2021 டூ 2023.. தமிழக மின்சார வாரியத்தில் ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடுகள் நடந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் மின்கம்பிகள் வாங்கியதில் 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தில் டெண்டர் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த ஜூன் 30-ந்தேதியன்று லஞ்சஒழிப்புத்துறை போலீசாரால் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைகேடு எப்படி நடந்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் மின்கம்பிகள் வாங்கியதில் 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த விவாகரம் தொடர்பாக மின்சார வாரியத் தலைவராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் அனுப்பிய கடிதத்தை அடிப்படையாக வைத்து லஞ்சஒழிப்பு போலீசார் இந்த வழக்கை பதிவு செய்தனர்.

Tamil Nadu Electricity Board tender dmk

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 19-ந்தேதி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள், தனிநபர்கள், அலுமினிய மின்கம்பி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்தப்புள்ளிதாரர்களின் அலுவலகங்கள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினார்கள். இச்சோதனையின் முடிவில் ஒப்பந்தப்புள்ளி தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் பெயரளவில் இயங்கி வந்த போலி நிறுவனங்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை விவரங்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த விவரங்களை பார்ப்போம்.
சர்சைக்குள்ளான 9 டெண்டர்களில் மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 495 கிலோமீட்டர் நீள மின்கம்பிகள் கொள்முதல் செய்யப்பட்டது. சுமார் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருந்தது. இதில், 2022-23-ம் நிதியாண்டில் குறிப்பிட்ட வகை மின் கம்பிகளை கொள்முதல் செய்ய சுமார் ரூ.170 கோடி மதிப்பில் 40 ஆயிரம் கிலோமீட்டர் மின்கம்பிகள் வாங்க டெண்டர்விடப்பட்டிருந்தது.

இதில் 24 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது. 5 நிறுவனங்கள் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.44,356 என ஒரே விலையைக் குறிப்பிட்டிருந்தது தான் சர்ச்சையாக மாறியது. பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கிலோமீட்டருக்கு ரூ.41,536 என இறுதி விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அரசின் மதிப்பீட்டின்படி இதன் அடக்கவிலை ரூ.38,858 மட்டுமே ஆகும். இது இறுதி செய்யப்பட்ட விலையை விட 6.89 சதவீதம் குறைவு ஆகும். எனினும் 24 நிறுவனங்களுக்கும் ரூ.166.144 கோடி மதிப்பிலான கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டிருந்தது

அதேபோல் 2021-ம் ஆண்டில் ஏ.சி.எஸ்.ஆர். வகை மின் கம்பிகள் கொள்முதல் செய்ய ரூ.107.74 கோடி மதிப்பில் 15 ஆயிரம் கிலோமீட்டர் மின்கம்பிகள் வாங்க டெண்டர் கோரப்பட்டிருந்தது. இதில் தகுதிபெற்ற 31 நிறுவனங்களும் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.75,048 என்ற ஒரே தொகையைக் குறிப்பிட்டிருந்தன. பேச்சுவார்த்தைக்குப் பின் ரூ.74,340 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதற்கான அரசு மதிப்பீட்டு விலை ரூ.71,826 மட்டுமே. நிர்ணயிக்கப்பட்ட விலை மதிப்பீட்டை விட 3.49 சதவீதம் அதிகம் இருந்தபோதிலும், 30 நிறுவனங்களுக்கு ரூ.111.51 கோடி மதிப்பிலான கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டிருந்தது.

இப்படி தரப்பட்ட ஒப்பந்தங்கள் சில, மின்வாரியம் இறுதி செய்த கொள்முதல் விலைகள் அடிப்படை விலையை விட மிக அதிகமாக இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கொள்முதல் செய்யப்பட்ட சில வகை மின்கம்பிகள் தரம் குறைந்தவையாக இருந்ததால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவாகரத்தில் மின்சார வாரியத்தின் பொருட்களின் மேலாண்மைப் பிரிவு அதிகாரிகளும், டெண்டர் பெற்ற தனியார் நிறுவனங்களும் கூட்டுச்சதி செய்து, டெண்டர் தொகையை ஒரே மாதிரியாக நிர்ணயித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து வழக்கு பாய்ந்துள்ளது. இந்த விஷயத்தில் அரசு அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மோசடி, நிதி முறைகேடு மற்றும் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டு அரசு கருவூலத்திற்கு மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் வழக்கு விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் லஞ்சஒழிப்பு போலீசார் போட்ட இந்த வழக்கில் குற்றவாளிகளின் பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை. விசாரணை முழு அளவில் நடப்பதால், விசாரணை முடிந்தபிறகு குற்றவாளிகளின் பெயர் வழக்கில் கூடுதலாக சேர்க்கப்படும் என்றும், அதன்பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+