Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரும்பு காலம் தொடங்கியதே தமிழ் மண்ணில்தான்.. கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? சுவாரசியமான பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார். இதற்கான ஆய்வு முடிவுகளையும் கூட இன்று அவர் வெளியிட்டார். இது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று பார்க்கலாம்.

பொதுவாக இரும்பு பொருட்களை ஆதி காலத்தில் செய்யும் போது அதை நெருப்பில் வாட்டுவார்கள். நெருப்பில் வாட்ட கரிக்கட்டைகளை பயன்படுத்துவார்கள். இந்த கரிக்கட்டைகளின் கார்பன் இரும்பில் ஒட்டி இருக்கும். இரும்பை உருவாக்கும் போது குறிப்பிடத்தக்க அளவில் கார்பன் 14 அதில் இருக்கும். இரும்பில் உள்ள இந்த Carbon-14ஐ வைத்தே அதன் வயது கணக்கிடப்படும்.

madurai keezhadi tamilnadu government


Carbon-14 ஒரு ரேடியோ ஆக்டிவ் பொருள்.. இது கொஞ்சம் கொஞ்சமாக சிதையும். அதேபோல் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிதையும் குணம் கொண்டது. ஒரு இரும்பின் half-life என்பது 5730 வருடம் ஆகும். அதாவது 5730 ஆண்டுகளுக்கு பின் இரும்பில் இருக்கும் கார்பன் 14 பாதியாக சிதையும். அதாவது பாதி கார்பன்தான் இருக்கும்.

இதை அடிப்படையாக வைத்து ஒரு இரும்பில் எவ்வளவு கார்பன் 14 மீதம் உள்ளது என்பதை வைத்து அதன் வயதை கணக்கிட முடியும். இந்த சோதனை முடிவுகள் எப்போதும் துல்லியமாகவே இருக்கும். இந்த நிலையில்தான் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார். இதற்கான ஆய்வு முடிவுகளையும் கூட இன்று அவர் வெளியிட்டார். இது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று பார்க்கலாம்.

ப்ளோரிடா, லக்னோ, அஹமதாபாத் என்று பல ஆய்வகங்களில் தனி தனியாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் முடிவுகளின் அடிப்படையில், 5,300 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவில் இரும்பு பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதை நிறுவும் வகையில் இந்த முடிவு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு கிமு 4 ஆம் மில்லினியத்தின் தொடக்கத்தில் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆய்வு முடிவு:

தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு. 6 நூற்றாண்டில் தொடங்கியது என்பதை கீழடி அகழாய்வு முடிவுகள் நிறுவியுள்ளன. பொருநை ஆற்றங்கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் பயிர்தொழிலில் நெல்பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை அகழாய்வு முடிவுவெளிப்படுத்தியது. தமிழ்நாட்டின் இரும்பின் அறிமுகம் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின்வாயிலாக நான் உலகிற்கு அறிவித்தேன்.

தமிழ் - தமிழ் நிலம் - தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்தவை ஏதோ இலக்கியப் புனைவுகள் அல்ல, அரசியலுக்காகச் சொன்னவை அல்ல, வரலாற்று ஆதாரங்கள். அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பினைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ்நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது!

5300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியுள்ளோம். இது தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் - தமிழ் நிலத்துக்கும் பெருமை. உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதனை நாம் கம்பீரமாகச் சொல்லலாம்.

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை இந்த திராவிட மாடல் அரசு எடுத்துக் கொள்கிறது, என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+