15% வழுக்கிக்கிட்டு போயிடும்.. எடப்பாடியை நோக்கி திமுக வீசிய பிரம்மாஸ்திரம்.. ஒரே கல்லில் 2 மாங்காய்
சென்னை; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்கள் வாக்குகள் கவர தீவிரமாக பணிகளை செய்து வருகிறார். அவரின் பணிகளுக்கு பதிலடி கொடுக்க இன்னொரு பக்கம் திமுகவும் முக்கியமான சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறதாம். முக்கியமாக திமுக 2 பிளான்களை வைத்து உள்ளதாம்.
இஸ்லாமியர்களே.. நீங்கள் ஆசைப்பட்டது போல.. நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிமுக தனியாக வந்துவிட்டது. பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு அதிமுக தனியாக வந்துவிட்டது. இனி நாங்கள் தனியாகவே கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்தார். அப்போதே அவரின் பிளான் தமிழ்நாடு அரசியலில் பலருக்கும் தெரிந்துவிட்டது.
அதிமுக - பாஜக கூட்டணி சமீபத்தில் முறிந்தது. இந்த கூட்டணி முறிவிற்கு பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கள்தான் காரணமாக கூறப்பட்டது. அண்ணாமலை அதிமுகவை விமர்சனம் செய்கிறார். கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக தலைவர்களை தவறாக பேசுகிறார். அவர் பி[பேச்சுக்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதனால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று கூறிவிட்டு பாஜக கூட்டணியை அதிமுக முறித்தது.

இஸ்லாமியர்கள்; இந்தநிலையில்தான் பாஜக கூட்டணியை முறித்ததில் இருந்தே எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்கள் வாக்குகளை கவர்வதற்கான பணிகளை செய்ய தொடங்கிவிட்டார்.சமீபத்தில் தமீமுன் அன்சாரியை அவர் சந்தித்தது தொடங்கி நேற்று ஒவைசி கட்சியினரை அவர் சந்தித்தது வரை எல்லாமே இஸ்லாமிய வாக்குகளை கவரத்தான். அதிமுக - திமுக இடையே வெற்றி வேறுபாடாக சமீபத்திய தேர்தல்களில் இருந்தது என்னவோ இஸ்லாமிய உள்ளிட்ட சிறுபான்மையின வாக்குகள்தான்.
( திமுக "பல்லை" பிடுங்க நினைத்து! சொந்த முதுகில் சூடு வைத்துக்கொண்ட எடப்பாடி! கோவையே எதிரா போயிடுச்சே)
இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டில் 14-15 சதவிகிதம் உள்ளன. இதில் கணக்கு வைத்து பார்த்தால் 5 சதவிகிதம் கூட அதிமுக பாஜக கூட்டணியில் இருந்த போது வென்று இருக்காது. இந்த 15 சதவிகித வாக்குகள்தான் அதிமுகவிற்கு பெரிய அளவில் இடியாக இருந்து வந்தது. இந்த 15 சதவிகித வாக்குகளை குறி வைத்துதான் எடப்பாடி பழனிசாமி இந்த வாக்குகளை குறி வைத்துதான் தற்போது காய்களை நகர்த்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக 15 சதவிகிதத்தில் 8-9 சதவிகிதத்தை எப்படியாவது தூக்க வேண்டும் என்பதே அவரின் திட்டம் என்கிறார்கள்.
திட்டம் என்ன?: அதன்படி இஸ்லாமியர்களை முதலில் சந்தித்து பேச வேண்டும். பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்பதை தமிழ்நாடு முழுக்க கொண்டு செயல் வேண்டும். பாஜகவுடன் இருந்த நாட்களில் செய்த நடவடிக்கைகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும். இதைத்தான் தற்போது எடப்பாடி பழனிசாமி செய்ய தொடங்கி உள்ளாராம். சமீபத்தில் கூட.. பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்தோம். கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு சிஏஏவை ஆதரித்தோம். வேறு வழியில்லாமல் சிஏஏவை ஆதரித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.

அதோடு நிற்காமல், சிறையில் 30 ஆண்டுகளாக இருந்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவு கீழ் தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் விதி உள்ளது. ஆனால் இவர்களுக்கு அந்த சலுகை வழங்கப்படாமல் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 35 இஸ்லாமிய ஆயுள் தண்டனை கைதி பல காலமாக சிறையில் உள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகள் இப்படி சிறையிலேயே காலம் கழிப்பது தவறு என்று அவர் பேசி உள்ளார்.
இஸ்லாமியர்கள் டார்கெட் - திமுக பதிலடி: இப்படி இஸ்லாமியர்கள் பற்றி பேசி திமுகவின் வாக்கு வங்கிக்கு வேட்டு வைக்க எடப்பாடி தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் மூவிற்கு திமுகவும் பதில் அளிக்க உள்ளதாம். பாஜகவுடன் எடப்பாடி இப்போதும் மறைமுக உறவில் இருக்கிறார், தேர்தலுக்கு பின் சேருவார் என்று பேசி பிரச்சாரம் செய்வது, எடப்பாடி மோடியை விமர்சனம் செய்ய முடியுமா என்று கேட்பது.. பாஜகவுடன் இருந்த போது எடப்பாடி ஆதரித்த மசோதாக்களை பற்றி மக்களிடம் கொண்டு செல்வது போன்ற பதிலடியை கொடுக்க திமுக முயன்று வருகிறதாம்.
என்னதான் நடந்தாலும் மோடியை எடப்பாடி எதிர்த்து பேச மாட்டார். அப்படி பேசினால்.. அவருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க ஆளுநர் ரவி அனுமதி கொடுப்பார். ஆளுநர் அனுமதி கொடுத்தால் எடப்பாடி மீது ஆக்சன் எடுக்கலாம். இல்லையென்றால்.. பாருங்க மோடியை எடப்பாடி எதிர்க்கவில்லை என்று இஸ்லாமியரிடம் கூறியே அவரின் முகமூடியை கிழிக்கலாம். இரண்டில் எது நடந்தாலும் சந்தோசம்தான் என்று ஒரே கல்லில் 2 மான்கள் குஷியில் இருக்கிறதாம் திமுக!
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications