்தே நீக்கப்பட்ட பின்பும் கூட டி 20 போட்டியில் சிதறவிட்டுள்ளார்.
இந்த சீசனில் இதுவரை ரஹானே ஆடிய போட்டியில் ஒரு போட்டி தவிர எதிலும் ஏமாற்றம் அளிக்கவில்லை.
இந்த சீசனில் அவர் எடுத்த ரன்கள்,
61(27)
31(19)
37(20)
9(10)
71(29)
கொல்கத்தா நடந்த போட்டியில் ரஹானே
முதல் 1-10 பந்துகள் - 162 ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார்.
அடுத்த 11-20 பந்துகள் - 223 ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார்.
அடுத்த 21-30 பந்துகள் - 256 ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார்.
ரஹானே தனது இத்தனை வருட ஐபிஎல் கேரியரில் இதுவரை 2 முறை மட்டுமே 200 + ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி உள்ளார்.
இன்று 244.82 - கேகேஆர் அணிக்கு எதிராக
225.92 - மும்பைக்கு எதிராக

தோனி நம்பிக்கை: இதன் மூலம் அவர் முழுக்க முழுக்க பார்மிற்கு திரும்பினார்.முன்னதாக மோசமான பார்ம் காரணமாக டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார்
• அதேபோல் இவர் மீது நம்பிக்கை இன்றி கடந்த சீசன் முடிவில் ஐபிஎல்லிலும் KKR இலிருந்து வெளியேற்றப்பட்டார்.
• ஆனால் தோனி இவர் மீது நம்பிக்கை வைத்து அணியில் எடுத்தார்.
• அதோடு தொடர்ந்து 3வது இடத்தில் ஆட சான்ஸ் கொடுத்து வருகிறார்.
• இதன் மூலம் WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
டி 20; பொதுவாக டி 20 போட்டிகள் மூலம் டெஸ்ட் அணிக்கு ஆட்களை எடுக்க மாட்டார்கள் என்றாலும் பொதுவான பார்மை பார்த்து எடுப்பார்கள். சூர்யா குமார் யாதவ் டெஸ்ட் போட்டிக்கு வந்ததே அவரின் டி 20 மற்றும் ஐபிஎல் ஆட்டத்தை வைத்துதான். அதேபோல்தான் தற்போது ரஹானேவும் ஐபிஎல் பார்ம் மூலம் டெஸ்ட் அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளார்.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்!












Click it and Unblock the Notifications