திமுக "பல்லை" பிடுங்க நினைத்து! சொந்த முதுகில் சூடு வைத்துக்கொண்ட எடப்பாடி! கோவையே எதிரா போயிடுச்சே
கோயம்புத்தூர்; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக #கோவை_மன்னிக்காது என்ற டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
சிறையில் 30 ஆண்டுகளாக இருந்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவு கீழ் தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் விதி உள்ளது. ஆனால் இவர்களுக்கு அந்த சலுகை வழங்கப்படாமல் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 35 இஸ்லாமிய ஆயுள் தண்டனை கைதி பல காலமாக சிறையில் உள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகள் இப்படி சிறையிலேயே காலம் கழிப்பது கடுமையான விவாதங்கள், கோரிக்கைகள் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இவர்களுக்கு நீண்டநாள் விடுப்பு பரோலும் கொடுக்கப்படவில்லை. 1998ம் ஆண்டு பிப்.14 அன்று, கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் பலியாகினர். இதில் தொடர்புடைய 35 பேர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. கோவையில் நடைபெற்ற மிகப்பெரிய குண்டுவெடிப்பு இது. 18 இடங்களில் மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டு அடுத்தடுத்து இங்கே குண்டு வெடிப்புகள் நடந்தன.

எடப்பாடி கோரிக்கை: பெண்கள், குழந்தைகள் உட்பட 58 பேர் உடல் சிதறி பரிதாபமாக இந்த குண்டு வெடிப்பில் பலியாகினர். இப்படிப்பட்ட நிலையில் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். பாஜக கூட்டணியை முறித்துள்ள நிலையில் இஸ்லாமியர்களை கவர எடப்பாடி முயன்று வருகிறார். திமுகவின் முக்கியமான வாக்கு வங்கி இஸ்லாமிய வாக்கு வங்கி. அந்த பல்லை பிடுங்க வேண்டும் என்று எடப்பாடி கடந்த சில நாட்களாக காய் நகர்த்தி வருகிறார்.
( ரகசிய தூது.. டாப் சீக்ரெட் மீட்டிங்ஸ்.. வேலையை தொடங்கிய எடப்பாடி! திமுக அஸ்திவாரத்தை அசைத்த ஒரு கால்)
அந்த வகையில்தான் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இஸ்லாமிய அமைப்புகள் நன்றிகளை தெரிவித்து வருகின்றன. அதன்படி சிறையில் 30 ஆண்டுகளாக இருந்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றப் பேரைவையில் குரல் எழுப்பியதற்காகவும்; கழகம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியதற்காகவும், எடப்பாடியை அகில இந்திய மஜ்லிஸ் - ஏ - இத்திஹாதுல் முஸ்லிமின் கட்சியின் தேசிய தலைவர் அசாதுத்தீன் உவைசி, சார்பாக, மாநில தலைவர் T.S. வக்கீல் அஹமத் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து, பூங்கொத்து வழங்கினார்.

கோவை கோபம்: ஆனால் இஸ்லாமியர்களை கவர போய் அதிமுகவின் கோட்டையான கோவையில் எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே சூடு வைத்துக்கொண்டு உள்ளார். அவரின் கோரிக்கையால் கோவையில் பலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிரெண்ட் செய்து வருகின்றனர். கோவை மன்னிக்காது என்ற டேக்கின் கீழ் இந்த போஸ்டுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஓட்டுக்காக சீமான், அதிமுக எல்லாரும் தீவிரவாதிகளை விடுதலை செய்யணும்னு போராடுறாங்க , 58 உயிர் பலி , 200 பேர் படுகாயம் அடைந்த அந்த மக்களின் பக்கம் யாரும் இல்லை. இவர்களுக்கா விடுதலை இதற்க்கு அதிமுக ஆதரவு! ! திடீர் பழனிசாமியின் திடீர் பாசம்! பல மக்களுக்கு கை கால் இழந்தனர்..பலர் உயிர் துறந்தனர்...இதை செய்த நபர்களுக்குத்தான் எடப்பாடி பழனிச்சாமி வக்காலத்து வாங்குராரு என்று நெட்டிசன்கள் பலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக விமர்சனம் வைத்து வருகின்றனர்.
-
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
குட்டி பெங்களூராக மாறி வரும் கோயம்புத்தூர்.. ஒரே நேரத்தில் 41 ஐடி பார்க்.. இதெல்லாம் வேறலெவல் சம்பவம்! -
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி வழக்கு.. குற்றவாளிகள் மீது பாய்ந்த ஆக்ஷன்! பரபரப்பான கோவை! -
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications