ஒரு மாநிலத்தில் மட்டும் ஆளும் திமுகவுக்கு எப்படி இவ்வளவு நிதி? அதை நோண்டுங்க.. அண்ணாமலை ஆவேசம்!
சென்னை: தேர்தல் பத்திர நன்கொடை தொடர்பாக பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், "ஒரு மாநிலத்தில் மட்டும் ஆட்சி செய்யும் திமுகவுக்கு எப்படி ஆயிரக்கணக்கான கோடி நன்கொடை?" என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் பத்திர நிதி திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத் ஸ்டேட் வங்கி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து எஸ்பிஐ வங்கி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் தேதியை நிர்ணயித்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

தேர்தல் பத்திர நிதி - பாஜக: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் பத்திர விபரங்களை எஸ்பிஐ வங்கி கடந்த மார்ச் 12ஆம் தேதி மாலையில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று தமது இணையதளத்தில் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகம் நிதி பெற்ற கட்சியாக இருப்பது ஆளும் பாரதிய ஜனதா கட்சி.
நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பாஜக முதலிடத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் பாஜக 6,060 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1,609 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாயும், பிஆர்எஸ் கட்சி 1,214 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன.
கோடி கோடியாக கொட்டிய நிறுவனங்கள்: இந்தப் பட்டியலில் வேதாந்தா, மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமானது பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாக நிதி அளித்துள்ளன.
நாட்டிலேயே அதிகபட்சமாக லாட்டரி மார்ட்டினின் நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் அதிக நன்கொடை கொடுத்துள்ளது. மொத்தமாக அந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வழங்கியுள்ளது. மெகா இன்ஜினியரிங் மற்றும் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் 966 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளது.
பாஜக மீது விமர்சனம்: பெரு நிறுவனங்களிடம் இருந்து கோடி கோடியாக நிதியைப் பெற்றுள்ள ஆளும் பாஜக, அவர்களுக்கு அனுகூலம் செய்துள்ளதாகவும், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டுகள் நடத்தப்பட்ட சில நாட்களில் தேர்தல் நன்கொடைகள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "இதில் ஒளிப்பதற்கு ஒன்றுமே இல்லையே.. எல்லாமே வெளிப்படையாகத்தானே இருக்கிறது. மம்தா பானர்ஜி கட்சி ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருந்துகொண்டு ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் நிதி பெற்றுள்ளது.
திமுகவுக்கு எப்படி இவ்வளவு?: திமுக ஒரு மாநிலத்தில் இருந்து கொண்டு இவ்வளவு நிதி பெற்றுள்ளதே.. நாங்கள் 18 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். எத்தனை அரசாங்கத்தை நடத்துகிறோம்.. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு வந்துள்ள நிதி இவ்வளவு. திமுக ஒரு மாநிலத்தில் ஆளும்போது எப்படி இவ்வளவு வந்தது?
திமுகவுக்கு வந்துள்ள தேர்தல் நிதியில் 87% தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்ததுதான். அதை கேள்வி கேட்க வேண்டும். தேர்தல் பத்திர நிதியில் என்ன தவறு? முன்பு பெட்டியை தூக்கிக் கொண்டு வந்து நிதி கொடுப்பார்கள். அது வேண்டாம் என தேர்தல் பத்திர நிதி திட்டத்தை கொண்டு வந்தோம். இதைவிட சிறப்பாக செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறினால் அதற்கு முயற்சி எடுக்கிறோம். அரசு தான் முயற்சி எடுக்கவேண்டும்.
திமுகவுக்கு யாரெல்லாம் கொடுத்தார்கள்?: எங்களைப் பொறுத்தவரை மடியில் கனமில்லை, வழியில் பயம் இல்லை. ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக எவ்வளவு நிதி பெற்றுள்ளது எனப் பாருங்கள். மம்தா பானர்ஜி நேற்று மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார். திமுகவுக்கு யாரெல்லாம் தேர்தல் பத்திரம் நிதி மூலம் கொடுத்திருக்கிறார்கள் என்று நோண்டிப் பாருங்கள். பாஜக எப்போதும் வெளிப்படைத்தன்மையை வரவேற்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications