ஷாக்.. 30 அடி பள்ளத்தில் மரத்தில் தொங்கிய பஸ்! குன்னூர் விபத்தில் 8 பேர் இறந்தது எப்படி? நடுங்குதே
சென்னை: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சுற்றுலா பஸ் விபத்துக்குள்ளானதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் பலியாகினர். இந்நிலையில் தான் விபத்து எப்படி நடந்தது? என்பது குறித்த ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். குறிப்பாக நீலகிரி மாவட்டம் ஊட்டி, தென்காசி மாவட்டம் குற்றாலம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

இதனால் இந்த இடங்களில் தற்போது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் கார், பஸ்களில் பெரும்படையாக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தான் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் இன்று ஊட்டியை சுற்றுபார்த்துவிட்டு சுற்றுலா பஸ்சில் தென்காசி புறப்பட்டனர். பஸ்சில் மொத்தம் 59 பேர் இருந்தனர்.
இந்த பஸ் குன்னூர் -மேட்டுப்பாளையம் மரப்பாலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து பஸ்சில் இருந்த 8 பேர் பலியான நிலையில் ஏராளமானவர்கள் படுகாயமும், காயமும் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த வருகின்றனர்.
இந்நிலையில் தான் குன்னூரில் சுற்றுலா பஸ் விபத்து எப்படி நடந்தது? என்பது பற்றிய ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சுற்றுலா பஸ் குன்னூர்-மேட்டுப்பாளையம் மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திருப்பம் இருந்தது. இதையடுத்து திருப்பத்தில் பஸ் திரும்ப முயன்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதையடுத்து கண்இமைக்கும் நொடியில் சாலையில் இருந்து 30 அடி பள்ளத்தில் தலைகீழாக பஸ் கவிழ்ந்துள்ளது. பள்ளத்தில் இருந்த மரத்தில் பஸ் சிக்கி அந்தரத்தில் தொங்கியது. அதன்பிறகு கீழே விழுந்துள்ளது. இதனால் அதில் இருந்தவர்கள் அனைவரும் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளனர். இந்த சத்தம் கேட்டவுடன் அருகே இருந்தவர்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் 3 பேர் சம்பவ இடத்தில் பலியாகி இருப்பது தெரியவந்தது. மேலும் காயம், படுகாயம் என மொத்தம் 40 பேர் வரை பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழப்பு 8 ஆக அதிகரித்தது. மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தினார். அதோடு காயம், படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications