ஹவுஸ் லோன், ஆட்டோமொபைல் லோன் இருக்கிறதா? உடனே இதை பண்ணுங்க.. இஎம்ஐ ஒரே அடியாக குறையும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை குறைத்தாலும் கூட இன்னும் வங்கிகள் அதை அமல்படுத்தவில்லை. இதை வாடிக்கையாளர்கள்தான் நேரடியாக வங்கிகளிடம் கேட்டு பெற வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இந்த நடவடிக்கை புதிய வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகள் இந்த குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினால், அவர்களின் மாதாந்திர EMI குறையும் வாய்ப்புள்ளது.

இந்த வட்டி விகித மாற்றங்கள் ஜூன் மாதம் செய்யப்பட்டாலும் ஜூலை மாதம் வசூலிக்கப்படும் இஎம்ஐயில் அமலுக்கு வரும்.

How do decrease your EMI and Tenure for your Loans after the Repo Rate cut by RBI

ஆனால் பல நிறுவனங்கள் இதுவரை இந்த மாற்றங்களுக்கான சார்ட்டை வெளியிட்டாலும் கடனாளிகளுக்கு அதை நோட்டிப்பை செய்யவில்லை. அதாவது கடனாளிகள் இந்த மாற்றம் காரணமாக இஎம்ஐ அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் ஒன்றை குறைத்துக்கொள்ள முடியும். ஆனால் வங்கிகள் இதில் இன்னும் கடனாளிகளிடம் விருப்பத்தை கேட்கவில்லை.

கடனாளிகள் விருப்பம் இன்றி இதில் வங்கிகள் முடிவு எடுக்க கூடாது என்ற விதி உள்ளது. இந்த நிலையில் HDFC உள்ளிட்ட சில வங்கிகள் கடனாளிகளிடம் விருப்பத்தை கேட்டு இஎம்ஐ அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் ஒன்றை குறைக்க உள்ளது. ஆனால் சில வங்கிகள் குறைக்கவில்லை. உங்கள் வங்கி இஎம்ஐ அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் ஒன்றை குறைக்காத பட்சத்தில் நீங்கள் உங்கள் கிளையில் ஒரு கடிதம் எழுதி இரண்டில் ஒன்றை.. உங்களுக்கு விருப்பமான ஒன்றை குறைக்கும்படி கூற வேண்டும்.

வீட்டுக் கடன் EMI-யில் எவ்வளவு குறையும்?

ஒரு கடன் வாங்குபவர் 20 வருட காலத்திற்கு ₹50 லட்சம் கடன் எடுத்திருந்தால், மாதாந்திர வீட்டுக் கடன் EMI சுமார் ₹2,000 வரை குறையும். நீங்கள் ₹50 லட்சம் கடனை 20 வருடங்களுக்கு எடுத்திருந்தால், மாதாந்திர EMI-யில் சுமார் ₹1,960 வரை சேமிக்க முடியும். கடனின் ஆயுட்காலத்தில் சுமார் ₹4.7 லட்சம் வரை சேமிக்க முடியும்.

₹30 லட்சம் கடனை 20 வருடங்களுக்கு எடுத்த வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு, மாத EMI-யில் சுமார் ₹1,176 குறையும். மேலும், கடன் வாங்குபவர்கள் தங்கள் EMI-களைக் குறைக்கலாம் அல்லது தற்போதுள்ள EMI தொகையைத் தொடர்ந்து செலுத்தி கடனின் tenure அதாவது காலத்தை குறைக்கலாம். இதன் மூலம் அதிக வட்டி சேமிக்க முடியும்.

ரிசர்வ் வங்கி பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. எனவே, 2025 ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது (25 + 25 + 50). இதன் பொருள், சமீபத்திய காலாண்டுகளில் வீடு வாங்கும் முடிவை தாமதப்படுத்தியவர்கள், இப்போது தங்கள் கனவு இல்லத்தை வாங்க ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அவர்கள் ₹50 லட்சம் வீட்டுக் கடனுக்கு மாத EMI-யில் சுமார் ₹3,800 முதல் ₹4,000 வரை நிவாரணம் பெறுவார்கள்.

ரிசர்வ் வங்கியின் இந்த ரெப்போ விகித குறைப்பு, வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. EMI தொகையில் கணிசமான அளவு குறையும் என்பதால் வீடு வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு இது ஒரு சாதகமான நேரமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+