19வது வளைவுதான் சிக்கல்.. உதயநிதிக்கு போனை போட்ட ஸ்டாலின்.. சத்தமின்றி சம்பவம்.. என்ன நடந்தது?
சென்னை: ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான எப்.ஐ.ஏ. சான்று பெற்று.. தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்தி காட்டி உள்ளது. இன்று இரண்டாம் கட்ட போட்டிகள் நடக்க உள்ளன. நேற்று நடந்த போட்டிகள் வெற்றிபெற்ற நிலையில் இன்று பிரதான போட்டிகள் நடக்க உள்ளன.
ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிராக கடுமையான சட்ட வழக்குகள் நடந்தன. அரசியல் ரீதியாக, சட்ட ரீதியாக கடுமையான எதிர்ப்புகள் வந்தன. இதை எல்லாம் சமாளித்தே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை நடத்தி காட்டி உள்ளார்.

சட்ட போராட்டம்: சென்னை தீவுத்திடலைச் சுற்றி, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்க கோரி பா.ஜ. க செய்தித்தொடர்பாளர் பிரசாத் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு, பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
அதேசமயம், கார் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கும் சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழை, பந்தயம் நடத்தப்படும் தினத்தில் 12 மணிக்குள் பெற வேண்டும் எனவும், அதன் நகலை மனுதாரருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் எப்.ஐ.ஏ. சான்று பெறுவதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது.
மழை காரணமாக பந்தயச் சாலையை ஆய்வு செய்து சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை 4 மணி நேரம் நீட்டித்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஸ்டாலின் வெளிநாடு: ஸ்டாலின் வெளிநாட்டில் இருக்கும் போது.. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை சமாளித்து.. வழக்குகளை எதிர்கொண்டு உதயநிதி இதை சாத்தியமாக்கி உள்ளார். சென்னையில் ஃபார்முலா 4 ரேஸ் நேற்று முதல் கட்டமாக நடைபெற்றது. முறையான திட்டமிடலுடன் நடைபெற்ற இந்த ரேஸ் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கடைசி நொடி வரை ரேஸ் நடக்குமா என்ற சந்தேகம் நிலவியது.
சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள ராஜாஜி சாலை, நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, கொடிமர இல்ல சாலை என தீவுத்திடலை சுற்றிலும் 3.8 கிமீ நீளமுள்ள சர்க்யூட்டில் இந்த கார் ரேஸ் நடக்கிறது. இதில் 19 சாலை திருப்பங்கள் உள்ளன.
FIA சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கார் ரேஸ் நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் நேற்று நிலவியது. கடைசி 6 மணி வரை ரேஸ் நடப்பதில் சிக்கல் இருந்தது.. 6 மணிக்கு கூட சில போட்டியாளர்கள் அறைக்கு திரும்பும் நிலை இருந்தது. கடைசி நேரத்தில் FIA அனுமதி கிடைத்து ஃபார்முலா 4 ரேஸ் தாமதமாக தொடங்கியது. முக்கியமாக போட்டிக்கு முன்பாக கூட.. மீண்டும் ஒருமுறை, போக்குவரத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் - பொதுமக்கள் அமர்ந்து பார்க்கின்ற Grand Stands, அமைச்சர்கள் - நீதியரசர்கள் - அதிகாரிகளுக்கான Galleries, Race Drivers' Stand - Garage போன்ற வசதிகள், மருத்துவமனையில் பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை சோதனை செய்து.. அப்படி பிரச்சனை இல்லை என்று உறுதி செய்யப்பட்டு அதன்பின்பே போட்டி தொடங்கப்பட்டது.
போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு போன் செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதில், FIA சான்றிதழ் பற்றியும், பாஜக தொடுத்த வழக்கின் நிலவரங்கள் பற்றியும் பேசி உள்ளார். அதில் வழக்கில் வந்த தீர்ப்பு என்பது பற்றியும் எப்ஐஏ சான்றிதழ் கிடைப்பதில் 19வது வளைவுதான் சிக்கலாக அமைந்து உள்ளது என்று விளக்கி உள்ளார். ஆனால் கண்டிப்பாக அனுமதி கிடைக்கும் என்றும் விளக்கி உள்ளார்.
அதன்பின் உதயநிதி ஸ்டாலின் அனுமதி வாங்குவதை உறுதி செய்து போட்டி நடப்பதை சாத்தியமாக்கினார் . தனி ஆளாக ஸ்டாலின் இல்லாத நேரத்தில் உதயநிதி இதை நடத்திக்காட்டியது திமுக பெரிய தலைகள் இடையே கவனம் பெற்றுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications