சென்னை நீலாங்கரை வீட்டில் விபச்சாரம்.. ஈசிஆரில் மொத்தமாக சிக்கிய அழகிகள்.. கண்டுபிடித்தது எப்படி?
சென்னை: சென்னை நீலாங்கரை, கொட்டிவாக்கம் பகுதியில் ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த புரோக்கரை போலீசார் அதிரடி சோதனைக்கு பின்னர் கைது செய்தனர். புரோக்கரை எப்படி போலீசார் கைது செய்தார்கள்.. அங்கு எத்தனை பெண்களை போலீசார் மீட்டனர்? இந்த பெண்கள் எப்படி விபச்சார வலையில் விழுந்தார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னையில் வெளியூர்களிலிருந்து வேலைத் தேடி சென்னைக்கு வரும் அப்பாவி பெண்களைக் குறிவைக்கும் விபச்சார கும்பல், அவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து செல்கிறார்கள். அப்படி அழைத்து செல்லும் அவர்கள், சிலரை மிரட்டியும், சிலருக்கு பண ஆசை காட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதை தொடர்கிறார்கள். அப்படி விபச்சார வலையில் சிக்குவோர், தொடர்ந்து அதே தொழிலில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

இப்படி கட்டாயப்படுத்தி பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் புரோக்கரை பிடிக்க சென்னையில் தனிப்படை போலீசார் இருக்கிறார்கள். இந்த கும்பல்களைப் பிடிக்க விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் ரோந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் காவல்துறை என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும், குடும்பமாக வாழ்ந்த விபச்சாரம் செய்வது, அலுவலகம் அமைத்து விபச்சாரம் செய்வது, ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் செய்வது தொடர்கிறது. இப்படி போலீஸை ஏமாற்றும் இடைத்தரகர்கள் கடைசியில் சிக்குகிறார்கள்.
அப்படித்தான் சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நீலாங்கரை, கொட்டிவாக்கம் பகுதியில் ஒரு வீட்டை கண்காணித்தனர். அங்கு ஆண்கள் அதிகமாக வந்து போவதும், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதியானது. அதன்பேரில், பெண் காவலர்கள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். வினோத் என்பவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததை உறுதி செய்தனர். இதையடுத்து வினோத்தை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து இரு செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வினோத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், அந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட மூன்று பெண்களை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வடபழனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வடபழனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கடந்த ஏழு நாள் முன்பு கிடைத்தது. இந்த தகவலின் பேரில், வடபழனி, வடக்கு மாட வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை தீவிரமாக கண்காணித்த போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதை போலீசார் உறுதி செய்தார்கள்.
இதையடுத்து விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த பஷிர் முகமது இப்ராஹிம் மற்றும் தேவி ஆகிய இருவரை கைது செய்தார்கள். தொடர்ந்து கைது செய்யப்பட்ட பஷிர் முகமது இப்ராஹிம் மற்றும் தேவி ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஒரு பெண்ணை மீட்ட போலீசார் அவரை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications