மேட்சுக்கு இடையே நடந்த அந்த சம்பவம்.. ஸ்டன் ஆன தோனி! உற்று பார்த்த ஆர்ஆர்.. சிஎஸ்கே வீரரால் பரபரப்பு
சென்னை: நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பவுலர் செய்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றது.
நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இரண்டாவது முறையாக சிஎஸ்கே அணி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து உள்ளது.

முன்னதாக சென்னையில் நடந்த போட்டியில் ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. சென்னையில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 175/8 ரன்கள் எடுத்தது. ஜோஸ் பட்லர் 52, படிக்கல் 38 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 172-6 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. தேவன் கான்வாய் 50 ரன்கள் எடுக்க கடைசியில் தோனி 32, ஜடேஜா 25 என்று அதிரடி காட்ட சிஎஸ்கே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதையடுத்து நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.
நேற்று முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 202/5 ரன்களை 20 ஓவரில் எடுத்தது. இதில் ராஜஸ்தான் தொடக்க வீரர் யேசெஸ்வி ஜெய்ஷ்வால் 77 ரன்கள் எடுத்தார். அதேபோல் துருவ் ஜூரேல் 34 ரன்கள் எடுத்தார்.
ஜோஸ் பட்லரும் 27 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்ட முயன்றாலும் முடியவில்லை. கான்வே எவ்வளவு அடிக்க முயன்றும் 8 ரன்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை.
ஆனால் ருத்துராஜ் மட்டும் அதிரடியாக ஆடி 47 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சிவம் துபே 52 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஜடேஜா 23 ரன்கள் எடுக்க இவர்கள் இருவரும் கடைசி ஓவர்களில் அடிக்க முயன்றும் கூட சிஎஸ்கே அணியால் வெற்றிபெற முடியவில்லை.

சிஎஸ்கே அணி 20 ஒவர் முடிவில் 170-6 ரன்கள் மட்டுமே எடுக்க 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சுவாரசிய சம்பவம்
நேற்று இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் பதிரானா ஒரே ஓவரில் மூன்று முறை 150 கிமீ வேகத்தில் பந்து வீச வந்தார். 149.9, 149.8, 149.5 கிமீ வேகங்களில் மூன்று முறை பவுலிங் செய்தார்.
20 வயதே ஆன இளம் வீரர் ஒருவர் இப்படி மூன்று பந்துகளை அடுத்தடுத்து கிட்டத்தட்ட 150 கிமீ வேகத்தில் பந்து வீசியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. ஆர்ஆர் வீரர்களும் இவரின் பவுலிங் வேகத்தை உற்று பார்த்தனர்.
இவரை தொடர்ந்து ஆதரித்து வரும் தோனியும் அந்த பந்துக்கு கை தட்டி இவருக்கு பாராட்டு தெரிவித்தார்.
பதிரானா வந்த பின் சிஎஸ்கே அணியின் பவுலிங் மிகப்பெரிய அளவில் மாறி உள்ளது. முக்கியமாக டெத் ஓவர்களில் சிஎஸ்கே சிறப்பாக, பிரஷர் இல்லாமல் பவுலிங் செய்ய தொடங்கி உள்ளது.
இதற்கு முன் டெத் ஓவர்களில் சிஎஸ்கே அணிக்கு இருந்த பிரஷர் பதிரானா வந்த பின் இல்லை.
இலங்கையில் இருந்தவருக்கு ஸ்பெஷல் மெசேஜ் அனுப்பி அவரை இந்தியா கொண்டு வந்து தோனி தொடர்ந்து இவருக்கு ஆதரவு அளித்து வருவது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications