லேட்டஸ்ட் செய்தி இதுதான்.. "அவங்களையே" தூக்கி எறிய போகும் எடப்பாடி.. ஸ்டாலின் பி டீமா? அலறிய அதிமுக
சென்னை: எடப்பாடி தன்னுடன் நெருக்கமாக இருக்கும் நபர்களை தூக்கி எறிய போகிறார். அவர்களை விரைவில் தூக்கி எறிய போகிறார். லேட்டஸ்ட் செய்தி ஒன்றையும் சொல்கிறேன். திமுகவிற்கு பி டீம் எடப்பாடி பழனிசாமிதான், என்று ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி சமீபத்தில் முறிந்தது. இந்த கூட்டணி முறிவு பற்றி எடப்பாடி பழனிச்சாமி தொடக்கத்தில் எதுவும் பேசவில்லை. ஆனால் அதன்பின் மௌனம் கலைத்த எடப்பாடி பழனிசாமி.. கூட்டணியை அதிமுக உடைத்தது. அதிமுக தொண்டர்கள் உடைத்தனர். இந்த கூட்டணி உடைக்கும் முடிவு தொண்டர்களுடையது. அவர்கள்தான் கூட்டணியை உடைக்க உத்தரவிட்டனர். தொண்டர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து இந்த முடிவை எடுத்தோம். அதோடு 2024 லோக்சபா தேர்தலில் இனியும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. இனி கூட்டணி இல்லாமலே தொடருவோம், என்று கூறினார்.
எடப்பாடியின் இந்த முடிவு காரணமாக உட்கட்சி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி கூட்டணி முறிவால் அதிமுக - பாஜக விழி பிதுங்க அதிமுக உள்ளேயே உட்கட்சி மொத்தம் ஏற்பட்டு உள்ளதாம். அதிமுகவில் இருக்கும் விஐபி மாஜி ஒருவர். எடப்பாடி கூட்டணியை உடைத்ததால் கடுப்பில் இருக்கிறாராம். கட்சியை உடைக்கும் திட்டத்தில் கூட அவர் இருப்பதாக செய்திகள் வருகின்றன.

பேட்டி: இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியின் முடிவிற்கு என்ன காரணம் என்று ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் . அதில், தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் காலம் உள்ளது. நான் சொல்வதெல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி சசிகலாவை மறந்தார், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த ஓ பன்னீர்செல்வத்தை மறந்தார்.. தற்போது இப்போது பிரதமர் மோடியை மறந்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி ஏன் அதிமுக - பாஜக கூட்டணியை முறித்தார் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. கூட்டணி பிரச்சனைதான் காரணமா? அண்ணாமலை தலைவர் பதவிதான் ? காரணமா என்று சொல்லவில்லை.
எடப்பாடியை இங்கே பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை. அதை பாஜக அறிவிக்கவில்லை. 2024ல் எங்கள் ஆதரவு உங்களுக்கு வேண்டும் என்றால்.. 2026ல் எங்களை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதை ஏற்றுக்கொள்ளவில்லை. டெல்லி அதை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை முறித்துக்கொண்டார்., இவரே தன்னை புகழ்ந்து பேசிக்கொள்ள வேண்டியதுதான். இவரே தன்னை பெரிய தலைவராக சொல்லிக்க வேண்டியதுதான்.
( எம்ஜிஆர் 2.0.. அமித் ஷாவிடம் தந்த உறுதி! விஜயை பாஜக கூட்டணியில் சேர்க்க முடிவு? போனை போடும் அண்ணாமலை)
எடப்பாடி பழனிசாமி 4 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்துள்ளார். இதில் இருந்து தன்னை கட்சி காக்கும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி ரெடியாகி இருக்கிறார். எடப்பாடி தன்னுடன் நெருக்கமாக இருக்கும் நபர்களை தூக்கி எறிய போகிறார். அவர்களை விரைவில் தூக்கி எறிய போகிறார். லேட்டஸ்ட் செய்தி ஒன்றையும் சொல்கிறேன். திமுகவிற்கு பி டீம் எடப்பாடி பழனிசாமிதான். மோடி வரக்கூடாது என்பதற்காக இவர்கள் டீம் போட்டு செயல்படுகிறார்கள். 2024ல் பாஜக வரக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்கிறார் .

மோடி வந்தால் அதிமுகவிற்கு பிரஷர் என்று இப்படி எடப்பாடி செய்கிறார். நாம் இந்த தேர்தலில் சமாதானமாகி சென்று விடலாம். 2024 தேர்தல் எனக்கு முக்கியம் இல்லை. 2026 தேர்தல்தான் முக்கியம் என்று ஸ்டாலினுடன் எடப்பாடி இணக்கமாக சென்றுள்ளார். மோடியை மத்தியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி இப்படி முடிவை எடுத்துள்ளார். பாஜகவிடம் இருந்து அதிமுகவை பிரித்து செல்ல வேண்டும் என்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளார், என்று ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications