இடியாப்ப சிக்கல்.. தமிழ் சீரியலை விட மோசமாக இருக்கே.. இந்தியா பாகிஸ்தான் போரால் ஏற்பட்ட குழப்பம்!
சென்னை: இந்தியா பாகிஸ்தான் போர் கிட்டத்தட்ட இடியாப்ப சிக்கல் போன்ற உலக அரசியலை உருவாக்கி உள்ளது. ஒரு விவேக் காமெடியில்.. சீரியலில் ஒருவர் இன்னொருவரை காதலிப்பது அவரை வேறு ஒருவர் மணப்பது.. அந்த நபர் வேறு ஒருவரை காதலிப்பது என்று இடியாப்ப சிக்கல் போன்ற உறவு முறையை விவரித்து காமெடி செய்யப்பட்டு இருக்கும்.
அதற்கு இணையாக இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக தமிழ் சீரியலை விட மோசமான அரசியல் பிரச்சனை ஒன்று ஏற்பட்டு உள்ளது. அது என்ன அரசியல் பிரச்சனை?

1. இந்தியா பாகிஸ்தான் போரில் இந்தியாவிற்கு ஒருவகையில் அமெரிக்கா மறைமுகமாக ஆதரவு அளித்தது. நேரடியாக ஆதரிக்க முடியவில்லை.என்றாலும்.. மறைமுகமாக ஆதரவு வழங்கியது. வரலாற்று ரீதியாக கடந்த சில வருடங்களாக இந்தியா - அமெரிக்கா நட்பு நாடுகள்.
2. ஆனால் அதே அமெரிக்காதான் பாகிஸ்தானுக்கு எப் 16 போர் விமானத்தை வழங்கியது.
3. அதே அமெரிக்காதான் IMFல் பாகிஸ்தான் கடனை பெற அமெரிக்கா சாதகமாக வாக்களித்தது.
4. அமெரிக்காவும் - ரஷ்யாவும் எதிரி நாடுகள். ஆனால் இரண்டும் ஒருவகையில் இந்த போரில் இந்தியாவிற்கு மறைமுகமாக ஆதரவு வழங்கியது
5. அமெரிக்காவும் - சீனாவும் எதிரி நாடுகள். ஆனால் இரண்டும் ஒருவகையில் இந்த போரில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கியது.
6. துருக்கி இந்தியாவிற்கு எதிரி நாடு.. ஆனால் அதே துருக்கிக்கு இந்த நிலநடுக்க உதவிகளை செய்து உள்ளது.
7. ரஷ்யா இந்தியாவிற்கு ஆயுதங்களை வழங்க துருக்கி பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்குகிறது. ஆனால் அதே துருக்கி ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்குகிறது.
8. ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்கும் அதே துருக்கி ரஷ்ய போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை அனுப்புகிறது.
9. கிட்டத்தட்ட இடியப்பா சிக்கல் போல வேறு ஒரு நாட்டை எதிர்த்தாலும்.. வேறு ஒரு விவகாரத்திலும் இரண்டு நாடுகள் ஒன்றாக கரம் கோர்த்து உள்ளன. அதாவது யாரும் யாருக்கும் நண்பர் இல்லை.. யாரும் யாருக்கும் எதிரி இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
10. இதில் பாகிஸ்தான் அமெரிக்கா, சீனாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கியது கூடுதல் காமெடி. அமெரிக்கா, சீனா இரண்டும் எதிரி நாடுகள். ஆனால் அமெரிக்கா எப் 16 விமானங்களை பாகிஸ்தானுக்கு தருகிறது. சீனா ஜே சீரிஸ் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது.
11. அதிலும் துருக்கியை நாம் எதிரி என்று சொன்னாலும் அதிகாரபூர்வ எதிரி இல்லை. நாம் அவர்களின் நிலநடுக்கத்திற்கு கூட ஆதரித்து உள்ளோம். ஆனால் துருக்கி இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானை ஆதரிக்க என்ன காரணம் என்பது யாருக்கும் தெரியாது . மதம் மட்டும் காரணமாக இருக்க முடியாது.
12. இப்படி யூகிக்கவே முடியாதா.. குழப்பமான உலகம் அரசியல் சூழல் இந்தியா பாகிஸ்தான் போரால் ஏற்பட்டு உள்ளது. இந்தியா பாகிஸ்தான் போர் கிட்டத்தட்ட இடியாப்ப சிக்கல் போன்ற உலக அரசியலை உருவாக்கி உள்ளது. இனி உலக அரசியலில் என்ன நடக்கும்.. இந்த மோதல்கள் காரணமாக உலக அரசியலில் அடுத்த கட்டம் என்ன ஆகும் என்ற கேள்விகள், குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால் இந்தியாவின் நிலைப்பாடுகள் எப்படி மாறும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications