ரகசிய தூது.. டாப் சீக்ரெட் மீட்டிங்ஸ்.. வேலையை தொடங்கிய எடப்பாடி! திமுக அஸ்திவாரத்தை அசைத்த ஒரு கால்
சென்னை: திமுகவின் அஸ்திவாரத்தை ஆட வைக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி புதிய கூட்டணி கணக்குகளை போட்டு வருகிறாராம். முக்கியமாக அவர் செய்த போன் கால் ஒன்று தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது.
இஸ்லாமியர்கள் எதிர்பார்த்தது போல இந்த கூட்டணி முறிந்துவிட்டது. இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.

புதிய கூட்டணி: அதேபோல் 2024 லோக்சபா தேர்தல் புதிய கூட்டணி அமைப்போம் என்றும் கூறியுள்ளார். அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். அந்த வகையில்தான் புதிய கூட்டணி அமைப்பதற்கான தீவிர ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறாராம். அதன் ஒரு கட்டமாக பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு போன் செய்து பேசி வருகிறாராம்.
( லேட்டஸ்ட் செய்தி இதுதான்.. "அவங்களையே" தூக்கி எறிய போகும் எடப்பாடி.. ஸ்டாலின் பி டீமா? அலறிய அதிமுக)
தற்போது கூட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சென்னையில் உள்ள தனியார் சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து போன் மூலம் நலம் விசாரித்து வருகின்றனர்.
அதன்படி சமீபத்தில் திருமவளவனிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார். அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளுக்கும், மக்கள் பணிகளுக்கும் திரும்பும்படி பணித்தார். போதிய ஓய்வு எடுத்துவிட்டு வரும்படி அவரிடம் குறிப்பிட்டார்.

முக்கிய போன் கால்: இந்த போன் காலின் போதே திமுக கூட்டணி கட்சிகளை தன் பக்கம் இழுக்க எடப்பாடி முயன்று வருகிறார் என்று கூறப்பட்டது. அந்த வகையில் முக்கியமான தலைவர் ஒருவருக்கு எடப்பாடி பழனிச்சாமி போன் செய்து தங்கள் கூட்டணிக்கு வரும்படி அழைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சி ஒன்றிற்கு போன் செய்து தங்கள் பக்கம் வரும்படி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
( பாஜக + பாமக.. தமிழ்நாடு அரசியலே மாறப்போகுது.. அதிமுகவிற்கு பேரிடியாக மாறிய செய்தி.. போச்சே)
முக்கியமாக 2024 லோக்சபா தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுக்காது. கடந்த தேர்தலில் கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் தரப்பட்டது. விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அதை காங்கிரஸ் 6-7 இடங்கள் என்று குறைக்க திமுக முடிவு செய்துள்ளது. அதேபோல் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 1 இடம் என்ற அளவில் குறைக்க முடிவு செய்துள்ளனர்.

இதனால் கூட்டணி கட்சிகள் அப்செட் ஆகும் வாய்ப்பு உள்ளது. இதனால் கூட்டணியில் மோதல் கூட ஏற்படலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் அதை பயன்படுத்தி அதிமுக .. திமுக கூட்டணியை உடைத்து.. அதில் இருந்து விசிக , கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்யலாம் என்கிறார்கள்.
அந்த வகையில்தான் தற்போது அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் கூட்டணி தலைகளுக்கு போன் போட்டு பேசி வருவதாக கூறப்படுகிறது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications